Astro Gayathri
Team Mazhalaigal
என் கணவரும் என் மகனும்
என்னைப்பற்றி: அழகிய தமிழின் பெருமையைக் கூறும் அழகி வழிவந்த மழலைகள்.காம் தளத்தில் சேர்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன். இதற்குக் காரணமாய் இருந்த திரு. விஸ்வநாதன் அவர்களுக்கு என் நன்றி.
இளங்கலைப் பட்டமும், இதழியலில் டிப்ளமாவும் முடித்தபின் 17 ஆண்டுகளாக நுகர்வோர் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தேன்.
என் கணவர் நிர்வாக மேலாளராகப் பணி புரிகின்றார், என் மகன் பொறியியல் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
1994-ல் நேர்ந்த திருப்பம் என்னை ஜோதிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்தது. ஜோதிடத்தை என் தந்தை தெய்வக்ஞ ரத்னா S.வைத்யநாதன் அவர்களிடமிருந்து பயின்றேன். எனது தந்தையார் மகாப் பெரியவரின் அருளாசியுடன் திருச்சிராப்பள்ளியில் "ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்" என்ற நிறுவனத்தையும், "ஜோதிடக் கடல்" என்ற மாத இதழையும் பத்தாண்டு காலம் நடத்திவந்தார். எனது தகப்பனார், மகாப் பெரியவருக்கு சமஸ்கிருதம் கற்றுத்தந்த பண்டிதர் சுப்பையா தீட்சதரின் வழி வந்தவர்.
2004-ம் ஆண்டு முதல் ஜோதிட சேவை புரிந்து வருகிறேன். எனது படைப்புகளில் சில: 2006-2007-ம் ஆண்டுக்கான திருக்கணித பஞ்சாங்கம், கிரி டிரேடிங்க் ஏஜன்ஸீஸ் (சென்னை) அவர்கள் வெளியிட்ட 2006-07 குருப் பெயர்ச்சி பலன், 12 ராசிகளுக்கான 2007-08க்கான ஆண்டு பலன், ஜோதிட அரசு வெளியிட்ட 2008-09க்கான ராகு-கேது மற்றும் குருப் பெயர்ச்சி பலன். தற்பொழுது இலங்கைலிருந்து வெளி வரும் சோதிடக் கேசரி என்ற மாத இதழில் பிரதான சோதிடராக இருந்து வருகிறேன். மூலிகைமணி மற்றும் ஜோதிட அரசு பத்திரிகைகளில் பல ஜோதிடக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
திருவாவடு துறை ஆதீனம் நடத்தும் சைவ சித்தாந்தம் நேர்முகப் பயிற்சியில் முதலாண்டு தேர்வினை முடித்து 2-ம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறேன்.
என் கருத்துக்களையும், எண்ணங்களையும் "மழலைகள்.காம்" வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடையும்
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், புதுச்சேரி.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












