சித்திரைச் சிறப்பு
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தின் பெயர் சர்வதாரி. தமிழ் வருடங்கள் பெயருடன் வரும் 60 வருடங்கள் உண்டு. 60வது முடிந்தவுடன் திரும்ப முதலிலிருந்து தொடங்கும். புது வருடம் சித்திரை மாதத்தில் வரும். தவிர, இந்த மாதத்தில் ஸ்ரீராமநவமி விஷு பண்டிகை, அருள்மிகு சொக்கநாதர் மீனாட்சியின் கல்யாணம், ஸ்ரீ மஹாவீர் ஜயந்தி, திரு அம்பேத்கர் ஜயந்தி, மே டே என்னும் தொழிலாளர்களின் தினம் என்று பல சிறப்பு நாட்கள் வருகின்றன. இந்தச் சித்திரைக்கு ஒரு கவிதை பிறந்தது.
இது ஒரு பாட்டு. இதைக் கோலாட்டம் அல்லது கும்மி அடிக்கலாம், ஆடி மகிழுங்கள. அத்துடன் வேப்பம்பூ, மாங்காய், வெல்லப்பச்சடியை அவசியம் சாப்பிட வேண்டும்.
சித்திரை மாதத்தின் சிறப்பைப் பாரடி
சொக்க நாதர், எங்கள் சொக்க நாதர், மீனாட்சி சொக்க நாதர்
சொக்க நாதர் மீனாட்சி திருக்கலயாணம்
ஸ்ரீ ம்ஹாவீரர் அவதரித்ததும் இந்தச் சித்திரையில்
வெல்லம் மாங்காய் வேப்பம்பூவும்
அன்புடன் அம்மம்மா
Point to listen - கேட்கச் சுட்டுக
புத்தாண்டு மலரும் அழகைப்பாரடி
மேஷத்திலே சூரியனும் உதயமானானே
இளவேனில் காலமும் வந்தது பாரடி (சித்திரை மாதத்தின்}
சித்திரை மாதத்தில் வரும் சிறப்பு வைபவம்
பாப புண்ய கணக்கெழுதும் சித்திரபுத்ரனும்
பிறந்த நாளும் சித்திரை மாத பௌர்ணமியில் தான்
ராமபிரான் அவதரித்ததும் இந்த மாதத்தில்
ஸ்ரீ ராமானுஜர் அவதரித்ததும் இந்த மாதத்தில் {சித்திரை மாதத்தின்}
திரு அம்பேதகர் ஜெயந்தியும் இந்த மாதத்தில்
தொழிலாளர் தினமும் ஒரு சிறப்பு அம்சம் தான்
சில்லென்று ஜூஸ் குடிப்பதும் இந்தக் கோடையில்
புத்தம் புது உடைகளும் இந்த மாதத்தில்
கோயிலில் சிறப்பு பூசை இந்தச் சித்திரையில் {சித்திரை மாதத்தின் }
சேர்ந்து கலந்த பச்சடி உண்டு
வாழ்க்கைத் தத்துவம் சொல்லும் பச்சடி
கசப்பு இனிப்பு புளிப்பு பச்சடி
பலவகை பலசுவைச் சொல்லும் பச்சடி
எல்லோரும் சேர்ந்து மகிழும் தினமடி {சித்திரை மாதத்தின்}






Your Feedback








