Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
உலகம் போற்றும் அறிஞர்கள்
பார்வமணி


ஆல்ஃப்ரெட் நொபெல்

குழைந்தைகளே நோபெல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் வரலாறு படித்தீர்கள். நோபெல் பரிசு என்றால் என்ன? அதை யார் ஏற்படுத்தியது? இதைப்பற்றத் தெரிந்து கொள்வோம்.

நோபெல் பரிசை ஏற்படுத்திய ஆல்ஃப்ரெட் நொபெல் என்பவர் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1833ஆம் வருடம் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் ஹோமில் பிறந்தார். இவர் இம்மானூயல், கரோலின் நோபெல் இவர்களுடைய நான்காவது மகன், இம்மானூயல், ஒரு இஞ்சினீயரும், கண்டுபிடிப்பாளரும் (Inventor ) ஆவார். அவர் வெடுமருந்து தயார் செய்து வியாபாரம் செய்துவந்தார். ஆல்ஃப்ரட் நோபெல் சிறு வயதில் தன் தகப்பனாரிடமிருந்து பொறியியல் கற்றுக்கொண்டார். வெடிமருந்து செய்வதில் ஆர்வமுடையவராகவும் இருந்தார்.

ஸ்டாக் ஹோமில் வியாபாரம் சரி வர நடக்காததால் 1837ல் இம்மானூயல் ரஷ்யாவிலுள்ள St. Petersburg சென்று வெடி மருந்து தயார் செய்யும் தொழில் ஆரம்பித்து செழிப்புடன் நடத்தினார். பிறகு 1842ல் தன் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டார். ஆல்ஃப்ரட்டை தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். 16 வயதிலேயே சிறந்த வேதியியலராகவும் ஆங்கிலம், ஃப்ரென்ச், ஜெர்மன், ரஷ்யன், ஸ்வீடிஷ் மொழிகளில் சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டார் ஆல்ஃப்ரெட்.

ஆல்ஃப்ரெட் நோபெல் 1850ல் ரஷ்யாவிலிருந்து பாரிஸ் வந்து ஒரு வருடம் வேதியியல் படித்தார், பிறகு நான்கு வருடம் யுத்தக் கப்பலுக்கு (War ship) மானிடர் (Monitor) தயார் செய்யும் ஜான் எரிக்சன் என்பவரின் மேற்பார்வையில் அமெரிக்காவில் பணிபுரிந்தார்.

இதன் பிறகு St. Petersburg-க்குத் திரும்பி, தகப்பனாருடைய தொழிற்ச்சாலையில் பணிபுரிந்தார். 1856ல் போர் (Crimean War) முடிந்ததும் தொழிலில் வருமானம் குறைய ஆரம்பித்தது. சமாதான காலத்தில், போர் நடக்கும் போது இருந்த அளவிற்கு வியாபரம் இல்லை. 1859ல் தொழிற்சாலையை மூடும் நிலைக்கு வரவே ரஷ்யாவிலிருந்து ஸடாக் ஹோமுக்கு குடும்பத்துடன் திரும்பினர்.

தகப்பனாருடைய எஸ்டேட்டில் ஒரு சிறிய சோதனைச் சாலையில் வெடி மருந்து தயாரிக்கும் விதத்தில் ஆராய்ச்சியில் இறங்கினார். நைட்ரோ கிளசிரைன் (Nitroglycerin) என்னும் திரவம் மிகுந்த சக்தி வாய்ந்த வெடிமருந்து எனக் கண்டுபிடித்தார். ஆனால் அது எளிதில் ஆவியாகக்கூடிய தன்மை உடையதால் அதைப் பாதுகாப்பான முறையில் கையாளக் கடினமாக இருந்தது. அப்படி இருந்தும், நோபெல் 1862ல் நைட்ரோகிளசரைன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை நிறுவினார். அதே சமயம் இதைப் பாதுகாப்பான முறையில் எப்படிக் கையாளுவது என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். 1863ல் அதில் வெற்றியும் கண்டார். இதன் பிறகு அவர் புகழ் பரவ ஆரம்பித்தது, வருமானமும் அதிகரித்தது.1865ல் இன்னும் சிறந்த வகையில் வெடிக்க வைக்கும் விதத்தை (Blasting cap) கண்டுபிடித்தார். இது தற்போது உபயோகிக்கப்படும் சக்தி வாய்ந்த வெடி மருந்து ( high explosives) உபயோகத்திற்கு வழிகோலிற்று.

1867ல் நோபெலின் இரண்டாவது முக்கியக் கண்டுபிடிப்பு டைனமைட்(dynamite). இந்தக் கண்டுபிடிப்பால் அவருடைய புகழ் உலகம் பூராகப் பரவியது.

1895ல் அவர் உடல் நலம் க்ஷீணமடைய ஆரம்பித்து டிசம்பர் 10, 1896ல் San Remo, Italyல் காலமானார்.

இவர் ஏற்படுத்தியதுதான் நொபெல் பரிசு.

அவர் எழுதிய உயிலின் சாராம்சம்

மீதமுள்ள என் சொத்துக்கள் கீழ்க் கண்டவாறு உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

என் உயிலை செயல்படுத்துபவர்கள் (Executors) என் சொத்துக்களைப் பாதுகாப்பான நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் (invest in safe securities). அதில் கிடைக்கும் வருடாந்திர வட்டிப் பணம், சமுதாயத்திற்கு மிகப் பெரிய அனுகூலம் செய்தவர்களுக்குப் பரிசாக அளிக்கப்படவேண்டும்.

வருடாந்திர வட்டியானது ஐந்து சம பாகங்களாகப் பிரிக்கப்படவேண்டும். ஒரு பாகம் இயற்பியலில் புதிதாக உண்டாக்கிய (Invention) அல்லது கண்டுபிடித்த (Discovery) நபருக்கும், ஒரு பாகம் வேதியியலில் முக்கியமான கண்டுபிடிப்போ அல்லது சீர்திருத்தம் (dicovery or improvement) செய்த நபருக்கும், ஒரு பாகம் உடல் கூறு அல்லது மருத்துவம் (Physiology or medicine) இவற்றில் முக்கியமான கண்டுபிடிப்பு செய்த நபருக்கும்; ஒரு பாகம் இலக்கியத்தில் மிக உன்னதமான படைப்பைத் தந்த நபருக்கும், ஒரு பாகம் சமாதனத்திற்கும், சேனைப் படை குறைப்புக்கும் பாடுபடுகிற நபருக்கும் பரிசாக அளிக்கப்பட வேண்டும்.

இயற்பியல், வேதியியல் இவ்விரண்டிற்கும் Swedish Academy of sciences பரிசு வழங்க வேண்டும்; உடல் கூறு அல்லது மருத்துவம் இதற்கு ஸ்டாக் ஹோமிலுள்ள Karolinska Institute பரிசு வழங்க வேண்டும் என்றும்; இலக்கியத்திற்கு Academy in Stockholmமும்; சமாதானத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு Norwegian Storting நியமித்த ஐந்து பேர் கொண்ட குழுவும் பரிசளிக்க வேண்டுமென்றும் உயிலில் குறிப்பிட்டார்.

மேலும் பரிசு வழங்குவதில் எந்த தேசத்தை சேர்ந்தவர் என்று பாகுபாடு செய்யாமல் மிகவும் தகுதியானவர்கள், அவர் ஸ்கண்டினேவியரோ இல்லையோ, தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று உயிலில் தெரியப்படுத்தினார்.

நோபெல் பரிசின் மதிப்பு (Value of Nobel Prize) U.S.$ 5,89,60,000/- ஆகும்.

பார்வமணி

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button