மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| எங்கள் நீல பகவன் மழலைகள் குழு |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
26 அக்டோபர் 2007
அன்பு நண்பர்களே,
சிறிது காலமே பழகியிருந்தாலும் தான் பெற்ற பிள்ளைகளுக்கீடாக எங்களை மதித்து ஆகஸ்டு மாதம் 22 அன்று எங்கள் திருமண நாளென்று அறிந்து அன்று எங்கள் வீடு தேடி வந்து நல்லாசி வழங்கிவிட்டுச் சென்றார். சென்ற வாரம் அவரது இல்லத்துக்கு என் மனைவியுடனும் குழந்தைகளுடனும் சென்று அவர் வீட்டில் வைத்திருந்த நவராத்திரி கொலுவைக் கண்டு அளவளாவித் திரும்பினோம். இன்று அவரது கவிதையை நவம்பர் மாத மழலைகள் இதழுக்காக கணினியில் ஏற்றுகையில் அவரது இல்லத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவரது மறைவுச் செய்தியறிந்து இருவரும் அவரது இல்லம் சென்று அவரது பூத உடலைக் கண்டதும் என் நெஞ்சு பதைத்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சொற்பகாலமே எங்களுடன் பழகியிருந்தாலும் தனது மாறாத அன்பின் சக்தியால் எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு, எங்களுக்கு உற்ற துணையாக விளங்கிய அவரது மறைவு எங்களைத் துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது பூத உடலை சென்னையிலிருக்கும் அவரது மகளது இல்லத்துக்கு அனுப்ப உதவிவிட்டுத் திரும்பினோம். ஆயுள் முழுதும் தமிழாசிரியராகப் பணியாற்றி, புலமையில் சிறந்து விளங்கி, பல தமிழ்ப் பாடல்களை சந்தத்துடன் இயற்றி, நூல்களாக வெளியிட்டதோடல்லாமல் தெய்வத் திருப்பணிக்கும் பொருளுதவிகள் செய்துவந்தார் நீல பகவன். இத்தகைய நல்ல மனிதர் இவ்வுலகை விட்டுச் சென்றது தமிழுக்குப் பேரிழப்பாகும். பஜகோவிந்தம் உட்படப் பல சமஸ்க்ருத ஸ்லோகங்களை கவிதை வடிவில் தமிழாக்கம் செய்துள்ளார் புலவர் நீல பகவன். அவரது கவிதைகள் தொடர்ந்து மழலைகள்.காம் தளத்தில் இடம்பெறும். அவருக்கு சக படைப்பாளிகளான நாம் அஞ்சலி செலுத்துவோம். சில ஆண்டுகள் முன்புவரை நான் காண்பவர் அனைவரிடத்திலும் நிறையப் பேசிடும் பழக்கமுடையவனாக இருந்தேன். பல சமயங்களில் என் மனம் புண்படும்படியான கருத்துக்களை வெளியிடுவோர் பலர் இருந்ததால் நான் என் பேச்சைக் குறைத்துக் கொண்டேன். உண்மையான நண்பர்களுக்காக ஏங்கினேன். அன்னை காமாக்ஷியின் அருள் நிரம்பவே எனக்கிருப்பதால்தான் என்னைத் தன் மடியான காஞ்சிமாநகரில் தங்கவைத்து "தெய்வம் மானுஷ ரூபேண" என்பதற்கிணங்க புலவர் நீல பகவன் போன்ற உயர்ந்த மனிதர்களின் சேர்க்கையையும் அருளப்பெற்றேன். மனம் வி்ட்டுப் பழக இனி யாருளர் எனும் கேளவி எழுகையில், மனதில் தோன்றும் கருத்துக்களை யாரிடமும் வெளியிடாமல் உள்ளேயே பூட்டி வைக்கும் நிலை ஏற்படுகையில், துன்பம் தானாக மேலோங்குகிறது. புலவர் நீல. பகவன் உடல் மறைந்தாலும் அவரது ஆன்மா என்றென்றும் அவரது கவிதைகளிலும் நமது மனங்களிலும் வாழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இருந்தாலும் மனது கேட்க மாட்டேனென்கிறது. எப்பொழுது நான் கேட்டாலும் உடனே மறுக்காமல் நான் கேட்கும் கவிதையை நொடியில் எழுதித் தருவார். இதுபோல் எழுத இனி யாருளர் இவ்வையகத்தில்? நான் முற்பிறவியில் செய்த புண்ணியம், பொருளையே பெரிதென மதிக்கும் உலகில் அருள் நிரம்பிய அன்பர் குழாத்துடன் கூட்டுறவு கிடைத்துள்ளது. புலவர் நீல. பகவன் என் ஊனக் கண்முன் மறைந்திருந்தாலும் உள்ளக் கண்களைத் திறந்துவிட்டார். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி எனும் வார்த்தைகளின் பொருள் என் மனதில் உணர்வதுபோலொரு தோற்றம். அவர் சில நாட்களே என்னுடன் இருந்தபோதும் வாழும் வழியை வாழ்ந்துகாட்டி உணர்த்திவிட்டார். அவரது ஆசியுடன் உலகுக்கு நான் செய்யத்தக்க பணிகளைத் தூய உள்ளத்துடன் தொடர்வேன்.
காலவிரயம் செய்தே என்தன் வாழ்வினில் பாதி தொலைத்துவிட்டே - மிகக் ஆகிரா *********************** அன்புள்ள ஆகிரா. தமிழ்க்கவி நீல பகவன் ம்றைவு பற்றி உங்கள் கவிதையையும் உங்கள் மன்ம் திறந்து கொட்டிய கதறல்களையும் கண்டு மிக வருத்தப்பட்டோம். இப்படித் தாய்தந்தையரையும் விட மேலாக ஒரு அன்பரிடம் அன்புகொண்ட ஒருவரை இப்பொழுது முதல் முதலில் பார்க்கிறேன். உங்கள் கவிதையே சொல்கிறது, நீங்கள் அவரிடம் எத்துனை அன்பு, பாசம், ஒட்டுதல் கொண்டிருந்தீர் என்று. உலக வாழ்க்கை ஒரு ரயில் பிரயாணம் என்பது நீங்கள் அறிந்ததே. ஒவ்வொருவர் அவர்கள் இடம் வந்தால் இறங்கிச் செல்கிறார்கள். மற்றவர் பயணம் தொடர்கிறார்கள். போனவரைப்பற்றி சில காலம் சிந்திப்போம், வருத்தப்படுவோம். நாளடைவில் அதை மறக்கவில்லையேல் நம்மைத் துன்பக்கடலில் ஆழ்த்திவிடும். அத்வைத சிந்தாந்தம் தெரிந்த நீங்கள் இதைப் புரிந்துகொண்டு மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். இனியும் உங்கள் பணி தொடர வேண்டும். அவர் விட்டுசசென்ற இடடத்திலிருந்து துவங்கி அவருக்குப் பிறவா மகனாக இருந்து, இணங்கிய சீடனாகத் திகழ்ந்து வந்த நீங்கள், மனதை அட்க்கி பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தந்த உபதேசத்தைக் கையாண்டு தொண்டைத் தொடரவும். பஜகோவிந்தம் சொன்ன காதே காந்த: கஸ்தே புத்ர: என்ற வரியை ஞாபகத்தில் கொணரவும். உங்களுக்கு ந்ல்வழி காண்பித்த அந்த மஹாமேதையாகிய நீல பகவான் உங்கள் உள்ளத்தில் எப்பொழுதும் இருக்கிறார். அவர் உங்களை சாந்த நிலைக்குக் கொணருவார் என்பததில் ஐயமில்லை. எல்லாம் சிவமயம். அசலம் *********************** ஆகிரா அவர்களுக்கும் கடவுளிடம் சேர்ந்த புலவர் நீல பகவதீஸ்வரன் அவர்களது உற்றார் உறவினர்களும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். என்னுடைய மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கும் எண்ணங்களை மிகத்தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன். நீல பகவதீஸ்வரன் போன்ற மகனீயர்களக்கு அழிவே கிடையாது. பூதவுடல்களைப் பிரிந்து ஆண்டவனடிச் சேர்ந்த அம்மகான்களின் தேன்மொழிகளும் பொற்கவிதைகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க நீல பகவதீஸ்வரன் என்றென்றும் என்றென்றும் எங்கள் மனதினில். My heart is drenched in grief and eyes overflowing with tears. Words fail. For a hypesensitive and devoted friend saddest news is too much to bear. It may take quite some time before I regain my composure even to assuage your sorrow or even commend you on your and your wife's facing the World with total surrender to The Lord. Your story is an outstanding proof for my belief that THE LORD IS ALWAYS WITH THOSE FILLED WITH PRAYERS, FAITH, CONFIDENCE, DEDICATED DETERMINATION & PERSEVERENCE. Unable to continue any longer Sadneses-filled Cheenu Mama (சீனு தாத்தா) *********************** Our sincere condolences அன்பு ஐயா, உங்கள் துக்கம் எங்கள் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. உங்களின் உள்ள சோகத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு உலகெங்கும் பரவியிருக்கும் மாபெரும் தமிழ்க் கும்பத்தைத் தந்த காஞ்சி அன்னையின் கருணையை எண்ணிப் பாருங்கள். மானிடத் தாய் உங்க்ளை விரட்டவில்லை. "ம்கனே, என் மடியில் வந்து தவழ்ந்து விளையாடு என்று உங்க்ளைத் தன் வசம் அழைத்துக் கொண்டாள் காமாட்சி அன்னை. நீலபகவன் என்ற மாமனிதர் உருவில் ஒரு நல்ல வழிகாட்டியை உங்கள் மனப்புண் ஆற்றும் மருந்தாக அவள் உங்களைத் தேடி அனுப்பி வைத்தாள். திரு நீலபகவன் மூலம் நீங்கள் செல்லும் பாதையை அவள் காட்டிவிட்டாள். அன்னார் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவர் உங்கள் மீது காட்டிய அன்பு மறையாது. மானிட உடலை விட்டுப் பிரிந்த நீலபகவன் அவர்கள் எங்கும் செல்லவில்லை. நம் அன்னையின் கண்களிலே, அவள் உதிர்க்கும் புன்சிரிப்பிலே குடி கொண்டு இருக்கிறார். கருணை உள்ளம் படைத்த காஞ்சி காமாட்சி இருக்கையில் யாரும் அநாதையில்லை. இந்தக்குழுமத்தில் பங்கு கொள்ளும் அனைவரிலும் வயதில் சிறியவளான எனக்கு சரியான வார்த்தைகள் சொல்லி ஆறுதல் தரத் தெரியவில்லை. உடன் பிறவா சகோதரியாய் உடன் இருந்தும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. காஞ்சி அனனையின் கருணைக் கரம் உங்களை வழி நடத்தட்டும் என்று வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களின் துக்கம் புரிகிறது. புலவர் நீல பகவனின் இழப்பு தங்களுக்கு மட்டுமல்ல, தமிழுக்கே பெரிய இழப்புத் தான். ஆனாலும் இறைவனின் சித்தம் அப்படியிருக்க நாம் என்ன செய்ய முடியும்? அன்னாரோடு சேர்ந்து நீங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சில காலமே ஆனாலும் மிக உயர்வானது, உங்களோடு என்றும் இருக்கும். அன்னை காமாட்சியின் கருணையை நினைத்து மனதை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள். அன்புடன் சுகந்தி *********************** Pulavar Neela Bagavadheeswaran kudumbaththinarukku en aaZhndha anudhaabangal. Avar padaippugalai naan padiththadhillai. Anaal avar patri mazhaligal group anbargal ehudhi iruppadhaip paarkumbodhu avaraip patri munnadhaaga ariyavillaiye, avaradhu padaippugalaip padikkavillaiye endra aadhangam ennul ezhugiradhu. Annaaradhu aathma saanthi adaya ellam valla Aandavaip prarththikkiren. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்வார்கள். அதுபோலத்தானோ என்னவோ தங்களுக்குக் கவிதை எழுதும் திறனைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் புலவர் நீல பகவன் என்று தோன்றுகிறது, தங்கள் கவிதையைப் படிக்கும்போது. வாழ்க அமரர் நீல பகவன் நடராஜன் கல்பட்டு *********************** திரு ஆகிரா அவர்களே, உண்மையிலேயே புலவர் நீல பகவதீச்வரனைப் போன்ற பெரியவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு இவருடைய பாடல்கள் இப்போதுதான் படித்தேன். ஆஹா! எபடிப்பட்ட இயற்கையான இயல்பான கவித்துவம்! வருத்தமாக இருக்கிறது அன்னாரின் மறைவு. ஆனால் அவர் நாமெல்லாரும் வாழுமளவும் இப்பிரபஞ்ஜம் வாழுமளவும் வாழ்ந்துகொண்டே இருப்பார் அவரது புலமையினால். அன்னாரின் ஆன்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாரின் துயர் குறையவும் ப்ரார்த்திக்கிறேன். சில இழப்புகள் ஈடுகட்ட முடியாதவை. வார்த்தைகளால் ஆறுதல் சொன்னாலும் எதுவுமே ஈடாகாது. புலவர் நீலபகவன் அன்பினால் உங்கள் உள்ளத்தை எவ்வளவு ஆக்ரமித்திருந்தார் என்பது எங்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். ஆனாலும் நீங்களே அவர் இருக்கும்போது உணர்ந்ததைவிட இப்போதுதான் அதிகமாக உணர்ந்திருப்பீர் நீல பகவனின் அன்பை, பாசத்தை. நீல பகவன் தாயுமானவர் உங்களுக்கு. அர்த்த நாரீஸ்வரர் உங்களுக்கு. கைக்குக் கிட்டாத தூரத்தில் சென்றுவிடும் போதுதான் எதனுடைய அருமையும் தெரியும், அது நம்மிடம் இருக்கும் வரை அவ்வளவு தெரியாது என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். புலவர் நீல பகவன் என்றும் உங்கள் உள்ளத்தில் நிலைத்து வாழ்வார். உங்களுக்கு அவர் ஆழ்வார். தமிழ்த்தேனீ *********************** my heart-felt condolences. with prayers vishy *********************** Thank you AKR for having given your experiences with Pulavar Neela. Bhagavan. A great kavingar and Isaingar. It is unfortunate that he is no more. May his soul rest in peace! Yes! When you were feeing aloof in Kanchipuram, glued to your all powerful computer, I am happy that I could introduce great people like Neela. Bagavan, Pulavar Muthu. Ramamurthy etc. I never imagined that Pulavar. Neela. Bagavan could impact you so much in such a short time. It is most unfortunate that the hands of Destiny should have snatched such a great soul from our mist. I don't think age 70 is an age to die. As we, life insurance people, say, there are two things in life over which none can have any control whatsoever. One, for sure, is death! I am able to see that you are affected much more than others - more than his son and daughters. We pray God Almighty to give you the strength sufficient to bear the loss of that BALAMURUGANADIMAI. I am quite sure that a person of Pulavar Neela. Bagavatheeswaran's type would be enjoying the hospitality of the HEAVEN! And his soul is bound to rest in peace! Your poetic tribute to that great soul is great and it is sure due to his blessings!. Yours in sorrow N V Subbaraman *********************** I am shocked to learn about the sudden demise of Pulavar Neela Bhagavan. my heart-felt condolences parvamani *********************** ஆகிரா அவர்களே, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர் குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மனம் படும் பாடு புரிகிறது. என்றாலும் அவர் இருக்கும் வரை நீங்கள் பெறாத மகனாய்த் தொண்டு செய்து வந்துள்ளீர்கள். அந்தப் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மனதை ஆறுதல் செய்து கொள்ளுங்கள். எனக்கு நேரிடையாக அறிமுகம் இல்லாவிடினும், அவரின் உயர்ந்த பண்பு உங்கள் மூலமாய் வெளிப்பட்டது. நீங்களும் கொடுத்து வைத்தவர்களே அவரின் நட்புக் கிடைக்க. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம். கீதா சாம்பசிவம்
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |