Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
உலகம் போற்றும் அறிஞர்கள்
ஆகிரா


ஓஹ்ம்

விஞ்ஞானமயமான இவ்வுலகில் நாம் வசதியுடன் வாழ உதவி செய்யும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குபவை. மின்சார சக்தி இன்றி கணிணி, தொலைபேசி, மின்விளக்குகள், மின்விசிரிகள், குளிர்பதனப் பெட்டி, இஸ்திரிப்பெட்டி, வானொலி, மாவரைக்கும் இயந்திரம் போன்ற கருவிகள் எதுவும் இயங்காது. பேருந்து, ரயில், ஆகாய விமானம், கப்பல், கார், ஆட்டோ ரிக்ஷா முதலிய வாகனங்கள் அடிப்படையில் பெட்ரோல் போன்ற எரிபொருன் எரிவதால் உண்டாகக்கூடிய வெப்ப சக்தியினால் இயங்கினாலும் எரிபொருளை எரிக்கவும் எரியும் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்ற மற்ற கருவிகளை இயக்க Battery எனும் மின்கலம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்தக் கருவிகள் இயங்க ஒவ்வொரு கருவிக்கும் அதற்குத் தேவையான அளவு மிகாமலும் குறையாமலும் மின்சக்தியை அளிக்க மின்னோட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கேற்றாற்போல் கருவிகளையும் பிரத்யேகமாகவும் துல்லியமாகவும் வடிவமைக்க வேண்டும். மின்சாரத்தின் தன்மையை, அதன் அளவு ஆகியவற்றைக் கணக்கிடுவது சாத்தியமானால் மட்டுமே இது முடியும்.

மின்சாரம் ஒரு கடத்தியில் (conductor) செல்லும் பொழுது அக்கடத்தி அம்மின்னோட்டத்திற்குத் தன் தன்மைக்கேற்ப ஒரு தடையை விதிக்கிறது. உதாரணமாக மின்சாரம் இரும்பினூடே செல்லும்பொழுது இருக்கும் தடையைவிட தாமிரத்தின் உள்ளே செல்லும்பொழுது குறைவாக உள்ளது. இத்தடையின் அளவைப் பொறுத்தே மின்னோட்ட அளவு இருக்கும். இந்த மின்தடையைக் கணக்கிட உதவும் அளவையைக் (unit) கண்டறிந்தவர் "ஜார்ஜ் ஓஹ்ம்" எனும் விஞ்ஞானியாவார். இந்த அளவை அவரது பெயரிலேயே "ஓஹ்ம்" எனப் பெயரிடப்பட்டு "Ω" (omega) எனப்படும் கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.

1 Ω = 1 V/A என்ற சமன்பாட்டின் படி ஒரு ஓஹ்ம் என்பது ஒரு ஆம்பியர் மின்சாரம் பாயும் பொழுது ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டைத் (potential difference) தரக்கூடிய தடை என வரையறுக்கப் படுகிறது.

ஜார்ஜ் ஓஹ்ம் ஜெர்மனியின் வடமத்தியப் பகுதியிலிருந்து பின்னர் பவேரியாவுக்கு மாற்றப்பட்ட எர்லாங்கென் (Erlangen) எனும் நகரில் 1789ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்த ஒரு பௌதீகத்துறை அறிஞர். அவர் கொலொக்னெ (Cologne) நகரிலுள்ள ஜெசூட்ஸ் கல்லூரியில் 1817ஆம் ஆண்டு முதல் 1827ஆம் ஆண்டு வரை கணிதப்பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு கடத்தியினூடே செல்லும் மின்சாரம் அதன் மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேரிடைத் தொடர்புள்ளது என்றும் மின் தடைக்கு (resistance) எதிர்மறைத்தொடர்புள்ளது (the flow of electric current through a conductor is directly proportional to the potential difference or voltage and inversely proportional to the resistance) எனவும் கண்டறிந்தார்.

அவரது இத்தத்துவம் ஏற்றுக்கொள்ளப் படாததால் அவர் பணியிலிருந்து விலகினார். அதன்பின்னர் விரைவிலேயே அவரது இக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு ந்யுரெம்பர்க் (Nuremberg), ம்யுனிச் (Munich) ஆகிய இடங்களில் கற்றுத்தரப் பட்டது.

ஓஹ்ம் 1862ஆம் ஆண்டு முதல் ம்யுனிச்சில் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது அவர் நடத்திய மின்னோட்டம் பற்றிய ஆராய்ச்சியில் ஓஹ்ம் விதி (Ohm's law) என்றழைக்கப்படும் 1 Ω = 1 V/A சமன்பாட்டுக்கான விதியைக் கண்டறிந்தார். இதைத்தவிர அவர் ஒலித்துவம் (acoustics) மற்றும் படிக இடையூறு (Crystal interference) பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஓஹ்ம் எண்ணிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானது பெர்லினில் 1827ஆம் ஆண்டு பதிவேற்றம் பெற்றது.

ஜார்ஜ் ஓஹ்ம் 1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி மரணமடைந்தார். மின்சாரத்தை நாம் உபயோகித்துப் பல நல்ல பலன்களை அடைய உதவிய இவ்விஞ்ஞானியைப் போற்றுவோம்.

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button