-
அன்னை சாரதாமணி
- இணையப் பாட்டி
அன்னை சாரதாமணி அவர்களுக்கு நான் எழுதும் "அவரது வாழ்க்கையை" சமர்ப்பிக்கிறேன். இது எழுத என் உடல் ஆரோக்கியமும், மனதில் தெம்பும், அவரது அருளும் வேண்டுகிறேன் எனக்கு பதில் மடல் போடமுடியாவிட்டாலும் தயவு செய்து இதைப் படித்தாவது பார்த்தால் எனக்கு மன நிறைவு ஏற்படும். டிசம்பர் 22 அவரது பிறந்த நாள்.
ஓம் சாயிராம்
ஸ்ரீ ராமகிருஷண பரமஹம்சர் பிறந்து 17 வருடங்கள் கழித்து பிறந்தவள் அன்னை சாரதா. ஏழை க்குடும்பத்தில் பிற்ந்த் அவர் தன் பெற்றோருக்கு மிக உதவியாக இருப்பார். இவர்தான் மூத்த பெண், இவருக்குக் கீழே 6 தம்பிகள் உண்டு, தங்கைகளும் உண்டு.
இடுப்பு வரை இருக்கும் தண்ணீரில் நின்று பசுக்களுக்காகp புற்களை வெட்டுவாள், வயலில் வேலை செய்யும் ஏழைகளுக்கு உணவு எடுத்துச் செல்லுவார். இதனாலே அவள் மேல் அந்தக் கிராமமே அன்பு கொண்டிருந்தது, அவ்ருக்கு என்று எது வேண்டுமனாலும் செய்யத் தயாராக இருந்தது. இவரது எளிமையான வாழ்க்கை இவர் திருமணம் ஆன பின்னும் தொடர்ந்தது. அவள் வயலில் வேலை செய்யும் போதும், வீட்டில் இருக்கும் போதும் அவளைச் சுற்றிப் பல உறவினர்கள், நண்பர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள். தெய்வமே நம்முடன் இருக்கிறதே என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.
"சாரதா, விளையாட வரயா? மணலில் வீடு கட்டலாம்"
"உஹூம், நான் வரலை"
"சரி பாண்டி விளையாடலாமா?"
"உஹூம், நான் வரலை எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நான் சும்மா அமர்ந்து பார்க்கிறேன்."
இதனால் சாரதாமணி அமர்ந்து விளையாட்டைப் பார்க்க, நடுவில் ஏதாவது சண்டை வந்தால் அதைச் சமாதானமாகத் தீர்த்து வைப்பார். மிகவும் வெகுளியாகவும் உண்மையை நேசிக்கும் பெண்ணாகவும் இருந்ததால் எல்லோரும் இவரைச் சுற்றினர். மிக அன்புடன் பழகினர்.
இவருக்கு என்று ஒரு விளையாட்டு இருந்தது. அது என்னவென்றால், களிமண்ணைப் பிசைந்து காளி, லட்சுமி பொம்மைகள் செய்து, அவற்றுக்கு வர்ணங்கள் பூசி, அவற்றை ஒரு மரத்தடியின் கீழ் வைத்துப் பின் பல பூக்களால் பூஜிப்பார். அப்போது தியானமும் செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு தடவை கோயிலில் ஜகதாத்ரி தேவியைப் பூஜை செய்து பின் தியானம் செய்து அவளையுமறியாமல் தேவியின் மடியிலேயே அமர்ந்திருந்ததை சிலர் பார்த்து வியந்தனர்.
இவர் பள்ளிக்குப் போவதை ஒருவரும் விரும்பவில்லை, எதோ ஒரிணடு வகுப்புக்கள் படித்திருக்கலாம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த தெய்வீக அன்னையை முதல் தடவையாக பார்த்தார். அதிலிருந்து அந்தப் பெணணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று மனதில் நிச்சயித்துக்கொண்டார். இதனால் அவரது போக்கிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. சிலர் அவரது மனம் பேதலித்து விட்டதோ என்றும் எண்ணினர். இந்த விஷயம் காமார்புகூரிலிருந்த அவரது தாயின் செவிக்கு எட்டியது. அவர் மனதிலும் எதவது ஒரு பெண்ணை மணம் செய்து வைத்தால் தன் மகனது மனநிலை ஒழுங்கில் வரும் என நினைத்தார். திருமணம் ஆன பின் அந்தப் பெண்ணின் அன்பாலும் சேவையினலும் தன் மகன் மாறிவிடுவான் என நினைத்தாள் அந்தத்தாய்.
ஸ்ரீ ராமகிருஷணருக்கு இதில் அவ்வளவு நாட்டம் இல்லை என்றாலும் தான் மனதில் பர்ர்த்த பெண்ணை நினைத்து, தன் தாயிடம், "அம்மா, எனக்குத் தகுந்த பெண் ஸ்ரீஜுட் ராமச்சந்தர முகோபாத்யாய்ரின் பெண் சாராதாமணி தான். அந்த இடத்தையே முடித்துவிடு." என்றார்.
தாய் சந்த்ரமணி அந்தப் பெண்ணைப் பற்றி விவரம் அறிந்தாள். தெய்வீகமான முகம், முகத்தில் சாந்தம், எல்லோருக்கும் உதவும் பண்பு, தெய்வபக்தி என்று பல அவரிடம் இருந்ததால் உடனேயே தன் மருமகளாக வர ஏற்பாடுகள் செய்துவிட்டாள். திருமணம் நடந்தது. குருவின் முன் 17 வய்து வித்தியாசத்தில் ஒர் சிறுமி! அந்த மருமகள் பின்னால் பல சிஷ்யர்களுடன் ஒரு சன்யாசினி ஆவார் என் அப்போது ஒருவரும் நினைக்கவில்லை.
தன் ஏழு வய்தில் நடந்த திருமணம் பற்றி சிலர் அவரிடம் கேட்டபொழுது, "எனக்கு ஒன்றும் புரியவில்லை, திருமணம் ஆன பின் நன் காமர்புகூர் வந்தவுடன் தோட்டத்தில் ஓடி, அங்கு கீழே விழுந்து கிடந்த பேரீச்சம்பழங்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்" என்றாராம் அத்தனைச்சின்ன வயது.
ஸ்ரீ ராமகிருஷணர் திருமணம் ஆனதும் அந்தச் சிறுமியை இங்கே விட்டுவிட்டு தான் தக்ஷினேஸ்வர் போய் விட்டார், அங்கு அவருடைய ஆன்மீகத் தேடல் தொடர்ந்தது. அன்னை காளியை தரிசிக்க அவர் மனம் விரும்பியது. தூக்கம் போயிற்று உணவைப் பற்றிய சிந்தனையும் போயிற்று. உலக விஷயங்களில் நாட்டம் இல்லை, பெண்ணை வெறுத்தார், பணத்தை வெறுத்தார், பொருட்களின் மீது பற்றை ஒழித்தார்.
இந்த நிலையில் இருந்தவரைப் பார்த்து எல்லோரும் இவருக்கு மனம் பேதலித்து விட்டதோ என பயந்தார்கள். சிலர் மூளையில் எதாவது பழுதோ என நினைத்தார்கள், பல மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள், ஆனால் ஒன்றும் பலன் இல்லை, இந்த விஷயம் மெள்ள அவரது அன்னை சந்தைரமணியின் காதிற்கு எட்டியது. ஒரு தாய்க்கு இந்தச் செய்தி எப்படி இருக்கும்? அதுவும் இப்போதுதான் திருமணம் ஆன புது மாப்பிளை! பல கோயில்களுக்குப் படையெடுத்தார், தன் மகனுக்காக பிராத்தனை செய்தார். இந்த விஷயம் சாராதாமணிக்கும் எட்டியது, ஆனால் அவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. விளையாடும் வயதில் மனைவியின் ஸ்தானம்!
அவரது 14 வயதில் அவர் தன் கணவரைப் பார்க்கப் போனார். அவரைப் பார்த்த பின் ஸ்ரீ ராமகிருஷண்ரது செயலில் சிறிது மாற்றம் தெரிய எல்லோருக்கும் மகிழ்ச்சி. அன்னை சாரதாமணிக்கு ஸ்ரீரமகிருஷணர் நிறையப் பயிற்சிகள் கற்றுக் கொடுத்தார், ஆனால் வாழ்க்கையில் ஒரு சன்யாசியாகத்தான் இருந்தார். எல்லோரையும் பிரும்மனாகவே பார்த்தார், அவரது மனைவியையும் சேர்த்துத்தான்!
தன் மனைவிக்கு ஆன்மீகம் போதிக்க ஆரம்பித்தார். அத்துடன் வீட்டுவேலைகள அப்பழுக்கில்லாமல் செய்யவும் கற்றுக் கொடுத்தார். சாரதாமணியும் தன் கணவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரது அன்பை உணர்ந்து, அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார். பிற்காலத்தில் அவர் இவரைப் பற்றிச் சொன்னது, "ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் அந்தத் தெய்வீக அருள் நிறைந்தாற்போல் அவரது உடல் முழுதும் தெய்வீக அருள் நிறைந்திருந்தது, அவருக்குச் சேவை செய்ததில் என் மனம் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. என் இதயத்தை அவரது அருள் நிரப்பி விட்டது."
திரும்பவும் தன் கணவர் தக்ஷிணேஸ்வர் போனவுடன் அவர் மிகவும் பொறுமையாக அவரது வருகைக்காகக் காத்திருந்தார். அவரது மனமெல்லாம் தன் கண்வர் மேலேயே இருந்தது. அவர் நீச்சயம் திரும்பி வருவார் என்று நம்பி வாழக்கையைக் கழித்தார். தானும் மௌனமாக, சாந்தமாக அந்த இறைச்சக்தியை உண்ர ஆரம்பித்தார். வீட்டில் பல வேலைகள் இருந்தன, ஆனாலும் ஒவ்வொரு வேலையும் செய்வது அந்த இறைவனுக்கே என்ற நினைப்பில் செய்ததால் உடல் சோர்வு தெரியவில்லை.
ஒரு நாள் அவரது வீட்டில் சிலர் வந்து, "ஸ்ரீ ராமகிருஷணருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் உடைகளும் களைந்து எதோ பேத்தியபடி வருகிறார்" என்ற செய்தியைச் சொல்லினர்.
"இது நிஜமா இருக்குமா? உடனேயே நான் இந்த நேரத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும்" என்று நினைத்து இதைப்பற்றி அவரது வீட்டு உறவினர்களிடம் கேட்க பயந்து மனம் உருகிப் பிரார்த்தனை செய்தாள். கடவுளும் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தார். அந்தக் கிராமத்திலிருந்து சிலர் கங்கையில் குளிக்க கல்கத்தாவுக்குப் போக ஏற்பாடு செய்தார்கள். சாராதாமணியும் தானும் அவர்களுடன் போகத் தன் தந்தையிடம் விருப்பம் தெரிவித்தார். அவரது உள் நோக்கம் அறிந்த தந்தை தானும் அவர்களுடன் பிரயாணத்தைத் தொடர்ந்தார். 60 மைல்கள் நடக்க வேண்டும், பண்க்காரர்கள் பல்லக்கில் போவார்கள், ஆனால் இவர்களால் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! சாரதாமணி தன் கணவரைப் பார்க்க உடலால் எந்தச் சிரமும் படத் தயாராக இருந்தார். மூன்று நாட்கள் நடை, சாரதாமணியின் உடல் இந்தக் கடும் நடையைத் தாங்க முடியாமல் நெகிழுந்து போய் சுரமும் வந்தது, சுரத்தில் அவர் மயக்கமடைந்தார்.
அவருக்கு அப்போது உதவ ஒரு கரிய உருவம் வந்தது. ஆனால் அதன் அழகோ அழகு! அவரைத் தடவி அவருக்குச் சேவையும் செய்தது, "நீங்கள் யார்? எனக்கு ஒரு தாய் போல் உடவ வ்ந்துள்ளீர்கள்" என்று அவர் கேடக, அந்த உருவம், "நான் தக்ஷிணேஸ்வர் என்ற இடத்திலிருந்து வருகிறென், நான் அந்தக் காளியின் சகோதரி என்றாராம். அந்தச் சம்பாஷணையின் பின் மறுநாள் அவரது சுரம் நன்கு விட்டுவிட்டது. பின் நடந்து நடந்து எப்படியோ அவரது கணவர் இருக்கும் தக்ஷிணேஸ்வர் இடத்திற்கு வந்தார்.
ஸ்ரீ ராம்கிருஷண்ரும் தன் மனவியைக் கண்டார்.
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















