ஆசிரியர் தினம்
இணையப் பாட்டி
இந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினம், கோகுலாஷ்டமி, கணேச சதுர்த்தி, ஓணம், ராக்கி திருநாள் என்று பல வருகின்றன, ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. முந்நாள் குடியரசுத்தலைவர் டாகடர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இது. ஒரு முறை பல மாணவர்கள் அவரது பிறந்த நாளுக்குப் பல பரிசுகளுடன் அவரைப் பார்க்கச் சென்ற போது அவர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுமபடி கேட்டுக்கொண்டார், அன்றைய தினத்திலிருந்து ஆசிரியர் தினம் கொண்டாடும் வழக்கம் எற்பட்டது. அன்று ஆசிரியர்களுக்கு ரெஸ்ட்டுதான். பள்ளி நடத்துவது முழுவதும் மாண்வ மாணவிகளே. பிரின்ஸிபாலிலிருந்து, மணி அடிக்கும் பியூன் வரை அன்று அவர்களது நிர்வாகம் தான், கடைசி 2 மணி நேரம் ஒவ்வொரு ஆசிரியராக அழைத்து அவரைப் பற்றி வேடிக்கையாகச்சொல்லி அவர் பாடம் நடத்தும் விதமும் சில மாணவர்கள் வர்ணிப்பார்கள், தவிர சிறு பரிசும் தருவார்கள். சில சமயம் கிண்டலும் இருக்கும். முடிவில் ஆசிரியர்கள் மேல் கொண்டுள்ள அன்பும் விளங்கும்.
ஒரு கவிதை பார்ப்போமே
ஒரு தனி மரியாதை ஆசிரியர்களுக்கு
வணக்கங்கள் பல என்றும் அவர்களுக்கு,
அவர் வாழ்க்கையில் நம்மை ஏற்றிய ஏணிகள் - நாம்
அவர்க்குத் தொண்டு செய்யும் மாணவ மணிகள்
நம் சொந்தக் காலால் நிற்க வைக்கும் போதனை
அதுவே அவர்கள் செய்யும் பெரும் சாதனை
தன்நம்பிக்கை நமக்கு ஊட்டும் அவர் திறமை
தன்னலமில்லாத அவர் சேவை மிக அருமை
என்றும் உங்கள் ஆசிகள் எமக்குத் தேவை,
என்றும் செய்வோம் நாம் உமக்குச் சிறந்த சேவை.
அன்புடன் அம்மம்மா
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













