-
எத்தனைப்பொன்
- இணையப் பாட்டி
ஒரு பிச்சைக்காரன் தன் ஏழ்மை நிலையைக் குறித்து மிகவும் வருந்தினான்.
தினமும் ஒரு கோயிலின் வாசலில் அமர்ந்து ஏக்கமாக எல்லோரையும் பார்ப்பான். ஒரு நாள் ஒரு சாது அந்தப்பக்கம் வந்தார்.
இந்தப் பிச்சைக்காரனிடம், "ஏன் அழுகிறாய்? எனக் கேட்டார். அவனும் தன் நிலைமையச் சொன்னான் அதற்கு அவர் "ஸ்ரீ லக்ஷ்மி தேவியைப் பிரார்த்தனை செய்து வா, அவள் அருளுவாள்" என்றார். அவனும் இதைத் தேவவாக்காகக் கொண்டு மனம் ஒன்றி மிகச்சிரத்தையாகப் பூஜிக்க ஆரம்பித்தான். விடாமல் பல நாட்கள் இது தொடர்ந்தது. அவன் சிரத்தை பக்திக்கு மனம் மகிழ்ந்து ஒரு நாள் அவன் எதிரே புன்சிரிப்புடன் மிகத்தேஜசாக திருமகள் தோன்றினாள், "நீ தொடர்ந்து கூப்பிட்டாய், நான் வந்துவிட்டேன் உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவனும் தேவியை நமஸ்கரித்துவிட்டு, "தாயே நான் மிக ஏழ்மை நிலையிலே உள்ளேன். எனக்கு நீ நிறையப் பொன் தருவாயா?" என்றான்.
"உனக்கு எத்தனைப் பொன் வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை"
"அது என்ன தேவி?"
"பொன் தரையில் விழுந்து விட்டால் அது மண்ணாகிவிடும், சரியா?"
"சரி தேவி''
பிச்சைக்காரன் தன்னிடமிருந்த ஒரு பையின் வாயைத் திறந்து இரு கைகளாலும் அகலமாகப் பிடித்துக் கொண்டான். பொன் விழ ஆரம்பித்தது. இன்னும் இன்னும் என்று கேட்க தேவியும் அந்தப் பையை நிரப்பினாள். பின் மறைந்து போனாள்.
"ஆஹா! எத்தனைப்பொன்! இது பல தலைமுறைகளுக்குப் போதுமானதே" என்று அகமகிழ்ந்து அதைத் தூக்க முடியாமல் தூக்கினான். டர் என்று அவனது துணிப்பை கீழே கிழிந்தது, பொற்காசுகள் அத்தனையும் கீழே விழ் மண்ணோடு மண்ணாகச் சேர்ந்தன.
சிரத்தையாகப் பிரார்த்தனை செய்தாலும் தேவி அகமகிழ்ந்து தங்கம் தந்தாலும் பேராசையினால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. அளவுக்கு மீறி ஆசை விஷம் போன்றது. நேரே ஆகாயத்தைத் தொட நினைக்கக் கூடாது. அதற்கு சோம்பலில்லாமல் கடும் உழைப்பு, முயற்சி, நியாயம், தர்மம் என்று பல ஏணிகளின் படிகளைக் கடக்க வேண்டும் இல்லையா?
இந்தக் கதையை கோல்வர்கர் எழுதிய 'குருஜியின் கதைகள்' என்ற புத்தகத்தில் முன்பு படித்தது ஞாபகம் வந்தது. கோல்வர்கர் குருஜி ஒரு பெரிய யோகி, நாட்டுப்பற்று மிகுந்தவர், தேச பக்தி அதிகம். இவரே விஸ்வஹிந்து பரிஷத்தை ஆரம்பித்து அதில் 33 வருடங்கள் இருந்து உழைத்தவர். இவரே கன்யாகும்ரியில் விவேகானந்த மெமோரியல் கட்ட வித்திட்டு அதில் வெற்றியும் கண்டவர், தவிர 'பாரதீய வித்யார்தி பரிஷத்', 'பாரதீய மஸ்தூர் சங்', 'வனவாச கலயாண் ஆஸ்ரம்', 'சிக்ஷாமந்திர்' என்று பல கட்டியிருக்கிறார்.
இவை தவிர இயற்கையினால் ஏற்படும் சேதத்திற்கும் தன் உடலாலும் பொருளாலும் ஓடிச்சென்று உதவுபவர். பாரதீயக் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இவருக்குப் பின்னால் வந்தவர்கள் இவர் போல் கொளகைகளை மதிப்பது கொஞ்சம் குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அன்புடன் அம்மம்மா
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














