-
இன்னொரு பக்தை
- இணையப் பாட்டி
பக்த மீரா கண்ணனையே நினைத்து உருகி அவனையே அடைய நினைத்து அதனால் வந்த துன்பங்களை இன்பங்களாகவே எடுத்துக்கொண்டு பின் வெற்றியும் பெற்றாள். அவள் கண்ண்னைப்பார்க்கச்சென்ற கோயில்கதவு பூட்டி இருந்தது அவள் உருக்கமாகப் பாடிய பாட்டில் கோயிலின் பூட்டும் திறந்துகொள்ள அவள் கண்ணனுடன் ஐக்கியம் அடைந்துவிட்டாள். இதே போல் கோதையும் அந்தப்பரந்தாமனையே மணாளனாக வரித்துப் பின் மேளதாளத்துடன் அந்த அரங்கனையே வரவழைத்துத் திருமணம் புரிந்து கொண்டாள்.
இவர்கள் இரண்டு பேரையும் பலருக்குத் தெரியும், ஆனால் இதே போல் ஒரு பக்தை சிவனையே நினைத்து உருகி அவருடன் ஐக்கியமாகி இருக்கிறாள், அவளுக்கு அந்த் இடத்தில் சின்ன சந்நிதியும் உண்டு. மணந்தால் சிவனையே மணப்பேன் என்று மனதில் வைராக்கியம் கொண்டவள். இவள் மணந்த சிவன் தாணுமாலயன். இது சுசீந்திரத்தில் உள்ளது அந்தப் பெண்ணின் பெயர் "அறம் வளர்த்த நாச்சியார்".
சுசீந்திரம் அருகே தேரூர் என்ற ஊரில் பாவை நாச்சியார் என்பவர் வசித்து வந்தார். அவரது மகள் சிறு வயதிலிருந்தே தாணுமாலயன் கோயிலுக்கு வந்து அவருடைய அழகைப் பார்த்து, அதிலே லயித்து விடுவாள். அகமகிழ்ந்து கற்பூர ஆராதனையைக் கண்டு களிப்பாள். அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. காலச்சக்கரம் சுழல, ஆறு வயதுப் பெண் பதினாறு வயதை எய்தினாள். அவள் தாய் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். பல வரன்கள் வந்தன, ஆனால் எல்லாவற்றுக்கும் இவள் மறுப்புத் தெரிவிக்க அவள் தாய்க்கு சந்தேகம் வந்தது.
"என்னடி பெண்ணே, ஏன் எல்லோரையும் வேண்டாம் என்கிறாய்? உன் மனதில் யாரையாவது நினத்திருக்கிறாயா? காதல் வந்துவிட்டதா?"
"ஆமாம் அம்மா, நான் காதலிக்கிறேன் "
"யாரை என்று சொல், நான் அதை முடித்து வைக்கிறேன்."
"அவர் பேர் தாணுமாலயன்."
"அவர் எங்கு இருக்கிறார்? அவரை எங்கு பார்த்தாய்? முகவரி சொல்."
"அவர் சுசீந்திரம் கோயிலில் இருக்கிறார் அம்மா, அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்."
தாய் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். இது எப்படி சாத்தியமாகும்? என் பெண்ணிற்கு புத்தி பேதலித்து விட்டதா? என்று மிகவும் குழம்பிப்பொனாள். பின் பல டாக்டர்களிடம் காட்டினாள், மாந்திரீகர்களையும் கேட்டாள். ஆனால் எல்லோரும் உடல் ரீதியாக அவள் நன்றாகத்தான் இருக்கிறாள் என்றார்கள். அவளோ இதில் மிகப்பிடிவாதமாக இருந்தாள்
அந்த நாளும் வந்தது. மாசிமாதம், மகம் நட்சத்திரம் "அறம் வளர்த்த நாச்சியார்" தாணுமாலய்ன் கோயில் சென்று குளத்தில் குளித்து வந்தாள். தன்னை அலங்கரித்துக் கொண்டாள். தன் தாயுடனும் உற்றார் உறவினர்களுடனும் சன்னதிக்குச் சென்றாள். அங்கு தீபாராதனையின் போது மாயமாய் மறைந்து விட்டாள். அங்கு இருந்தவர் எல்லோரும் அவள் தாணுமாலயனுடன் கலந்ததை உணர்ந்தனர்.
பின் அவள் தாய் அவளது உருவத்தைச் செப்பில் சிலை போல் செய்து அங்கு இதற்கென்று தனி சன்னதி செய்து, பூஜையும் செய்ய ஆர்ம்பித்தாள்.
இன்றும இசைத்தூண்கள் அருகே இவளது சன்னதி இருக்கிறது. மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று திருமண வைபவமும் நட்க்கிறது. அறம் வளர்த்த நாச்சியார் இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை.
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















