மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
நீல. பகவன் என் நண்பன்       ஆகிரா

 

உள்ளே

 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management



வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

நீல பகவன் துணை

அன்பு நண்பர்களே,

ஒரு பறவை தன் குஞ்சுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்துக் கூட்டை விட்டு வெளியே விரட்டுவது போல எனக்கு நல்ல கல்வியறிவைக் கொடுத்த என் பெற்றோர் எனக்குத் திருமனம் செய்துவைத்து மனவியுடன் வாழ்க்கைப் போராட்டத்தை சந்திக்க வைத்தனர். என் பெற்றோர் எனக்களித்த கல்வியின் துணைகொண்டு உலகினில் போராடி வென்றேன். இன்று யாரிடமும் கைகட்டி நின்று சேவகம் புரியும் நிலையின்றி, சுயமாக எனக்குத் தேவையான பொருளினை ஈட்டுமளவுக்கு வாழ்வில் நிலைபெற்றுவிட்டேன். என் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழவில் என் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் சென்று பங்குகொண்டு மகிழ்ந்திருந்து, அதன் பின்னர் தந்தை நோய்வாய்ப்பட்ட தருணத்தில் தக்க பொருளுடன் என் மனைவியை அனுப்பி, அவரது உயிர் காக்கத் தேவையான சேவையைத் தக்க தருணத்தில் செய்து, தனயன் என்ற நிலையில் என் கடமையைத் தவறாது நிறைவேற்றினேன். என் தந்தை நீண்ட நாள் உயிரோடு இருப்பார் என்று எண்ணியிருந்த எனக்கு அவரது திடீர் மரணம் வாழ்வில் பேரதிர்ச்சியாக ஏற்பட்டது.

அவரது மறைவிற்குப் பின்னர் என் மனதில் ஒரு ஏக்கம், தந்தை தாய் இருவருடனும் அவர்களது அந்திமக் காலத்திலாவது சேர்ந்து வாழ வேண்டுமென விரும்பியதுதான் நிறைவேறவில்லை, குறைந்தபட்சம் வயது முதிர்ந்த என் தாயுடனாவது அவர் இருக்கும் வரை வாழ வேண்டும் என்று. அந்த ஏக்கம் சந்தர்ப்பவசத்தால் நிறைவேற முடியாத சூழ்நிலை உருவானதால் தனியாக என் மனைவி மக்களுடன் காஞ்சியில் வாழ்கிறேன்.

இவ்வாறு வாடியிருந்த எனக்கும் என் மனைவி மக்களுக்கும் எவ்விதமான ரத்த சம்பந்தமும் இல்லாவிடினும் ஒரு உற்ற துணையாக வந்து நின்ற இன்னொரு தாய் புலவர் நீல பகவன். அவரது கவிதைகளை இணையதளத்தில் ஏற்றம் செய்ய எனக்கு ஏதேனும் பணம் வேண்டுமா? என்று சிறு குழந்தைபோல அவர் கேட்டபொழுது நான் சொன்னேன், "எனக்கு நீங்கள் தமிழையே தருகிறீர்கள், முறைப்படி அதற்குரிய பொருளை நானல்லவோ உங்களுக்கு வழங்க வேண்டும்?" என்று. ஆனால் அவர் எங்களிடம் பேரன்பு செலுத்தியதுடன் சிறு பொருளுதவியாவது செய்ய வேண்டுமென்று மனதில் தீர்மானித்து விட்டார். அவரிடம் பொருள் பெறுவது எவ்விதத்திலும் நியாயமில்லை எனினும் வயதில் மூத்தவர் தருவதனை வேண்டாமென மறுத்தால் அவர் மனம் புண்படும் என்று கண்டு அவர் அளித்த சிறு தொகையினை மறுக்கவில்லை. வாரம் ஒரு முறையாவது எங்களைக் காண ஆட்டோவில் ஏறி வந்து, கணினி முன் அமர்ந்து பணி செய்யும் என்னுடன் அளவளாவுவதும், இணையதளத்தில் அவரது படைப்புகளுடன் மற்ற அனைவரது படைப்புகளையும் படித்து மகிழ்வதுமாக என் வாழ்வில் உற்சாகம் ஏற்பட உதவிய உற்ற நண்பர் எமை விட்டும் இவ்வுலகை விட்டும் எதிர்பாராது சென்றுவிட்டார். என்னையறியாமல் என் கண்கள் குளமாயின. என் தந்தையின் மரணத்தின்போது கூட என் கண்களில் ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. நான்கைந்து மாதங்களே எங்களுடன் கலந்து மகிழ்ந்திருந்தாலும் நீல பகவன் எங்கள் உள்ளத்தில் ஒன்றுகலந்த உன்னத உறவாக விளங்கினார். அவரது மறைவு எங்களைத் துயரக்கடலில் தள்ளியது மாபெரும் உண்மை. பள்ளியிலே நான் தமிழைப் பயின்றிருந்தாலும் கவிதை எழுதும் பழக்கம் எனக்கில்லை. புலவர் நீல. பகவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழறிந்த அவரது பிற நண்பர்கள் கவிதைகள் அளிக்கவுள்ள நிலையில் என் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கினேன்:

ஆதி பகவனை அறிந்திலனாயினும் அன்பு கொண்டே என்தன் வாழ்வில் - அந்த
சோதி அறிவெனும் ஞாயிறு போலொரு துய உளத்தினன் வந்தான் - சுடர்
நீல பகவன் நானென்றான்

பெற்ற தாயுமே கைவிட்ட போதிலும் பேதை எனைக் காக்க வந்தே - ஒரு
சுற்றமென எனைக் கொண்டு எனக்கொரு உற்ற துணையென நின்றான் - என்தன்
சித்தமதில் பள்ளி கொண்டான்

கற்றவனாயினும் இந்த உலகினில் சுற்றும் வழியறியாமல் - என்தன்
சித்தம் தடுமாறி செய்வதறியாது பித்தமுற்று நின்ற போது எனைப்
பற்றிக் கரை சேர வைத்தான்

நண்பர் பலரிந்த நானிலத்தில் எனக்குண்டு எனக்கொண்ட போதும் - ஒரு
துன்பம் எனக்குற்ற காலத்திலே வந்து உற்ற துயர்தமைத் தீர்க்க - எந்த
அன்பர் யாருமங்கு இல்லை

இந்த நிலையறிந் தென்னைத் தனதிரு கண்ணின் மணி எனக் கொண்டே - அருள்
தந்து எனக்கொரு தாயினைப்போலவே தக்க தருணத்தில் வந்தே - என்தன்
பக்கம் துணையென நின்றான்

என்தன் துயரிங்கு தீரவழியொன்றைச் செய்யத் தவறிய தேவன் அந்தப்
பொன்னின் மனம்கொண்ட புண்ணிய நண்பனை என்னைவிட்டுப் பிரித்திட்டான் - மனம்
ஏக்கம் கொள்ள விட்டுவிட்டான்

உன்னைப் போல ஒரு உற்ற நண்பன் இனி உலகினிலே கிடைப்பானோ? - என்னைத்
தன்னைப் பொல எண்ணித் தாங்கிப்பிடித்தொரு காயமெதுவும் படாமல் - எனைக்
காத்தருள் செய்திடுவானோ?

கண்ணீருடன்

ஆகிரா

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com