-
திரிசங்கு சொர்க்கம்
- இணையப் பாட்டி
அப்பா எதோ கோபமாக அம்மாவிடம் கத்த, அம்மாவும் பதிலுக்குக் குரல் கொடுத்தாள். பின் தன் மகனைக்கூப்பிட்டு, "இதோ பார் உங்கப்பாவை! தினமும் ஆபீஸ்லேந்து லேட்டுத்தான். என்னைக் கடைக்கு அழைத்துப் போவதாகச் சொல்லிப் போனும் செய்தார். நான் ரெடியாக 6 மணியிலிருந்து இருக்கேன்." என்று தன் குறையைச்சொன்னார்.
"இதோ பாரடா மணி, நான் சீக்கிரம் வரேன்னுதான் சொன்னேன். ஆபீஸிலே திடீர்னு வேலை ஒன்னு வந்துடுத்து. என்ன செய்யறது? புரிஞ்சிக்க வேண்டாமா?"
இப்போது மணிக்கு அப்பாவுக்கும் சொல்ல முடியாமல் அம்மாவுக்கும் சொல்ல முடியாத நிலை. திரிசங்கு சொர்க்கம் போல் தத்தளித்தான்.
இது என்ன திரிசங்கு சொர்க்கம்? அது எங்கே இருக்கிறது? எப்படி வந்தது?
சத்தியமே பேசி அதனால் பெயரும் புகழும் பெற்ற ராஜா அரிச்சந்திரனின் தந்தைதான் ராஜா திரிசங்கு. மிகவும் நீதிநெறியுடன் ஆட்சி புரிந்து வந்தார். தான் செய்த தானங்களுக்கும் நற்காரியங்களுக்கும் தனக்கு சுவர்கமே கிடைக்கும் என நம்பினார். அடிக்கடி அவரது தந்தை, "மகனே திரிசங்கு, எப்போதும் நல்லதே நினை. நற்காரியமே செய். நீ நேராக சுவர்கத்திற்கே போவாய்" என்பார்.
இதை மனதில் வைத்துக்கொண்டு தனக்கு வயதானபடியால் தன் மகன் அரிசந்தரனுக்குப் பட்டம் கட்டிவிட்டு முடிச்சூட்டு விழாவையும் மிகச்சிற்ப்பாக நடத்திவிட்டு, தான் தன் உடலுடனேயே சொர்க்கத்திற்குப் போக எண்ணினார். இதைப்பற்றிக் கேட்க வசிஷ்ட மகரிஷியிடம் சென்றார்.
"வணங்குகிறேன் குருவே."
"நல்லாசிகள், என்னைப்பார்க்க வந்த காரணம் என்னவோ?"
"முனிவரே, நான் என் உடம்புடன் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும், தாங்கள் தான் உதவ வேண்டும்."
"திரிசங்கு, இது நடக்கக்கூடிய காரியமா? எங்கேயாவது பூலோகவாசி தன் உடலுடன் சொர்க்கம் போக முடியுமா? இது என்னால் முடியாது."
ஆனால் திரிசங்குவிற்கு மேலும் இதில் ஆசை அதிகரிக்க, பல முனிவர்களைச் சந்தித்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக விசுவாமித்ர முனிவரிடம் சென்று தன் ஆசையை வெளியிட்டார். வசிஷ்ட மகரிஷி செய்ய முடியாத ஒன்றைத் தான் செய்துக்காட்ட வேண்டும் என்று எண்ணி, தன் தவப்பயன் அத்தனையும் உபயோகித்து அவரை சொர்க்கத்திற்கு அனுப்ப எண்ணினார் விஸ்வாமித்திரர்.
"திரிசங்கு, நீ உன விருப்பமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கண்களை மூடிப் பிரார்த்தித்துக்கொள்" என்றார். அவ்ரும் அங்கனமே செய்ய, திடீரென்று ஆகாய்த்தில் பறந்து சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்றார். பூலோகத்திலிருந்து உடலுடன் திரிசங்கு வருவதைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டு தன் வச்சிராயுத்ததால் அவரைத் தாக்கினார். அந்த அடி பலமாகப்பட அதைத் தாங்க முடியாமல் பூமியை நோக்கித் தலைக்கீழே விழுந்தான் திரிசங்கு.
இதைப்பார்த்த விசுவாமிதர முனிவர், இது தன் கௌரவப்பிரச்சினை என நினைத்து, திரிசங்குவை நோக்கி, "நில் அங்கேயே" என்றார். அவரது தவ வலிமையால் திரிசங்குவும் அங்கேயே நின்றார். சொர்க்கமில்லாமல் பூலோகமுமில்லாமல் அந்தரத்தில் நின்றார். முனிவரும் தன் தவ வலிமையால் அவருக்கு அந்தரத்தில் ஒரு தனி லோகம் படைத்துக் கொடுத்தார்.
இதுதான் திரிசங்கு சொர்க்கம்!
இங்கேயும் சொல்ல முடியாமல் அங்கேயும் சொல்ல முடியாம்ல் தத்தளிப்பவர்களை இந்தப் பெய்ரில் அழைப்பார்கள்.
அன்புடன் அம்மம்மா
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















