எமலோகத்தின் ஆடிட்டர்
இணையப் பாட்டி
பல காரியாலயங்களிலும், கம்பெனிகளிலும் வரவு செலவுக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஒருவர் வருவார். அவர் தான் ஆடிட்டர். அவர் கணக்கு வழக்கைச் சரி பார்ப்பார். தவறான கணக்காய் இருந்தால் அபராதமும் செலுத்த வேண்டும் அல்லது கோர்ட், வழக்கு என்று அலைய வேண்டும். இதே போல யம லோகத்திலும் கணக்கு எழுத ஒருவர் உண்டு, அவர் பெயர் சித்திர புத்திரன், சூரியனுக்கும் நீளாதேவிக்கும் பிறந்தவர். யமலோகத்தில் ரூபாய் எல்லாம் உண்டா கணக்குப் பார்க்க? இல்லையே, பின் எப்படி இந்தச் சித்திர புத்திரன் வேலை செய்வார்?
இவர் நாம் செய்யும் பாப புண்ணியங்களின் கணக்குகளை எழுதி, அதற்குத் தகுந்த தகுதியையும் பெற வைக்கிறார். இதற்குத்தான் நாம் எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். பிறர் மனதைப் புண் செய்யக் கூடாது. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்ற வேண்டும். இது போல் நாம் நல்லது செய்ய, புண்ணியங்கள் சேமிப்பு ஏறி, பாபங்கள் குறைகின்றன.
இந்தச் சித்திரபுத்திரன் சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் சூரியனைப் போல் அறிவிலும் தேஜஸிலும் சிறந்து விளங்கினார். முதலில் அவர் பிரும்மாவின் ஆக்கத் தொழிலையே செய்யத் தொடங்கினார். இதனால் பலர் சூரியனிடம் முறையிட, சூரியன் யமலோகத்தில் பாப புண்ணியக் கணக்கு மிகச் சிறந்த பணி ஆகையால் அதைச் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். ஒரு கையில் ஒரு அச்சாணியும் மற்றொரு கையில் ஓலையும் வைத்துக்கொண்டு கணக்கு எழுத ஆரம்பித்தார். இந்தச் சித்திரா பௌர்ணமி அன்று இவரை நினைவு கூர்ந்து நல்லதையே செய்வோம், நல்லதையே நினைப்போம். இந்த நாளில் நாம் அவர் படத்திற்கு பூஜை செய்து ஒழுக்கமுடன் வாழப் பிரார்த்திப்போம்.
இந்தச் சித்திர புத்தினைப் பற்றி வேறு ஒரு புராணக்கதை உண்டு. அகில உலகத்திற்கும் ஈசனான சிவபெருமான் பாப புணிணியக் கணக்கை எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார் அதற்கென்று ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட, அதனின்று தோன்றினார் நமது சித்திர குப்தன். சித்திரத்திலிருந்து தோன்றியதாலும் அவர் நம் கண்ணிற்குப் படாமலும் தன் வேலையை அதாவது பாப புண்ணியக் கணக்குகளை எழுதி வருவதாலும் அவர் பெயர் சித்திரகுப்தன். இவர் மீண்டும் ஒரு முறை காமதேனுவிற்குப் புத்திரனாகப் பிறந்து திரும்பவும் சித்திர குப்தன் என்ற பெயர் பெற்றான்.
குப்த என்றால் ரகசியம், ஆம், அவன் எழுதும் பாப புண்ணியக் கணக்குகள் மிக ரகசியமாகத் தான் இருக்கின்றன. இவன் யம தர்ம ராஜா முன்னிலையில் இறந்தபின் வரும் ஆன்மாவின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து படிக்கிறான். அதற்குத் தகுந்தாற்போல் நல்லவைகளும் தீமைகளும் அமைகின்றன.
அன்புடன் அம்மம்மா விசாலம்
| toolbar powered by Conduit |
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















