இன்று டீச்சர் லீவு
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
உங்கள் எல்லோருக்கும் ரிசல்டு வந்து நன்கு தேறி இருப்பீர்கள். உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் வகுப்பில் ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அன்று உங்களுக்குக் கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா? எப்படி அந்த நாளைக் கழிக்க வேண்டும் என்பதை இப்போது பர்க்கலாம். அன்றைய தினம் மானிடரின் (மாணவர்களில் வகுப்புத் தலைவராகச் செயல்படுபவர்) சொல் கேட்டு அன்று வகுப்பில் எடுக்கப்போகும் பாடத்தை, ஒவ்வொருவராகப் படித்து, பின் அதில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்தவர் கூற மற்றவர் கேட்கலாம். இது ஒத்துவரவில்லை என்றால் அறிவுப் போட்டி ஒன்று வைத்து, இரு பிரிவாக வகுப்பைப் பிரித்து எந்தப் பிரிவு அதிக்மாக விடை அளிக்கிறது என்றும் பார்க்கலாம், காலை வேளையாக இருந்தால் மைதானத்தில் ஒழுங்கு முறையுடன் விளையாட்டு விளையாடலாம், வரையும் போட்டி போல் வைத்து நன்கு படம் வரைந்தவனை மறு நாள் அசெம்பிளியில் பாராட்டலாம். இப்படி எத்தனையோ விதம் இருக்க, அதைவிட்டு வம்புப்பேச்சு, சண்டை, வயதுக்கு மீறிய பேச்சுக்கள், ஆசிரியரை கேலி செய்தல், இவைகள் தேவையா? இல்லை அல்லவா? நீங்கள் அந்த நாளை நன்கு திறம்பட நடத்திக் கொடுக்க, பள்ளியின் முதலவரின் பாராட்டும், மற்ற ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்க மனம் மிகவும் மகிழ்ச்சி பெறும். இப்போது ஒரு விஷயம்; வகுப்பில் ஆசிரியை வராத நாளில் என்ன நடந்த்து என்று பார்க்கலாமா?
சொன்னான் சேகர், பெஞ்சில் ஒரு தாவு,
வகுப்பு சூழ்நிலையில் ஒரு மாற்றம்,
விஷமத்தனத்தில் ஒரு ஏற்றம்.
வகுப்பில் ஒரே சத்தம்,
செய்வதறியாது ஏறியது பித்தம்,
வகுப்புத் தலவன்,
"ஸைலென்ஸ் ஸைலென்ஸ்"
என்று ஒரு குச்சியைத் தட்ட,
வாசலில் ஒருவன் எட்டிப் பார்க்க,
"டேய் தலைவி வரார் டா"
என்று கண்ணைச் சிமிட்ட,
ஒரு நிமிட இடைவெளிதான்
எல்லோரும் "கப்சிப்" தான்
நடிப்புத் திறனில் முதல் இடம் தான்,
தலைவியின் மனதைக் கவரத்தான்,
"வெரி குட், வெரிகுட் "என்ற புன்னகை,
அவள் தலை மறைய
ஆரம்பித்தது ஒரு கிரிக்கெட்,
விழுந்தது ஒரு விக்கட்,
உடைந்தது ஒரு கண்ணாடி,
கதவு அடைக்கப்பட்டது முன்னாடி,
சமத்துப் பிள்ளைகள் நாலு பேர்,
வீட்டுக் கணக்கை முடித்தனர்
நல்ல பெயர் எடுத்தனர்,
திடீரென்று வந்தது ரயில் வண்டிச் சத்தம்,
கூடவே வந்தது ஒரு காரின்" பீம் பீம்'
மேடம் வராத நாள்,
வாலுகளுக்கு நல்ல நாள்,
படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த நாள்
ஒரு போரடிக்கும் நாள்....
அன்புடன் அம்மம்மா விசாலம்
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| toolbar powered by Conduit |





Your Feedback









