சிவபக்தர் ஹரதத்தார்
இணையப் பாட்டி
இப்போது ஒரு சிவபக்தர் பற்றிய கதை சொல்கிறேன்:
காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற பிராமணர் வைஷ்ணவர்களுக்கு ஆச்சார்யராக இருந்தார். அவர் பகவான் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று அவர் தவம் செய்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு கஞ்சனூரில் தனது 15 அவதாரங்களுள் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்க, அவருக்கு சுதர்சனர் என்ற பெயர் வைத்தனர். ஆனால் ஹரதத்தர் என்று கூப்பிட்டனர்.
நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு கழுத்தில் துளசிமாலை போட்டுக்கொண்டு வரும்படி அவரைப் பழக்கினர். ஆனால் ஸ்ரீ ஹரதத்தர் விஷ்ணு ஆலயத்திற்கு பதில் சிவாலயம் போக ஆரம்பித்தார். எப்போதும் அக்னீசர் ஆலயத்தில் அமருவார். கழுத்தில் துள்சி மாலைக்கு பதிலாக உருத்திராட்ச மாலை இருக்கும். நெற்றியில் திருமண்ணுக்கு பதிலாகப் பட்டை பட்டையாக விபூதி இருக்கும். வாயில் நமோ நாராயணயாய என்பதற்கு பதிலாக ஓம் நமச்சிவாய என்று சொல்லுவார். அந்தச் சிவன் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் கீழ் அமர்ந்த்து விடுவார். அவ்வளவு தான். தன்னை மறந்து தியானத்தில் ஈடுபடுவார். அவர் எப்போதும் கோவிலில் பழியாக இருப்பதைப் பார்த்து உறவினர்கள் வசவு மாரிப் பொழிந்தனர். அவர் ஒன்றுக்கும் கேட்கவில்லை.
ஒரு நாள் உறவினர்கள் ஒரு இரும்பு நாற்காலியை நெருப்பில் இட்டுப் பழுக்கப் பழுக்கக் காய்சினார்கள். பின் ஹரதத்தரை இழுத்து வந்து, "ஹே ஹரதத்தா, உன் சிவனே பரம்பொருள் என்று நிரூபித்துக் காட்டு, இந்த நாற்காலியில் அமர்ந்துக் கொள்" என்றனர். இது ஒரு சவால் தான். ஹரதத்தர் சற்றும் கலங்காமல் புன்னகையுடன் அதில் அமர அந்த நாற்காலி நிலவு போல் குளிர்ந்தது. உட்கார வழிவிட்டது. "சிவனே பரம்பொருள்" என்று ஆனந்தமாகக் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இன்றும் இந்த ஹரதத்தரின் சிலை தட்சிணாமூர்த்தியின் கீழே கஞ்சனூரில் தன் இரு கரங்களையும் குவித்தபடி இருப்பதைக் காணலாம். என்ன நம்பிக்கை! என்ன இறைப்பக்தி! சரணம் என்று வந்தவருக்கு இறைவன் கூட இருந்து காப்பாற்றுகிறார்.
தினம் ஒரு சில மனி நேரமாவது பிரார்த்தனையில் செலுத்துங்கள்.
அன்புடன் அம்மம்மா விசாலம்
| toolbar powered by Conduit |
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















