Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்






 



சத்ய சாய் பாபா

இணையப் பாட்டி

Sri Sathyasaibaba

அன்பு குழந்தைகளே,

ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 23 அன்று வருகிறது. ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ வள்ளலார் அடிகள், ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள், ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள், ஸ்ரீ ராம் சூரத் குமார், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், இன்னும் பல அவதார புருஷர்களை நம் நாடு அடைந்தது நம்க்கு மிக பாக்கியம். இன்று நம் சத்திய சாயி பல சக்தி கொண்ட அன்பே வடிவமான சேவைக்கே முதலிடம் தந்து, சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை என்ற கொள்கைகளுக்கே வாழ்ந்து, சமதர்ம நோக்கோடு எல்லா மதமும் சம்மதமே என்ற இலட்சியதுடன் ஒவ்வொருவர் மனதிலும் வீற்றிருக்கிறார். கூப்பிட ஓடி வந்து நம் கவலைகளைக் களைவார். அவரைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் இப்போது சொல்லப் போகிறேன். கதாகாலட்சேபம் என்றாலே அதற்கு ஒரு தனி பாணியாக தமிழ். அதை மாற்றினால் அழகாக இருக்காது, எப்படி நாட்டுப்பாடல், வில்லுப்பாட்டு, என்று தனி வழி இருக்கிறதோ அதேபோல் தான் இதற்கும், இல்லையா?

சாயி ராம்

முன்னொரு காலம், ஆயர்பாடின்னு ஒரு கிராமம், அதுக்கு இன்னொரு பேர் கொல்லப்பள்ளி. பேருக்கு ஏத்தாற்போல் நிறையப் பசுக்கூடம் இருந்துதாம். பால், வெண்ணைக்க்குப் பஞ்சமில்லையாம். ஒரு நாள் ஒரு இடையன் தன் பசுவைக் கறக்க, பால் இல்லாது இருந்ததைப் பார்த்தான். மறு நாளைக்கு அதைத் தொடர்ந்தானாம். அந்தப் பசு விசித்திரமாக ஒரு புற்றுக்கிட்ட போச்சு, அங்கே நின்னுது. அப்போ ஒரு பாம்பு வந்துதாம், பசுவின் மடிலே வாய வச்சுப் பாலை உரிஞ்சுடுத்து, கோபத்தில் இடையன் ஆடிப்போனான். கோபத்திலே மூளை மழுங்கிடுமே, ஒரு பெரிய கல்லை எடுத்தானாம், பாமபு மேலெ வீசினானாம். அது நசுங்கி சாபம் கொடுத்துடுத்து, "அடே மடையா, என்னடா காரியம் செஞ்சே? இந்தக் கிராமம் முழுக்க இன்னிலேந்து புத்துக்கள் தான்" என்று. நல்ல கிராமம் புட்டபர்த்தி ஆயிடுத்து எங்கும் ஒரே பாம்பு மயம்.

அந்த ஊரிலே ரெத்னாகரம் கொண்டமராஜுன்னு ஒருத்தர் இருந்தார். குழந்தைகளுக்கு நிறையக் கதைகள் சொல்லுவார். உங்களுக்கும் கதைன்னாப் பிடிக்குமே, அவருக்கு ஒரு மகன், அவர் பேரு வெங்கப்பா. அவர் சம்சாரம் பேரு திருமதி ஈச்வரம்மா, அவள் மிகச் சிறந்த பக்தையாம். சத்ய நாராயண பூஜை செய்வாராம். ஒரு நாள் பூஜையில், "அப்பா கோவிந்தா, வைகுண்ட நாதா நீதான் எனக்கு மகனாகப் பிறக்கணும்" என்று நல்ல மனதுடன் வேண்டியது கிடைத்தது. 1926 நவம்பர் 23 அன்று சூரிய உதயத்தில் மகனாகப் பிறந்தார் சத்யா எனும் சாயி. குழந்தை பிறந்ததும் ஒரே ஜோதி மயமாம், கண்ணைப் பறித்ததாம்.

அந்தப் படுக்கையில் எதோ மேலும் கீழும் அசைந்ததாம். அந்தத் தாய் ஓடிச்சென்று படுக்கையைத் தூக்கிப் பாத்தாளாம். என்ன காட்சி இது? என்று அப்படியே ஸ்தம்பித்து போயிட்டா. அங்கே ஒரு நாகம் படுக்கையில் மண்டலமிட்டிருந்தது. அனந்த சயனனுக்கு ஆதிசேஷன் என்ன பொருத்தம்? குழந்தை "சந்திரபிமப முக மலராலே" என்பது ஒப்ப அப்படியே மனதைக் கொள்ளைக் கொண்டு போனதாம், என்ன காந்தம்? கன்னத்தில் பளிச்சென்று ஒரு மச்சம், எல்லோரும் மாறி மாறித் தூக்கி முத்தம் கொடுத்து திருஷ்டி கழித்தனர். பகவானுக்கும் திருஷ்டியா?

குழந்தைப் பருவம், ஐந்து வயதானது. நம் சாயிராமை பள்ளிக்கூடம் சேர்த்தார்கள், எப்போதும் சிறுவன் சத்யாவைச் சுற்றிச் சிறுவர் கூட்டம் இருந்திண்டே இருக்குமாம், ஏன் தெரியுமா? யார் என்ன கேட்டாலும் திங்கக் கிடைக்கும். "ஓ சத்யா, எனக்கு சாக்கிலேட் கொடேன்" என்றால் சாக்க்லேட் வந்தது. "சத்யா, ஒரு லட்டு வரவழைச்சிடு பாக்கலாம்" என்றால் லட்டு வந்து விடும். ஒரு மலையில் மேல் ஒரு புளியமரம், அந்த மரம் வரை, மலை உச்சியில் ஏறி சத்யா அமர, கீழே அவனது நண்பர்கள், "சத்யா, இந்த புளியமரத்திலிருந்து ஆப்பிள் மாழ்பழம் வருமா?" என்று கேட்க, "ஓ வருமே, இந்தா பிடித்துக்க்கொள்" என்று வரவழைத்தாராம்.

இப்படியாகத்த்தானே அன்பு சத்யாவைச் சுற்றி ஒரு கூட்டம், இதுதான் சான்ஸ்ன்னு சத்யா ஒரு பஜன் கூட்டம் ஆரம்பித்தான். காலை கூட்டம் பஜனுடன் ஆரம்பமாகும் எல்லா வழிகளிலும் போய், பின் கோயிலுக்குள் நுழைந்து முடியும். இப்படி ஆரம்பித்த பஜனுக்கு ஒரு பேரும் வந்தது. என்ன பேரு தெரியுமா? "பாண்டுரங்க பஜன் மண்டலி" அது எங்கு நுழைந்தாலும் அந்த இடத்திலே ஒரு வியாதி அண்டவில்லை, இது என்ன வியப்பு? எல்லா கிராமத்திலேயும் கூப்பிட ஆரம்பித்தா. பேரும் புகழும் வந்தது.

காலம் ஓட, சத்யா 9ஆவது படித்தார், அவருக்கு அப்போ 14 வயது. ஒரு நாள் என்னாச்சாம், சத்யா பள்ளிலியிலிருந்து வந்தார். வீட்டிற்குள் நுழையாமல் ஸ்கூல் பையை மட்டும் வீசி உள்ளே போட்டார், முகம் பிரகாசித்தது, சொல்றார், "என் பக்தர்கள் என்க்காக அங்கே காத்திருக்கிறார்கள், கடமை என்னை அழைக்கிறது" இத்தனைதான் பேசினார். நேராக ஒரு குன்றின் மேல் சென்று அமர்ந்தாராம்.

அவர் சொல்றார்: "நான் ஷீரடியில் வசித்த சாயி, இப்போது திரும்ப சத்ய சாயி ஆக வந்துட்டேன். உங்களுக்கு நன்மைச் செய்ய, மனசைக் கோவிலாக்குங்கோ" என்று பாட ஆரம்பித்து விட்டார். முதல் பாடல்:

"மானச பஜரே குருசரணம் துஸ்தர பவசாகர சர தரணம்

என்ன அர்த்தம் இதுக்கு? அட மனுஷா, நீ குருவோட பாதத்தை இறுக்கிப் பிடிச்ச்க்கோ அப்போதுதான் சமசாரக் கடலைக் கடக்க முடியும். ஒரு 14 வயதுப் பையன் பேசற பேச்சா இது? பழுத்த ஞானி பேசும் பேச்சுன்னா?

அக்டோபர் 20, 1940 அன்று அவர் அவதார அறிவிப்பு நிகழ்ந்தது. அன்றைய தினத்திலிருந்து சலியாத உழைப்பு, மானுஷ சேவை மகேசன் சேவை என்று சொன்னார். பிரசாந்தி நிலயம் உருவாச்சு, சூப்பர் ஸ்பெஷேலிடி ஹாஸ்பிடல் என்ன, காலேஜ் என்ன, ஏழைகளுக்கு வீடுகள் என்ன, தண்ணீர் சௌகரியம் என்ன, என்று தொண்டு போயிண்டே இருக்கு. எத்தனை அருளுரைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை பஜன் டேப்புகள், எந்த நாட்டிலும் இப்படிப் பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

உலகத்திலே 117 நாடுகளில் சாயி ஆன்மீக சேவை மையங்கள் இருக்கே. சத்ய சாயி அவதார்ம் யாரையும் தண்டிக்க இல்லை. அன்பு பொழிய, நல்லவரைக் காத்து, தீயவரின் தீய எண்ணங்களை அழித்து, மனம் அடக்கக் கத்துக்கொடுத்து, திசை தெரியாமல் தவிக்கிறவருக்கு நல்ல திசை காட்டி, சத்ய, தர்ம, சாந்தி, ப்ரேமை மட்டுமே மனதில் வைத்து, நம்மைச் சுற்றி இருக்கும் தெய்வீகத்தனமையை உணரச் செய்யவே அவதரித்த உத்தமர் நம் பாபா.

அன்புடன்

அம்ம்ம்மா

Sri Sathyasaibaba

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday