Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என்னைப்பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
அன்னையின் வாழ்த்து
இணையப் பாட்டி





             

ஜனவரி ஒன்றாம் தேதி வருட சுபீக்ஷ தினமாகப் பாண்டிச்சேரி அன்னை கொண்டாடுவார். நானும் விடாமல் ஜனவரி ஒன்றாம் தேதி அங்குப்போய் அவரது ஆசிகளை வாங்கி வருவேன். அன்றைய தினம் கிடைக்கும் மெஸேஜ் கார்டை நம்மிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள, நமக்கு ஒரு கவசமாக அது இருக்கும்.

ஒரு தடவை ஒரு பெரிய வேனில் நாங்கள் டிசம்பர் 31 தேதி இரவு அன்னை ஆஸ்ரமத்திற்குக் கிளம்பினோம், அதில் அநேகம் பேர் பெண்கள், மூன்று ஆண்கள் மட்டும் இருந்தனர். நேரம் போகப்போக இளம் காளைகள் தங்களை மறந்து போகும் பஸ் கார் எல்லாவற்றையும் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று சொல்லியபடியே அணைக்கத் தொடங்கினர். நாங்கள் எல்லா சன்னல்களும் மூடியபடி வைத்து, அன்னையின் நாமமான, "ஆனந்தமயீ சைத்தன்யமயீ சத்யமயீ பரமே!" சொல்லிக்கொண்டு வந்தோம். முன்பு இருந்த பயம் இப்போது மனதில் ஏற்படவில்லை.

கொஞ்சம் நேரம் ஆயிற்று, 12 அடிக்க சில நிமிடங்கள் இருந்தன. அங்கு டீ குடிக்க ஓட்டுனர் நிறுத்தி இறங்க, இரண்டு பெண்களும் இறங்கினர். கூட்டமோ சந்தடியோ இல்லை, ஆனால் திடீரென்று அருகில் இருந்த ஹோட்டலிருந்து இரண்டு இளைஞர்கள் வெளியே வந்து அந்தப் பெண்ணை, "ஹாப்பி ந்யூ இயர் என்றபடி அவள் கன்னத்தைத் தடவினார்கள். அவள ஓடிவர முயற்சி செய்தபோது அவள் துபட்டாவை இழுக்க அவள் அன்னையை நினத்து அழைத்தாள்.

திடீரென்று ஒரு மூதாட்டி அங்குத்தோன்றி அந்த மாணவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து, தன் பையிலிருந்து கேக்கை வழங்கினார். அவர்களும், "தாங்க் யூ ஆன்டி என்றபடி நகர்ந்து விட்டனர். அந்தப் பெண்ணும் திரும்ப வேனுக்கு வந்து சேர்ந்தாள். எங்கள் எல்லோருக்கும் அவர் அன்னையாகவே பட்டது. அந்த மூதாட்டி அந்த நேரத்தில் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை. காலை மூன்று மணிக்கு பாண்டிசேரி ஆஸ்ரமம் போய்ச் சேர்ந்தோம். அங்கு வரிசையாகத் தெருவில் அமர வேண்டும். பல்லாயிரம் மக்கள் வரிசையாகப் பொறுமையாக அங்கு அமர்ந்து இருந்தனர்.

எங்களுக்கும் முதல் வரியிலேயே இடம் கிடைத்ததால் அங்கு அமர்ந்தோம், குளிர் அடிக்க, பனி நம் தலைமேல்தன், ஆனாலும் அன்னையைக் காண வேண்டும் என்ற எண்ணமே மனதில் இருந்ததால் அதைச் சட்டை செய்யவில்லை. 4-30க்கு உள்ளே விட ஆரம்பித்தார்கள். சமாதியின் அருகிலேயே இடம் கிடைக்க, மனம் மிகவும் மகிழ்ச்சியுற்றது. சரியாக 5 மணி, சூரிய கதிர்கள் அன்னையின் சமாதி மேல் ஒரு தங்கக்கம்பி போல் விழ, திடீரென்று அன்னையின் பியானோவின் இசை ஒலித்தது. அதைத் தொடர்ந்து அன்னையின் மதுரமான குரலில் ந்யூ இயர் மெஸேஜ்-ஐ நாம் கேட்கிறோம். அதைக் கேட்க, நான் என்னையே மறந்தேன். எங்கும் நிசப்தம், அதில் அன்னையின் குரல் மட்டும் ஆன்மாவில் ஊடுருவிப்போய் உடம்பில் தன்னையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. இதைச் சொல்லி விவரிக்க முடியாது. அனுபவிக்கத்தான் வேண்டும். இது சுமார் 30 நிமிடங்கள் நீடிக்க, பின் அன்னையின் பேச்சும் இசையும் நின்றது. அந்த இசையில் தான் எத்தனை சக்தி! மேற்கத்திய இசையாக இருந்தாலும் எதோ ஒரு சக்தி நம் மனதை ஆட்டுவைக்கிறது.

பின்னர் ஒவ்வொருவராக வெளியே வந்தோம். ப்ளெஸ்ஸிங் பாக்கட் என்று ரோஜாவின் இதழைக் காய வைத்து ஒரு சின்னக் கவரில் வைத்து, நல்லாசிகளுடன் தருகின்றனர். அந்தக் கவரில் மகரிஷி அரவிந்தரின் படமோ அல்லது அன்னையின் படமோ இருக்கும். இந்தப்படம் மிக சக்தி வாய்ந்தது. என் உடல் நிலை சரியில்லை என்றால் அந்தச் சின்ன பிளெஸ்ஸிங் கவரை என் கையில் எடுத்து வைத்துக்கொள்ள், அந்தப் பிரச்சனை தீர்வதை அனுபவித்திருக்கிறேன், எல்லாம் நம்பிகையே.

ஆனந்தமயி சைத்தன்யமயீ சத்யமயீ பரமே!

இணையப் பாட்டியின் பிற படைப்புகள்




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants