-
விபரீத ஆசை
- இணையப் பாட்டி
ஒரு கிராமத்தில் இரண்டு விவசாயிகள் இருந்தனர், ஒருவன் மஹாதேவன், மற்றொருவன் கேசவன். மஹாதேவன் பெயருக்கு ஏற்றபடி மகத்தான் காரியங்கள் செய்வான், நன்கு உழைப்பான், எல்லோருக்கும் உதவி புரிவான், ஆனால் கேசவன் மிகுந்த சோம்பேறி, உட்க்கார்ந்தபடி காசு சம்பாதிக்க நினைப்பான். இது எப்படி முடியும்? இதனால் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் மஹாதேவனோ மிக மகிழ்ச்சியாக இருந்தான். இதைப் பார்த்துக் கேசவனுக்கு மிக்ந்த பொறாமை. தினமும் மஹாதேவன் வீழ்ச்சிக்குக் கடவுளிடம் பிரார்த்திப்பான். ஒரு நல்ல மனிதனின் வீழ்ச்சிக்குப் பிரார்த்திக்கக் கடவுள் எப்படி உதவுவார்?
மகாதேவன் தன் பரங்கிக்காய் செடியில் ஒரு புதுமை உண்டு செய்து எல்லோரையும் மகிழச் செய்ய வேண்டும் என்று தன் மூளையை உபயோகித்து ஒரு புது விதமான ப்ரங்கியைப் பயிர் செய்தான், அதுவும் நன்றாக விளைந்தது. அதை உடைத்தால் வானவில்லின் கலர் தெரிந்தது, தவிர, உள்ளே பூவின் மணமும் ஒருவிதத் தித்திப்பும் இருந்தன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அது ஒரு தும்பிக்கையுடன் யானையின் தோற்றம் கொண்டதாக இருந்தது. மகாதேவனுக்குப் பரம சந்தோஷம் தான். இதை அந்த ஊர் ராஜாவுக்குப் பரிசளிக்க எண்ணினான், அரண்மணையும் போனான். அரசன் பாதத்தில் அந்தப் பரிசை வைத்தான். அரசனும் அவன் உழைப்பை மெச்சி அவனுக்குத் தன்னுடைய பரிசாகப் பொற்காசுகளும் ஒரு யானையும் கொடுக்கக் கட்டளையிட்டான்.
இது கேசவன் காதில் எட்டிற்று. "நானும் அரசனை மகிழ்விப்பேன், பரங்கிக்காய யானை போல் இருந்ததற்கே இந்தப் பரிசு.நான் நிஜ யானையையே வாங்கி அரசனிடம் கொடுப்பேன்" என்று தன் நிலங்கள் மற்ற பொருட்களை விற்று ஒரு யானையை வாங்கினான், அரசனிடம் கொண்டு சென்றான். அரசன் மகிழ்ந்து தனக்கு இரண்டு யானைகளைக் கொடுத்து, ஒரு ஜமீனையும் கொடுத்து, தன்னை ஜமீந்தார் ஆக்குவார் என நினைத்து மகிழ்ந்தான்.
அரசனும் யானையை ஒரு விவசாயி தனக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று எண்ணித் தன் மந்திரியை அழைத்து, "இதன் பின்னால் என்ன சம்பவம் நட்ந்திருக்க வேண்டும் என விஜாரித்து இதற்கு என்ன பரிசு தர வேண்டும் என்று சொல்" என்றார். மதி மந்திரியும் இதை விஜாரித்து, பொறாமையின் காரணமாகக் கேசவன் இப்படிச் செய்திருக்கிறான் எனக் கண்டறிந்தார். பின் அரசரிடம், "முந்தைய விவசாயிக்குத் தாங்கள் ஒரு பரங்கிக்காய்க்கு ஒரு யானையைக் கொடுத்தீர்கள். இப்போது இந்த விவசாயி யானையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான். இதற்கு இவனுக்கு ஒரு பரங்கிக்காயைப் பரிசாக வழங்கலாம்" என்றார்.
கேசவன் தனக்கு வந்தப்பரிசைப் பார்த்தான். அவன் கையில் இருந்த பரங்கிக்காய் அவனைப் பார்த்து சிரித்தது. சொத்தெல்லாம் விற்று ஏழையானான்.
பொறாமை அழிவைத்தரும்.
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















