பட்டாசுக் குட்டிப் பையா
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
என் நல்லாசிகள். என்ன பட்டாசு வெடிகள், எப்போது வெடிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நன்கு மகிழ்ச்சியுடன் வெடியுங்கள், ஆனால் ஜாக்கிரதையாக.
வெடிகள் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஒரு நிமிடம் தான் அது நிலவுகிறது. அத்துடன் புகையும் சேர்ந்து காதில் தேவைக்கு மேல் சத்தமும் கிளப்பி சுற்றுப்புர சூழலை இன்னும் மாசு படுத்துகிறது இல்லலயா? ஆகையால் நீங்கள் எப்போதும் வாங்கும் வாண வேடிக்கைகள் சிலவைப் பாதி குறைத்துக்கொண்டு மீதி பாதி பணத்தில் ஏழ்மை நிறைந்த குடுமபத்திற்கு உங்களைப் போன்ற மாணவருக்கு ஒரு புது உடையோ அல்லது எழுத காபி நோட்டோ, அல்லது அவர்கள் உடலுக்கு காம்பளான் போன்று டானிக்கோ வாங்கிக் கொடுத்தால் நம் மனம் மிக திருப்தியாக இருக்கும், தவிர ஒரு தேவைப்பட்டவனுக்கு உதவி செய்வது கடவுளுக்கு மிகப் பிடித்தமான ஒன்று, பகவான் பாபா அவர்கள் தேவைப் படுவர்களுக்கு ஓடி சேவை செய்வதை மிகவும் விரும்புகிறார். அதுவும் தற்போது கிராம சேவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
பட்டாசு என்பது நிஜமாகவே காசு கரியாகிறது, ஆகையால் ஒரு அளவோடு வாண வேடிக்கைகளில் மகிழ்ந்து பின் தருமம் செய்யலாமே, என்ன சரியா? உங்கள் பங்கில் ஒரு குழந்தைக்கு எதாவது உபயோகமாக அளியுங்கள் பார்க்கலாம்.
இப்போது ஒரு கவிதை:
ஜாக்கிரதை, குட்டிப்பையா
குடும்பத்தின் மகிழ்ச்சி ஆட்டம்
அண்ணன் தம்பி கொண்டாட்டம்
அக்காள் தங்கை ஆர்ப்பாட்டம்
குட்டிப்பையா சின்னப் பையா
நீ எங்கே பூந்தையா?
ஒ கையில் வெடியா?
பார்த்து பையா, ஜாக்கிரதையா,
பற்ற வைத்து ஓடிவிடு
அணைந்தாலும் நகர்ந்து விடு
அணைந்தது போல் அது நடிக்கும்
பின் டபார்" என்று அது வெடிக்கும்
புஸ்வாணம் போல் ஏமாற்றும்
திறமைப் பல நமக்கு காட்டும்
கண்கள் உங்கள் முக்கிய உறுப்பு
கவனம் அதில், உங்கள் பொறுப்பு
பூமிச்சக்கிரம் சுழலும் அழகில்
தன்னை மறந்து தாண்டாதே,
காலில் சுடவும் வாய்ப்புண்டு
திடீர் வெடிக்கவும் வாய்ப்புண்டு
காட்டன் உடையே அணிந்துகொள்
நைலான் உடையைத் தவிர்த்திடு,
அம்மா பேச்சைக் கேட்டு நட
அப்பா துணையில் வெடிகள் வெடி
என் அன்பு கனிந்த
தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன் அம்ம்ம்மா
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













