மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்புக் குழந்தைகளே,
தமிழ்ப் புத்தாண்டு அல்லது வருஷப்பிறப்பு ஏபரல் 14 அன்று ஸர்வஜித் என்ற பெயரில் வருகிறது, இந்த நாளில்தான் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் போகிறான். தெலுங்கு, கன்னடம், மராட்டி, கொங்கணி போன்ற பாஷை பேசுபவர்களுக்கு சில நாட்கள் முன்னதாகவே வருடப் பிறப்பு வந்து விடுகிறது, இதை அவர்கள் யுகாதி என்கின்றனர், இநத நன்னாளிலேதான் ஸ்ரீ பிரும்மன் சிருஷ்டியைப் படைக்க ஆரம்பித்தார். இந்தப் புத்தாண்டை இந்தியாவைத் தவிர சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, ஸ்ரீலங்கா போன்ற நாட்டு மக்களும் கொண்டாடுகின்றனர்.
இதை ஜோதிட வல்லுனர்கள் மற்றும் பூஜாரிகள் வினாடி, நிமிடம், மணி என்று கணக்குப் பார்த்து எப்போது சூரியன் மேஷத்திற்கு வருவான் என்று கண்டுபிடித்துப் பின் பஞ்சாங்கம் என்ற நாள் குறிப்பேட்டில் எழுதி வைப்பார்கள். அதன்படி சில சமயம் இது ஏப்ரல் 13ம் தேதி வரும், சில சமயம் ஏப்ரல்14ம் தேதியில் வரும். இந்த நன்னாளில் காலையில் எழுந்து ஸ்னானம் செய்து, புத்தாடைகள் உடுத்திப் பின் கோவிலுக்கும் போவர்கள். இன்று வடை, பாயசம், இவற்றுடன் கூட ஒரு விதமான மாங்காய்ப் பச்சடியும் இருக்கும். இதில் வேப்பம்பூ, வெல்லம், புளி, மாங்காய், மிளகாய் என்று கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, தித்திப்பு என்றுப் பலவிதச் சுவைகளுடன் கூடி இருக்கும். இது எதற்கு என்றால் நம் வாழ்க்கையிலும் தித்திப்பான சம்பவங்கள், கசப்பான சம்பவங்கள், திடுக்கிடும் செய்திகள், புளித்துப்போன விஷயங்கள் என்று பல வந்தாலும் மன பலம் கொண்டு அதை வெற்றிக் கொள்ள வேண்டும், வாழ்க்கை என்பது பலவிதமான ருசிகளுடன் இருக்கும் என்று காட்டத்தான் இந்தப் பச்சடி.
அஸாமில் பிஹூ என்று இதை அழைக்கின்றனர் நாட்டுப் பாடல் பாடி நடனமும் ஆடுகின்றனர் "பிதா" என்ற இனிப்பைத் தயாரிக்கின்றனர். அவர்கள் உடைகளும் பலவித வர்ணங்கள் கொண்டதாக இருக்கின்றன. "பிஹுதோலீஸ்" என்ற நடனத்தில் பெரிய வாத்திய பைப் [bugle}, சங்கு, பெரிய டோல் வார்பைப் {தாரை டமட்டை } இவற்றைக் கொண்டு பாட்டு முழங்க நடனம் களை கட்டும். மொத்தத்தில் கொண்டாடுவது சிறிது வித்தியாசப் பட்டாலும் வசந்த ருதுவை வரவேற்று அறுவைடை முடிந்து புது நிலத்தில் விதை விதைக்கும் நாளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர். எல்லோருக்கும் என் அன்பு கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |