Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    என் படைப்புகள்

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
என்னைப் பற்றி
அசலம்





Dharmasastha Programme
Picasa Web Albums

அன்பு செல்வங்களே!

எமது அறிமுகம் உங்களுக்கு முன்னமேயே ஸ்ரீ ஆ.கி.ரா. “கீதாஸாரம்” தொடரின் முன் மடலில் தந்துள்ளார். ஆகிலும் எமது முழு விபரம் தெரிவதற்காக இங்கு தந்துள்ளேன்:

முழு பெயர்: பி.கெ. வெங்கடாசலம்
பிறந்த ஊர்: பல்லாவூர், பாலக்கடு ஜில்லா, கேரளா மாகாண்ம்.
வயது: 70வது வயது ந்டக்கிறது. குடும்பம்: எமது தகப்பனார் ஸ்ரீ பி.எஸ். கிருஷ்ண ஐய்யர், ஆதாரம் எழுத்தாளர். தாய் ஸ்ரீமதி. அலமேலுமங்காள் (Housewife). தந்தை தன் 98-வது வயதிலும் தாய் 80-வது வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். தாய் தகப்பனாருக்கு எட்டு குழந்தைகளில் நாம் கடைசி பிள்ளை. இப்பொழுது 5 பேர் உயிர் வாழ்கிறோம். எமது 42வது வயதில் மணந்து இப்பொழுது பம்பாயில் எமது மனைவி ஸ்ரீமதி சுபலக்ஷ்மி, மகள் சௌ. ஜெயஸ்ரீ, மகன் சிரஞீவி ஸ்ரீகாந்த் என்பவருடன் வசிக்கிறோம்.

கல்வி விபரம்: B.Com., B.G.L., A.C.C.S (London), P.M.& I.R (Mumbai), Sr.Accountancy (Maharashtra),Export Executive Certificate

பணியாற்றல்: 50 வருடங்களாக பம்பாயில் பணிபுரிகிறோம். பம்பாய் வரும்போது, பத்தாவது முடித்து சுருக்கெழுத்தும் தட்டெழுத்தும் முடித்து 19-வது வயது முதல் வேலையில் இருந்துகொண்டே பதினைந்து வருடம் மேல் படிப்பு படித்து மேல் சொன்ன பட்டங்கள் பெற்றுள்ளோம். கொட்ரஜ், க்ரைண்ட்வெல், ஸாபர் போன்ற பெரிய கம்பனிகளில் எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து முடிவில் க்ரைண்ட்வெல் அலுவலகத்திலிருந்து 53-வது வயதில் ஓய்வுபெற்று, பிறகு சில கம்பனிகளில் வேலை பார்த்து வந்துள்ளோம். இப்பொழுதும் ஒரு நிறுவனத்தில் Chief Executive ஆக பணிபுரிகிறோம். உடல் நிலை உதவுமட்டும் பணி புரிய வேண்டும் என்பது எமது கருத்து. இல்லையேல் ஸம்ஸார ஸாகரத்தில் கிடந்து உழல வேண்டியதுதான். நம்மால் முடிந்த மட்டும் மற்றவருக்கு பாரமாக இராமல் சொந்தக் காலில் நிற்க்க வேண்டும் என்பது எமது குறிக்கோள். அதுவே தேக ஆரொக்கியத்துக்கு ஒரு சிறந்த வழி என த்ருடமாக ந்ம்புகிறோம். ஸ்ரீ கிருஷ்ணபகவான் கீதையில் சொன்னதுபோல், பௌதீக வாழ்வில் தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் கடைபிடித்து, கர்மயோகியாக வாழ்ந்து, பக்தியோகத்தை வளர்த்து, ஞானயோகியாகத் திகழ்ந்து, ஜென்மம் கடைத்தேற வழி வகுப்பதே எமது கடமை என நம்புகிறோம்.

ஆன்மீகம்: சிறுவயதிலிருந்தே தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு, தெய்வ சிந்னையிலேயே வளரும்படி எமது தாய் தந்தையர் வழிவகுத்துத் தந்தார்கள். சிறு வயதிலேயே தாயை ஆலயங்களில் நடைபெறும் கதாகாலக்ஷேபத்திற்கு அழைத்துச் சென்றதினால், எமக்கும் அதில் நல்ல ஈடுபாடு உண்டாகியது. ஸ்வாமி சின்மயானந்தா, பூர்ணானந்தா, ஸ்ரீ கிருஷ்ணபூர்த்தி அவர்கள், ஸ்ரீ கிருபானந்த வாரியர், செங்காளீபுரம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர், ஸ்ரீ பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போன்ற ஆன்மீக விஷயங்களில் சொற்பொழிவாற்றிய மஹான்களுடைய கதைகளைக் கேட்டு, பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸா, ஸ்ரீ விவேகானந்தா, ஸ்ரீ சிவானந்தா, ஆதி சங்கராசாரியர், காஞ்சி மஹாபெரியவாள் இவர்களுடைய படைப்புக்களைப் படித்து வந்தோம். ஆனாலும ஆன்மீகத்தில் எமது நாட்டத்திற்கொப்ப நிலை கிடைக்கவில்லை. குரு ஞானானந்தாவை தரிசித்து ஆசிபெற்று, குரு ரமணமஹர்ஷியின் சீடரை அணுகி குரு ரமணர் படைப்புக்களைப் படித்ததன் பொருட்டு உண்டாகிய சந்தேகங்களைப் பற்றி தீர்கமாக விவாதித்து முடிவில் அவர் சகாயத்துடன் குரு ரமணரின் படைப்புகளை நன்கு படித்தறிந்து அந்த வழியில் எமது வாழ்வை அமைத்துக்கொண்டோம். நாம் ஆன்மீகததுறையில் படைக்கும் எல்லாப் படைப்பும் குரு ரமணபகவானுக்கே உரித்தாகும். அவர் கருத்துப்படிதான் நாம் சிந்திக்கிறோம், செயல் படுகிறோம், அவர் காண்பித்த வழி ஒன்றுதான் எமது மன நிலை சாந்தமாகி ஆன்மீக அறிவு வளர ஹேதுவாக அமைந்தது. அவருடைய “நான் யார்” என்ற படைப்பு ஒன்றே போதும் நமக்கு ஆன்மீக அறிவைத் தர. ஆனாலும் மேல் குறிப்பிட்ட எல்லா ஆன்மீக வழிகாட்டிகளும் எமக்குச் சரியான வழிவகுக்க அடிப்படையில் உதவியுள்ளார்கள். எல்லொருக்கும் எமது மனம் கனிந்த வணக்கம் உரித்தாகும்.

தைவீகம்: எமது 8வது வயதிலிருந்தே நாமஸங்கீர்த்தனத்தில் ஈடுபாடு வந்துள்ளது. அதற்கு எமது தாய், தகப்பனார், மூத்த சகோதரர் இவர்கள் உதவினார்கள். பஜனையில் அபிநயத்துடன் நர்த்தனம் செய்ய்வது எமது சிறு வயதிலிருந்தே உண்டான பழக்கம். நூறணி கிராமத்தில் ஒரு பஜனை ஸங்கத்துடன் தொடர்புகொண்டு பிற்பாடு பம்பாய் வந்தபிறகு எமது மூத்த சகோதரருடன் பஜனையில் ஈடுபட்டு இன்று முல்லண்டு பஜனை ஸமாஜத்தின் பஜனைக் குழுவில் ஒரு முக்கிய அங்கத்தின்ராகத் கிகழ்கிறோம். ஆரம்பத்தில் பஜனை பத்ததியைப்பற்றி முழு விபரம் இல்லையாகிலும் பிற்பாடு குரு ஸ்ரீ புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதருடைய ஸுத்ரொபதேசத்துடன் பஜணை பத்ததி நன்றாக விளங்கியது. வாராவாரம் எமது குழு பஜனை செய்து வருகிறது. இது பக்தியை வளர்க்க உதவுகிறது. அஹம்காரம் ஒழிய ஒரு ந்ல்ல மார்க்கம்.

ஆற்றல்: நாமாகவே யார் உதவியும் இல்லாமல் ஸ்வயமாக கம்ப்யூட்டர் படித்து நான்கு மின்தளங்களைப் படைத்துள்ளோம். ஆன்மீகம, பஜனை ஸம்பிரதாயம், நமது படைப்பாகிய ஸொஃப்டுவெயர்ஸ், பல மின்தளங்களுக்குப் போகும் வழி என 4 மின்தளங்கள் உள்ளன. சிறு வயதிலிருந்தே அலுவலக ஸம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதிவந்தோம். அவை பிரபலமான புத்தகங்களில் பிரசுரமாயின்.

இப்படிப் பலதரப்பட்ட வழிகளில் எமது திறமை துலங்க வழி கிடைத்தது எமது பாக்கியம் எனக் கருதுகிறோம். நீங்களும் கிடைத்த சமயத்தில் பலவாறாகக் கல்வி கற்று எல்லாத் துறைகளிலும் முன் வரிசையில் திகழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

வாழ்வின் லக்ஷியம்: கடைசிவரை பிறருக்கு ஏதாவது விதத்தில் உதவி புரிவது, எமக்குத் தெரிந்ததை மற்றவருக்குச் சொல்லிக் கொடுப்பது, பிறரை தூஷியாமலிருப்பது, தன்னலமற்று எல்லோரையும் ஸமபாவனையுடன் காண்பது, பெரியோர்களையும் குருவையும் ஆதரித்து ஆன்மீக வழியில் தவறாமல் செல்வது, இறைபக்தி செய்வது.

உங்கள் அசலம்

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button