மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
ஆயர்பாடிக் கண்ணன்
அன்புக் குழந்தைகளே,
பகவத்கீதையைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அர்ஜுனன் அன்று மஹாபாரதப் போரில் "எப்படி நான் என் குடும்பத்தாருடன் போர் புரிவேன்" என்று மனம் குழம்பி, தன் காண்டீபம் என்ற வில்லைக் கீழே போட்டுவிட்ட போது கிருஷ்ண பரமாத்தமா அவருக்குத் தேர் ஓட்டும் தாசரதியாக இருந்து கீதை உபதேசம் செய்கிறார். அந்தக் கிருஷ்ணர் தன் குழநதைப் பருவத்தில் என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் பாட்டு மூலமாகப் பார்ப்போம். நீங்கள் ராகத்துடன் பாடலாம், கும்மியும் அடிக்கலாம், கோலாட்டமும் போடலாம்.
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார்மேக வண்ணனாம்; வெண்ணெய் உண்ட கண்ணனாம், மண்ணை உண்ட கண்ணனாம்; குழலினாலே மாடுகள், கூடச் செய்த கண்ணனாம்; கூட்டமாகக் கோபியர், கூட ஆடும் கண்ணனாம்; மலைக்கு நல்ல குடையென, மலையைப் பிடித்த கண்ணனாம்; பூதனையின் பால் உறிந்து, மோக்ஷம் கொடுத்த கண்ணனாம்; உரலிலே கட்டுப் பெற்று, தவழ்ந்து வந்த கண்ணனாம்; உறியில் வெண்ணையைக் குறிவைத்துண்ட, திருட்டு மாயக் கண்ணனாம்; அன்னை யசோதைக்கு வாயைக் காட்டி, அசர வைத்த கண்ணனாம்; விஸ்வரூபம் கண்ட அன்னையை, மயக்க வைத்த கண்ணனாம்; கோபஸ்த்ரீயுடன் ராஸலீலை, ஆடி வந்த கண்ணனாம்; பகளாசுரனின் மூக்கைப் பிளந்து, ![]() படே கில்லாடி வாத்யாரே நீ! இம்மாத்தூண்டு இருந்துகிட்டு இன்னா வேலை காட்டுறே! தேனுகாசுரனைச் சுழற்றி, வீசி எறிந்த கண்ணனாம்; கம்சன் அம்மான் மேலேறி, வதம் செய்த கண்ணனாம்; ஏழைக் குசேலன் தந்த அவலை, ருசித்து உண்ட கண்ணனாம், அபயம் என்ற திரௌபதிக்கு, சேலை தந்த கண்ணனாம் கீதாநாயகன் கண்ணனாம், அஷ்டமியில் அவதரித்த கண்ணனாம்; விஷ்ணு அவதாரம் கண்ணனாம், ரக்ஷிப்பவன் எங்கள் கண்ணனாம். அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |