-
நினைத்துப் பார்க்கிறேன்
- நடராஜன் கல்பட்டு
எங்களுக்காகவே வாழ்ந்து தனது எழுபத்தேழில், “லக்ஷ்மி நான் இன்னோரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்கறேன்” என்று வரப்போகும் எண்பதை நினைத்து என் அம்மாவிடம் விளையாட்டகச் சொல்லி அந்தக் கொடுப்பினை இன்றி எழுபத்தெட்டில் என் மடியிலேயே இறந்த என் தந்தையை;

அப்பா
எப்போதும் சாந்த் மூர்த்தியாக இருப்பினும் எங்கள் உடல் நலம் கருதி சனி பிறந்தால் எண்ணை தேய்த்துக் கொள்ள்ச் சொல்லும் அம்மாவிடம் நான் பிடிவாதம் பிடிக்க இடது கையில் எண்ணைக் கிண்ணமும் வலது கையில் கொள்ளிக் கட்டையும் கொண்டு வீட்டைச் சுற்றி என்னைத் துறத்திய தாயை;

அம்மா
அன்று எனக்கு அடி விழாமல் எங்களுக்குக் குறுக்கே வந்த என் சித்தியை, நான் பிடிவாதம் பிடிக்கும் போது, “பாட்டு சொல்லித் தருகிறேன் வா” என்றவள் அழைத்த போது பெட்டிப் பாம்பாய் அடங்கி அவள் முன்னே உட்கார்ந்த நாட்களை, விறகடுப்பில் உயிரை விட்டு சமைத்துக் கொண்டிருப்பவளிடம் வண்டிக்கு நாழியாகி விட்டதே என்பதற்காக, “ஆன முட்டும் போறும் போடு” என்றால், “ஆனையெல்லாம் சமைக்க எனக்குத் தெரியாது” என்றும், “சோத்துக்காரியை (சாப்பாடு டிப்பாவை அலுவகங்களுக்குக் கொண்டு வருவாளே அவளை) வைத்துக் கொள வேண்டியதுதான்” என்று நான் சொல்ல “நீ சோத்துக்காரிய வாணா வெச்சுக்கோ இல்லே கக்கூஸ் காரியெ வாணா வெச்சுக்கோ. எனக்கென்ன ஆச்சு” என்று பொய்க் கோபத்திலும் நகைச்சுவை அளித்த சித்தியை, பால்யத்திலே விதவையாகி எங்களுக்காகவே உழைத்து ஓடாகி என் கண் முன்னே மறைந்த பாச மிகு சித்தியை;

பாசமிகு சித்தி
பலா போன்ற முட்கள் கொண்ட நாக்கினையும் அதே சமயம் தங்க மென்ற உள் மனத்தையும் கொண்ட ரமண பக்தர் அப்பாவின் தம்பி, சித்தப்பாவையும்

வெளியே முள்ளும் உள்ளே தங்கமும்
உங்கள் வீட்டு வேலைகளை நீங்களே செய்து கொள்ளலாம் என்னும் தெம்பை எனக்களித்த மணியான மணியெனும் என் மூத்த அண்ணனையும்;

“உன் வீட்டு வேலைகளை நீயே செய்து கொள்ளலாம்”
அழகிய ஓவியங்கள் வரைவதிலும், மரத்தினால் பம்பரம், பொம்மைகள் எனப் பார்த்ததையெல்லாம் செய்வதிலும், மூங்கிலோ பிளாஸ்டிக் குழாயோ எது கிடைத்ததோ அதை வைத்துக் கொண்டு புல்லங்குழல் செய்வதிலும் கைதேர்ந்த ஆனால் தன் குரலை என்றுமே உயர்த்தாத சாந்த மூர்தியான பாலச் சந்திரன் என்ற இரண்டாம் அண்ணனை;

சாந்த மூர்த்தி
பேச்சை வளர்த்தாது மௌனமாய்க் காரியத்தில் தன் பலம் காட்டித் தான் வேலை பார்த்த ஊர்களில் கொவில் கட்டக் காரண கர்த்தாவாக விருந்த கல்யாண ராமனென்ற அண்ணனையும்,

கல்யாணராமன்
சகோதரிகள் சரஸ்வதி, லீலா, சுலோசனா ஆகிய மூவரையும்;
பெண் பார்க்கப் போய் பெண்ணைப் பார்க்காமல் சுவற்றில் மாட்டியிருந்த கேலண்டரையே பார்த்திருந்து விட்டுத் திரும்பிய அந்த நாளை;
வீட்டில் அடி எடுத்து வைத்த அந்த நாளே ஏற்கெனவே எங்கள் வீட்டில் அவளது இரண்டு பெயர்களான சுலோச்னாவும், அல்மேலுவும் இருந்ததால் தன் பெயரை இழந்து சாந்தா வாகி பெயருக்கேற்ப வாழ்ந்து வரும் சக தர்மிணியை;

அல்மேலுவாய்ப் பிறந்து சுலோசனாவாய் வாழ்ந்து சாந்தாவாய் மாறிய சஹதர்மிணி
பள்ளி நாட்களை, கான்பூரில் இராணுவத்தைச் சார்ந்த பரிசோதனைக்கூடம் ஒன்றில் பணி புரிந்த நாட்களை, பர்மா ஷெல், பாரத் பெற்றோலியம் இவற்றில் பணி புரிந்த நாட்களை;

கல்லூரி நாட்களும் கான்பூர் நாட்களும்

பர்மா-ஷெல்
என் தாயின் பெயரும் குணமும் கொண்ட் என் மூத்த் மகள் ராஜலக்ஷ்மியை, சயன்ஸ் பட்டமே பெற்று மண்மான பின் கல்லூரிக்கு மீண்டும் சென்று கணினித் துறையில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணி புரியும் எனது இரண்டாவது மகள் சசிகலாவை, கல்லூரியில் சேர்க்க வேண்டிய நாட்களில் சென்னைக்கும் பம்பாய்க்குமாக ஷண்ட் அடித்து, அத்னால் பி.ஏ. வகுப்பில் சேர நேர்ந்தபோது எரிமலையெ என் மீது வெடித்துப் பின் மண்மான பிறகு கணினி பற்றிய படிப்புகள் படித்து அதே துறையில் ஆஸ்திரேலியாவில் பணி புரியும் மூன்றாம் மகள் ஜெயஸ்ரீயை;
எனது மூன்று மாப்பிள்ளைகள் மகேஷ், ஸ்ரீதர், கோபிநாத் இவர்களை;
சஷ்டியப்த பூர்த்தியின் போது “நானும் மணையில் உட்காருவேன்” என்று கழுத்தில் மல்லிகல் மாலை அணிந்து என் மடிமீது அமர்ந்த முதல் பேரன் கணேஷையும் (இன்று அவன் சிங்கப்பூரில் எஞ்சினியரிங்க் இறுதியாண்டு);

“தாத்தா பாட்டிக்கு மட்டும்தான் கல்யாணமா? எனக்கும்தான் கல்யாணம்”

தாத்தாவைக் கொஞ்சும் த்டியன் கணேஷ்
படிப்பே குறியென கொண்டு கல்லூரியில் படிக்கும் ஷ்ரவண், கதை எழுதுவதிலும், கர்னாடக சங்கீதத்திலும் ஆர்வம் கொண்ட ஸ்வரூண் (இருவரும் இரண்டாவது மகள் வயிற்றுப் பேரன்கள். இருப்பது அமெரிக்காவில் அரிசோனாவில்);

ஷ்ரவண் ஸ்வரூண்
பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு பாட்டும் வீணயும் கற்று வரும் ஒரே பேத்தி நிஷா மற்றும் குப்பை சேர்ப்பதிலும், ஆயுதங்களை உபயோகிப்பதிலும் இயற்கையை ரசிப்பதிலும் என்னைக் கொண்ட கடைக்குட்டி பேரன் கிரணையும்;

நிஷாக் குட்டியும் கடைக் குட்டியும்
இயற்கையின் அழகினை ரசித்துப் படம் பிடிக்கக் கற்றுத் தந்த குரு டி.என்.ஏ. பெருமாள் அவர்களையும், அவரை எனக்குக் காட்டித் தந்த முகம் தெரியாத ஒரு திருடனையும், தமிழில் எழுத அழகியை என் துணைவியாக்கிய அன்பு விஷியையும், கணினி பொருத்ததவரை கருப்பு நாயான என்னை வெள்ளை நாயாக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆசான் ஆகிரா அவர்களையும், மழலை, இல்லம், பல்சுவை குழு அன்பர்கள், மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையுமும் நினைத்துப் பார்க்கிறேன் இன்று நான்.
இறைவனை என்றுமே நினைப்பதால் அது பற்றி சொல்லவில்லை நான். அவர் சன்னிதானத்தில் தான் இருக்கிறேன் இன்று நான்.
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













