மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்பு குழந்தைகளே,
பரீட்சை எல்லாம் நன்றாக எழுது இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதன் பின் லீவு நாட்கள் வந்து விடும். அப்போது மஜாதான். காலையிலும் விளையாட்டு, மாலையிலும் விளையாட்டு, பின் டி.வி., சிறு வாக்குவாதங்கள் என்று நாள் போகும். இங்கு தான் சிறு மாறுதல் வேண்டும். குழந்தைகளே, இவ்வளவு நாள் உங்கள் பெற்றோர் நீங்கள் பரீட்சைக்குப் படிக்கும் போது கூட இருந்து எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்? நீங்கள் இப்போது உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்து சந்தோஷப் படுத்தலாமே! ஒரு அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள் .அது சும்மா வேடிக்கைப் பார்க்க மட்டும் இல்லாமல் அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும் முக்கியமாக, காலையில் தேகப் பயிற்சி, பிராணாயாமம் இடம் பெற வேண்டும். நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும். படிக்கும் புத்தகங்களும் நல்ல அறிவு வளர்க்கும் புத்த்கங்களாக் இருக்க வேண்டும். ஏதாவது விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற முயல வேண்டும். கடவுள் வணக்கம் காலையிலும் மாலையிலும் இடம்பெற வேண்டும். ஏதாவது ஒரு கலை கற்கலாம். வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து பலரும் காண மழலைகள் தளத்தில் வெளியிடலாம். மத்தியானம் வெயிலில் சுற்றாமல் வீட்டிலேயே கேரம், செஸ் போன்ற விளையாட்டும், அறிவு வளர்க்கும் அனிமல் ப்ளெனட் , மற்ற விக்ஞானம் போன்ற டி.வி. படைப்புகள் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம் . எதாவது ஒரு மனதுக்கு பிடித்த சம்பவம் பற்றி வியாசம் எழுதலாம், கவிதையும் செய்து பார்க்கலாம். பெரியவர்களுக்கு ஏதாவது படித்துச் சொல்லியோ அல்லது தெருவைக் கடக்க உதவியோ செய்யலாம், பணிப்பெண்ணின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிக்கொடுக்கலாம். அன்று இரவு நீங்கள் என்னென்ன நல்ல காரியம் செய்தீர்கள் என்று ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கவும். அதே போல் எந்தத் தகாத காரியம் செய்துள்ளீர்கள் என்றும் கணக்குப் போட்டுப் பார்க்கவும். பொய் பேசுதல், பிறர் பொருளை எடுத்துக் கொள்ளல், கடும் சொல் பேசி மற்றவருக்கு மன வருத்தம் கொடுத்தல் என்பது பட்டியலில் வராது பார்த்துக் கொள்ளவேண்டும். பின் என்ன நீங்கள் ஒரு ideal student, அதாவது ஒரு சிறந்த மாணவனாகப் புகழ் அடைவீர்கள். இந்த லீவு நாட்களில் சுற்றுலா மிகவும் முக்கியமாகக் கருதப்பட வேண்டும். அதைப் பற்றிப் பிறகு சொல்ல்கிறேன். சுற்றுலா போக ரயில் வண்டி தான் சிறந்தது. நன்கு வேடிக்கை பார்த்தும், இயற்கையை ரசித்து கொண்டும் போகலாம். அதற்கான ரயில் பாட்டு ராமூ பாடுகிறான், பார்க்கலாமா? அன்புடன் அம்மம்மா விசாலம் திரும்ப எப்போது வரலாம் ?
அதோ பாரம்மா ஜுக் ஜுக் ரயில்
அதோ ஓடுகிறது கம்பங்கள் எதிர்புறம்வேகம் குறைந்து நிற்பதும் ஒரு ஸ்டைல் ஸ்டேஷனுக்குள் மெள்ள வந்தது, பார்க்க என் மன்ம் பரவசமானது பலர் இறங்க மூட்டையுடன் பலர் ஏற "இட்லி, வடை, காபி என்ற கூவல் சேர பார்த்து மகிழ்ந்தேன், அம்மாவின் கைப் பிடித்தேன் பெட்டிகளைக் கூலி தூக்க, பரபரவென்று ஏறினேன் என் இடத்தைத் தேடினேன், சன்னல் சீட்டில் ஜம்னு அமர கூவென்று கூவி ரயிலும் கிள்ம்ப, எங்கும் பரபரப்பு தூள் கிளப்ப, கையை ஆட்டி "டாடா " காட்ட என் அப்பாவும் பதிலுக்கு ஆட்ட, மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது ஸ்டேஷனும் கண்ணின்று மறைந்தது,
விரைவு வண்டியின் வேகம் அதிகம் வளைந்து ஓடும் நதிகள் ஒருபுறம், முக்கோண வடிவில் தொடர் மலைகள் தூர விளையாடும் சிறு பசங்கள் அதோ மலைக்குள் சூரியன் மறைகிறான் செவ்வானத்தை ஒளிமயமாய் ஆக்குகிறான், பசும் வயலில் ஆடும் கதிர்கள் உழுது களைத்த காளைகள், திடீரென்று ஒரு விசில் மனதுக்குள் புகுந்தது ஒரு திகில் மெதுவாக வந்தது ஒரு மாதிரிப் புகை உடனே வந்தது ஒரு குகை
முதல் வகுப்பு என்ற 'குளுகுளு' வில் அன்புடன் அம்மம்மா |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |