மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

தகர டப்பா கார்

இணையப் பாட்டி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
An article with poem on old car - picture drawn by mazalais kid T. Swaminathan
அன்புக் குழந்தைகளே,

உங்களில் அனேகருக்கு நல்லபடியாகப் பரீட்சை முடிவடைந்திருக்கும். இனிமேல் ஜாலியாகப் பொழுதைப் போக்குவீர்கள். சிலர் இரண்டு சக்கர வண்டி ஓட்டப் பழகிக்கொள்வார்கள், சிலர் அதை மிகவும் வேகமாக ஓட்டுவதில் ஆனந்தம் அடைவார்கள், மற்றும் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் பைக்கில் ஏறி அதை ஓட்ட முயற்சி செய்வார்கள், அவர்கள் வயதோ அதை ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்காது. இதனால் எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இரண்டாவதாக, சில சிறுவர்கள் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்கள். உத்சாகத்தில் ரன் எடுக்க ஆசை, ஆகையால் மட்டையைத் தூக்கி அடிக்க, எதிர் வீட்டுக் கண்ணாடி சன்னல் உடைய, பின் என்ன? ஒரே அமர்க்களம் தான், சிறுவர் சண்டை பெரியவர்கள் சண்டையாகி, அதனால் கோபம், மன வருத்தம் எல்லாம் உண்டாகி விடுகிறது. ஆகையால் பெரிய மைதானம் பொன்ற இடத்தில் தான் இது போன்று விளையாட வேண்டும். வெயில் கடுமையில் வெளியில் சுற்றாமல் வீட்டின் உள்ளேயே சமயத்தை விரயம் செய்யாமல் உபயோகிக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு விபத்தில் மாட்டிய கார் வீணாகத் தூசி படிந்து நின்றுகொண்டிருந்தது. அதை மிக்வும் துறுதுறுப்பான ராமு என்ன செய்தான்? கீழே கவிதை சொல்கிறது.

தகர டப்பா கார்

எங்க வீட்டு மாருதி கார் ஒன்று,
விபத்தில் வேகமாய் மோதி நின்று,
முகமும் ஒரே சப்பையாகி
பரிதாபமான தோற்றமாகி,
வீட்டின் முன் புறம் நின்றது,
தூசி படிந்து அழுதது.

எங்கள் விட்டு சுட்டிப் பிள்ளை,
ராமு ,,, அவனுக்குப் படு மூளை,
குழந்தைகளுக்கு ஒரு கார் ஆக்கி,
ஓடவைத்தான், உருப்பிடியாக்கி.

பெட்ரோல் இல்லை, செலவும் இல்லை
தள்ளத் தள்ள ஒட்டம் பிடிக்கும்
ஒரு நாள் ஒலித்தது அவன் குரல்,
"வாருங்கள், காரை ஓட்டலாம்,
உதசாகமாகப் பாடலாம்".

விழுந்தது அழைப்பு பலர் காதில்,
கிட்டு வந்தான் கமலி வந்தாள்,
ராமு வந்தான், ராதா வந்தாள்,
"பீம் பீம்" என்ற சத்தம் வந்தது,
காரைப் பலர் பலத்துடன் தள்ள,
அதுவும் மெள்ள ஊர்ந்தது,
அந்த ஆனந்தம் குறைந்து நிலைக்க
"டபார்" என்று டயரும் வெடித்தது.

ராமு குரல் மீண்டும் ஒலிக்க,
"தகர டப்பா காருடோய் இது
மக்கர் பண்ணி நிக்குது,
சேகர் ராதா வாருங்கள்,
சேர்ந்து தள்ளலாம் ஷெட்டுக்கு"
முக்கி முனகி யாவரும் தள்ள,
பழைய இடத்தில் வந்தது,
"போன மச்சான் திரும்பி வந்தான்,
உடைந்த டயரோட"
குழந்தைகளின் ஒலி காற்றில் மிதந்தது...

அன்புடன்

அம்மம்மா விசாலம்

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day இணையப் பாட்டி பக்கம் Happy Birthday


editor@mazhalaigal.com