மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
குடியரசுஅன்புக் குழந்தைகளே,
பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாகக் கழிந்ததா? கரும்பு போல் இனித்தது இல்லையா? இப்போது நம் தேச விடுமுறையான குடியரசு தினத்தைப் பற்றிப் பார்க்கலாமே. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நம் நாடு சுதந்திரம் பெற்றது, ஆனால் 26 ஜனவரி 1950 அன்று தான் முழு சுதந்திரம் அடைந்தோம். அதாவது சுதந்திரம் அடைந்த பின் அதைக் காக்க ஒரு சட்டம், நீதி, நேர்மை, பாதுகாப்பு எல்லாம் வேண்டுமே.
அத்தகைய சட்டம் அடங்கிய புத்தகத்தை இந்தியவிற்கு ஏற்றவாறு எழுத வேண்டியிருந்தது, ஏன் என்றால் இந்தியா பல மதங்கள், பல சாதிகள், பல மொழிகள் பேசும் நாடு. அதனால் மிகவும் கவனாமாகவும் பொறுமையாகவும் நம் நாட்டிற்கு ஒத்துவரும்படி சட்டப்புத்தகம் தயார் செய்ய வேண்டி இருந்தது. இதற்கென்று பல நாடுகளுக்குப் போய், பல சட்ட விவரங்கள் படித்து, பின் நமக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு அதை அமைத்தார்கள். இதை ஆங்கிலத்தில் constitution என்பார்கள். இதை எப்படி விளக்கலாம் என்றால், நீங்கள் பள்ளிக்குப் போகிறீர்கள், அப்பொழுது அங்கு மணி அடிக்கும் முன் வரை பேசலாம், ஓடலாம், விளையாடலாம். ஆனால் மணி அடித்த பின் கப்சுப்தான். அதன்பின் நீங்கள் அமைதியாக அசெம்பளியில் கூடி, பிரார்தனை செய்த பின் வகுப்பில் நுழைகிறீகள். அங்கும் சட்டத்திற்கு உட்பட்டு படிப்பு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் எப்படி? ஆம், பள்ளி அமைக்கும் போது ஒரு குழு அமைத்து, சட்டங்கள் எழுதி, அதை மீறினால் என்ன தண்டனை என்றும் எழுதி விடுகிறார்கள். எது செய்யலாம் எது செய்யக் கூடாது? என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு விடுகிறார்கள்.
சீருடை, பணம் குறிப்பிட்ட சமயத்திற்குள் கட்டுதல், பள்ளிக்கு நேரத்தில் வருதல் எனபது போல் அமைகின்றன. இவைகளைக் கடைப் பிடித்தால் பள்ளி நல்ல பெயர் எடுத்து மேலும் வளருகிறது. இதே போல் நமது நாட்டிற்கும் சட்டங்களும், அதை மீறினால் தண்டனைகளும் எழுதப் பட்டிருக்கின்றன. சுதந்திரம் என்றால் அதை நாம் நம் இஷ்டப்படி உபயோகிக்கக்கூடாது, பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும். நாம் கண்டபடி அதை உபயோகித்தால் நாடு கெட்டு விடும் ஆகையால் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், தங்கள் மதங்களை ஆதரிக்கும் சுதந்திரம் என்று எழுதி வைத்துள்ளனர். மீறினால் என்ன தண்டணை தரவேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. இநதக் குடியரசு தினத்தை 26 ஜனவரி 1950ஆம் வருடம் தேர்ந்து எடுத்தார்கள்.
இப்போது குடியரசு தினம் பற்றி ஒரு கவிதை
ஆனந்தக் காட்சி
ஆங்கில ஆதிக்கம் கீழ் ஒரு ஐநூறு ஆண்டுகள், அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |