மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்புக் குழந்தைகளே,
பரீக்ஷைக்கு நன்கு படித்து முடித்து விட்டிருப்பீர்கள். இப்போது நான் மேலும் சில அறிவுரைகள் சொல்கிறேன். முதலில் தேக ஆரோக்கியம் முக்கியம் இல்லையா? ஆகையால் இந்த நாட்களில் கூடிய வரை வீட்டில் செய்யும் உணவுகளையே உட்கொள்ளுங்கள். மிகுந்த எண்ணைப் பண்டமோ fast food எனப்படும் அவசர உணவு, வெளியில் விற்கும் பண்டங்களை சாப்பிடாதீர்கள். சுத்தமான குடி நீரைக் குடியுங்கள். படித்துக் கொண்டே இராமல் வெளியில் காற்றோட்டமாக சற்றே நடந்து சில தேகப் பயிற்சிகளைச் செய்யவும். மூளைக்கு சற்று ஓய்வு தேவை. அந்த நேரத்தில் சற்று நேரம் பிடித்த இசையைக் கேட்டு அனுபவியுங்கள். எவ்விதமான டென்ஷன் அல்லது பரபரப்பு வர சற்றும் இடம் கொடுக்காதீர்கள். பரீட்சைக்கு அரை மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்குப் போய் விடுங்கள். உங்கள் ஆழ்மனதில் நான் நன்கு பரீட்சை எழுதி வெற்றி பெறுவேன் என்று சொல்லிக் கொள்ளுங்க்ள். முதல் நாளிலேயே மறு நாளுக்குத் தேவையான் எல்லாப பொருளும் ரெடியாக எடுத்து வைத்தால் டென்ஷன் வராது. இப்போது பரீட்சை ஹாலில் அமர்ந்து விட்டீர்கள், வினாத் தாளும் வந்து விட்டது. ஒரு நிமிடம் மனதில் கடவுளை நினைத்துப் பிரார்த்தனைச் செய்து பின் படிக்க ஆரம்பியுங்கள். கவனமாக முதலிலிருந்து கடைசி வரை படியுங்கள். பின் அதிகமான மார்க்குள்ள கேள்விகளை எடுத்து மிகவும் நன்றாகத் தெரிந்த வினாவிற்கு விடை கொடுங்கள். எத்தனை தெவையோ அதைத் தான் எழுத வேண்டும். திரும்பத் திரும்ப எழுதியதையே எழுத வேண்டாம். பின் 5 மார்க் வினாக்கள் பின் 2 மார்க், பின் ஒரு மார்க் என்று எளிதாக முடித்து விடலாம். மணியைப் பார்த்து விடைகளை முடிக்க வேண்டும். கணக்கில் rough work பரிசோதிக்கும் தாள் தனியாக வைத்து அதற்கு சரியாக நம்பர் போட வேண்டும். பின் அதையும் கணக்கு விடைத்தாளுடன் சேர்த்துக் கொடுக்கவும். கடைசியில் திரும்ப சரிபார்க்க ஒரு பத்து நிமிடம் அவகாசம் தேவை. காபி அடிப்பது, ஊஹூம், அதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம் நேர்மைக்குப் பரிசு எப்போதும் உண்டு, அதே போல் பிறர் காப்பி அடிக்க நீங்கள் உதவவும் கூடாது. இதற்கு ஒரு கதை: ஒரு தடவை காந்தீஜி படிக்கும் பள்ளிக்குக் கல்வி அதிகாரி வந்திருந்தார். இவருடைய வகுப்புக்கும் வந்தார். அப்போது ஆங்கிலப் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் ஆங்கிலத்தில் சொற்கள் டிக்டேஷன் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ஒரு சொல் கெட்டில் kettle. அதை காந்தீஜி தவறாக எழுதினார், ஒரு பிழை இருந்தது. ஆசிரியர் நடந்துகொண்டு வந்த வேளையில் தற்செயலாய் அந்தப் பிழையைப் பார்த்தார். உடனே ஆசிரியர் செய்கையினால் விடையை அடுத்த மாணவனைப் பார்த்து எழுதத் தூண்டினார். ஆனால் மோஹன் என்ற காந்தீஜி அவர் சொன்னபடிச் செய்யவில்லை. ஆனாலும் ஆசிரியர் மீது மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவும் இல்லை. அதைப் பிறரிடம் சொல்லவும் இல்லை. எவ்வளவு நல்ல குணம் பாருங்கள். நிங்களும் அந்தப் பாதையைக் கடைப்பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை என்க்கு உண்டு. பரீட்சை முடிந்த பின் நீங்கள் உத்தேசமாக எத்தனை நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஹாலிலிருந்து உங்களது எல்லாப் பொருட்களையும் மறக்காமல் திரும்ப எடுத்து வாருங்கள் உங்களுக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள், அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |