Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்






 



அந்த நாள் ஞாபகம் - இணையப் பாட்டி

இநதப் படத்தில் இருப்பது நானும் என் மகன் ராஜாவும், எப்போது எடுத்தது தெரியுமா?அக்டோபர் மூன்றாம் தேதி 1990 வருடத்தில், ஒரு சுவரின் மேல் அமர்ந்திருக்கிறோம். இந்தச் சுவருக்கு அவ்வளவு மஹத்துவம், இது என்ன ஒரு பாழடைந்த சுவர் போல் உள்ளதே! இதற்கு என்ன உயர்வு இருக்கப் போகிறது என்று யோசிக்கிறீர்களா?

சொல்லுகிறேன், இந்தச் சுவர் தான் கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இரண்டாவது உலக யுத்தம் முடிந்தவுடன் பிரித்துவிட்டது. பின் பல வருடங்களுக்குப் பிறகு இணந்தது, அன்று எதேச்சையாக நாங்கள் பெர்லின் போயிருந்தோம். எங்கும் மகிழ்ச்சி திருவிழாதான். அந்தப் பிரித்த சுவரை இடித்து திரும்பவம் இணைய வைத்தது ஒரு திருவிழாத்தானே!

1939லிருந்து 1945 வரை சர்வாதிகாரியாக வலம் வந்த ஹிடலர் போரில் தோல்வி கண்டு, பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் வசம் இருந்த இடங்களை நேச நாடுகள் நட்புடன் பிரித்துக் கொண்டன. மேற்கு ஜெர்மனி அமெரிக்க ஆதிபத்யத்தில் இருந்தது. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவின் ஆதிபதயத்தில் இருந்தது, அதன் தலைநகரம் பெர்லினும் இரண்டாகப் பிரிக்கப் பட்டது. அமெரிக்க பவரின் கீழ் இருந்த மேற்கு ஜெர்மனி நன்கு வியாபார ரீதியாகவும் மற்ற போக்குவரத்து ரீதியாகவும் நன்கு வளார்ந்து வர, கிழக்கு ஜெர்மனியின் வளர்ச்சி குறைந்தது, மேலும் அகதிகள் தங்கள் குடுமபம் பராமரிக்க பெர்லின் வழியாக மேற்கு ஜெர்மனி போக ஆரம்பித்தனர், இதற்கு வழி காண நடுவில் ஒரு பெரிய சுவர் எழுப்பப்பட்டது. அதுதான் இந்த பெர்லின் சுவர். இந்தச் சுவர் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது. ஒரு வருடம் இரண்டு வருடமா? 45 வருடங்கள் பிரிந்து இருந்தன.

மேற்கு பெர்லின் மிக அழகாக வசதியுடன் அழகுப்படுத்தப் பட்டது, ஆனால் மக்கள் மேற்கிலும் கிழக்கிலும் உணர்வுகளால் ஒன்றுபட்டு இருந்ததால் கோப்த்தில் இந்தச் சுவரை உடைத்தனர், திடீர் திடீரென்று போராட்டம் செய்தனர், அடிக்கடி செங்கல்லைத் தூக்கிச் சென்றனர். கொஞ்சம் நாளில் கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவடைந்ததால் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி இணையப் பேச்சு ஆரம்பித்து வலுவுற்றது. 1989ல் எல்லாரும் சேர்ந்து இந்த இரு பாக்ங்களும் இணைய மாபெரும் போராட்ட்ம் நடந்தது. அந்த நேரத்தில் இருந்த ரஷ்யாவின் தலைவர் திரு கர்பாசோவ் என்பவர் தனக்கு இதில் சம்மதம் என்று பச்சைக்கொடி காட்டினார். பின் ஒவ்வொருவராகப் பல தலைவர்கள் சம்மதித்தனர்.

Berlin wall demolition - image: Wikipedia

1990 இந்த இரு நாடுகள் இணைய ஒப்பந்தம் நடந்தது. பின் அக்டோபர் 12 மணி நள்ளிரவில் தேவாலயத்தில் மணிகள் "டண் டண் "என்று முழங்க பல வாண வேடிக்கைகள் கண்களுக்கு விருந்தாக பெர்லின் பிரித்த சுவர் இடிக்கப்பட்டது, மூன்று லட்சம் பேர்கள் இருந்தனர். பள்ளி மாண்வர்கள் 60 சதுர அடி ஜெர்மனியின் தேசியக் கொடியை 40 அடி உயரக் கம்பத்தில் கட்டிப் பறக்க விட்டனர். பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது நம் நாட்டில் திரு வி.பி. சிங் இருந்தார் அவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நானும் என் மகனும் அடைந்த மகிழ்ச்சிக்கு அள்வே இல்லை. ஒரு பெரிய சுவரின் உடைசலைக் கொண்டு வந்தோம், அதை பத்திரமாக ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து பிரேம் frame செய்து வீட்டு ஷோ கேசில் வைத்திருக்கிறோம். எல்லோரும் இந்த உடைந்த கல்லை ஏன் ஷோ கேசில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். சரித்திர மஹத்வம் பெற்றக் கல்லாயிற்றே!

அன்புடன் அம்மம்மா

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday