Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என்னைப்பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
விபரீத ஆசை
இணையப் பாட்டி





             

ஒரு குளத்தில் ஒரு குட்டிமீன் நீந்தியபடி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மரத்தின் கிளையில் ஒரு பச்சைக்கிளி வந்து அமர்ந்தது. அதன் வாயில் ஒரு மாம்பழம், அழகாகக் கொத்திக்கொத்தித் தின்றது. குட்டி மீனுக்கும் தானும் ஆகாயத்தில் பறநது இது போல் மாம்பழம் கொத்தித்தின்ன ஆசை.

அதன் தாத்தாமீன் அங்கு வர அதைனிடம் குட்டி மீன் கேட்டது, " தாத்தா நானும் பறக்க எண்ணுகிறேன். ஒரு சில வினாடிகள் பறந்தாலும் மகிழ்ச்சியே. நான் பற்க்கப் போகலாமா?"

"அட பைத்தியமே, நாமெல்லாம் த்ண்ணீரை விட்டுப்போனால் இறந்துவிடுவோம். நாமெல்லாம் "நீர் வாழ்வென "என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆகையால் இந்த ஆசையை விட்டுவிடு."

முகத்தைத் தொங்கப்போட்டபடி அது கிளியை அழைத்தது, "கிளியே கிளியே, நான் உன்னைப்போல் பற்க்க உதவி செய்வாயா?"

"நான் எப்படி உதவி செய்ய முடியும்?"

"நீ என்னை உன் முதுகில் ஏற்றியபடி ஒரு சுற்றுப் பறந்து பின் என்னை நீரில் போட்டுவிடேன்."

"நீ நீரிலிருந்து வந்தால் செத்துவிடுவாய். நான் அந்தக் காரியம் செய்ய மாட்டேன்."

மீன் வருத்தம் அடைந்தது. கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு புறா வந்தது. மீன் அதைப் பார்த்து, "புறாவே புறாவே, என்னை உன் முதுகில் ஏற்றியபடி பறந்துபோய்ப் பின் இங்கே இறக்கி விடுகிறாயா?'

புறா பதிலளித்தது, "சரியான முட்டாளாக இருக்கிறாயே, நீர் தான் உன் வீடு. அதைவிட்டு வந்தால் துடித்துடித்துச் செத்துவிடுவாய். உன்னால் எங்களைப்போல் நிலத்தில் வாழ முடியாது. இந்த எண்ணத்தைக் கைவிடு."

ஆனால் மீனோ மிகப்பிடிவதமாக இருந்தது. அபோது அங்கு ஒரு கழுகு வந்து அமர்ந்தது. அதனுடன் மீன் பேசியது, "கழுகாரே, எனக்கும் உங்களைபோல் ஆகாயத்தில் பறக்க ஆசைதான். எனக்குப் பறக்கச் சொல்லிக்கொடுக்கிறாயா?"

கழுகுக்கு மீனைப் பார்த்தவுடன் நாக்கு ஊறியது. இந்த முட்டாளை ஏமாற்றி அதைப் பிடிக்க வேண்டியதுதான், நல்ல விருந்தாக எனக்கு ஆகும் என்று நினைத்து, "மீனே உன்னாலும் பற்க்க முடியும் நான் உனக்கு உதவுகிறேன்."

"மிக்க நன்றி நண்பனே, நீ ஒருவன் தான் என்னை உன்னாலும் பறக்க முடியும்" என்று சொல்லி என் ஆசையை நிறைவேற்றப் போகிறாய். நீ என்னை எப்படிப் பற்க்க வைப்பாய்?

"நீ என் முதுகில் ஏறிக்கொள். நான் பற்க்கும் போது நீயும் என் முதுகில் இருப்பாய்."

"சரி அப்படியே செய்கிறேன்."

இந்தப் பேச்சைப் புறா, கிளி கேட்டன. மீன்குட்டியின் தாத்தாவும் கேட்டது. "ஐயோ அப்படி எல்லாம் செய்து மோசம் போகாதே. நன்றாக் யோசனை செய். கழுகு நயவஞ்சகமாய் உன்னைத் தின்னப் பாக்கிறது" என்று முறையிட்டன.

ஆனால் மீன் குட்டி கேட்கவில்லை. குளத்திற்கு மேல் எழும்பிக் குதிக்க, கழுகு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதைத் தன் அலகில் கொத்திக்கொண்டு போயிற்று.

பெரியவர்கள், பெற்றோர்கள், அனுபவஸ்தர்கள். அவர்கள் சின்னப் பிள்ளைக்களின் நலத்திற்காகக் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும். எப்போதும் சத்சங்கத்தையே நாட வேண்டும். ந்ம்மால் எதெல்லாம் முடியுமோ அதற்குத்தான் முயற்சி செய்ய வேண்டும்.

இந்தக்கதையின் கரு என் பேரன் கொடுத்தான். அதை என் பாணியில் விவரித்திருகிறேன்

குளத்தில் இருக்கும் குட்டி மீன்
பறக்கும் கிளியைக்கண்ட மீன்
தானும் பறக்க நினைத்தது
தாத்தாவிடம் ஆசையை சொன்னது
"பைத்தியமே நீரில் வாழும் நாம்
எப்படி பறக்க முடியும்?
இதை இப்போதே மற!
வேறு நினைப்பில் மனதைத் திற"

மீனுக்கு மனம் கசந்தது!
பறக்கும் கிளியிடம் கேட்டது,
"கிளியே, நான் உன் முதுகில் ஏறட்டுமா?
உன்னுடன் நானும் பற்க்கட்டுமா?"
கிளி அதனைப் பார்த்து நகைத்தது,
"இந்த் ஆசை நடக்காது,
வெளியில் உன் உயிரும் இருக்காது"

சற்று நேரம் கழிந்தது
ஒரு புறாவும் பறந்து வந்தது;
இதே கேள்வி அதனிடம் கேடக
அதுவும் சிரித்துச் சொல்லியது,
"நிலத்தில் நீ வாழுவது கடினம்
உடனே வந்துவிடும் மரணம்"

மீன் அடைந்தது ஏமாற்றம்,
நெஞ்சை அடைத்தது துக்கம்;
வந்து அமர்ந்தது கழுகு, அங்கு
இதே கதையைக் கேட்டது அங்கு,
நாக்கில் நீர் ஊறியது
திட்டம் ஒன்று தீட்டியது,
"மீனே என் முதுகில் ஏறிவிடு
நானும் பறக்க நீ மகிழ்வாய்"
மீனும் மகிழ்ச்சியுடன் மேலே வர
அலகில் கவ்விச்சென்றது கழுகு.

இணையப் பாட்டியின் பிற படைப்புகள்




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants