Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
உலகம் போற்றும் அறிஞர்கள்
பார்வமணி


சர் சி.வி. இராமன்

Indian Scientist Sir C.V. Raman
குழைந்தைகளே,

நோபெல் பரிசு பெற்ற ஒரு இந்திய விஞ்ஞானியைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சந்திரசேகர வெங்கடராமன் (சர் சி.வி. இராமன்).

இராமன் 1888-ஆம் வருடம் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவரது தந்தை சந்திரசேகரய்யர். தாயார் பார்வதி அம்மையார். தஞ்சைக்கருகிலுள்ள புரசைக்குடியைச் சேர்ந்தவர்.

1892-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் இந்துக் கல்லூரியில் பௌதிக போதக ஆசிரியராக சந்திரசேகரய்யர் பணியேற்று, குடும்பத்துடன் விசாகப்பட்டினத்தில் குடியேறினார்.

இளைமையிலிருந்தே இராமன், பௌதிகம், கணிதம், இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்கினார். சங்கீதத்திலும் அவருக்கு அதிக விருப்பம் உண்டு.

இராமன் பதின்மூன்றாவது வயதில் எஃப்.ஏ. (இப்போதைய ப்ளஸ் 2) தேர்ச்சி அடைந்து, பி.ஏ. படிப்பதற்காக சென்னை வந்தார். பௌதிகத்தை முதன்மையான பாடமாகக் கொண்டு ராஜதானிக் கல்லூரியில் மாணாக்கரானார். 1904ல் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தார். இராலி ப்ரபு (Lord Rayleigh), ஹெம் ஹோல்ட்ஸ் (Helm holtz) இவர்கள் இயற்றிய பௌதிக விஷயங்களை எளிதில் கற்றுணந்தார்.

ஒரு நாள் இவர் நண்பர் அப்பா ராவ் பரிசோதனை செய்தபோது ஒரு கிரியை தவறாக செயல்பட்டது. ஏன் அப்படி ஆயிற்று என்று புரியாமல் தன் ஆசிரியர் "ஜோன்ஸ்" என்பவரிடம் கூறினார். ஆசிரியர் பதில் ஒன்றும் கூறவில்லை. ஆனால் திரு இராமன் அது எதனால் என்று ஆராய்ந்து, அப்படி ஏற்படாமல் இருக்க வழியும் வகுத்து, ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதினார். திரு ஜோன்ஸ் அவர்களிடம் தந்து "பிழை திருத்தித் தாருங்கள், பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன் என்றார்.

திரு ஜோன்ஸ் இராமனின் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்காமல் வைத்துவிட்டார். இதை அறிந்த இராமன் ஆசிரியரிடம் இருந்து திரும்பப் பெற்று அந்தக் கட்டுரையை இலண்டலில் உள்ள ஒரு சிறந்த விஞ்ஞானப் பத்திரிகையின் ஆசிரியருக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையை அவர்கள் பிரசுரித்தனர்.

கட்டுரை வெளிவந்த பத்திரிகையை, இராமன் ஆசிரியர் ஜோன்ஸிடம் காண்பித்தார். ஆசிரியர், தனக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டு, அது பிரசுரமாகி இருப்பதைப் பார்த்து முகம் சுளித்தாலும் பிறகு இராமனைப் பாராட்டினார். இதன் பிறகு எம்.ஏ. படித்துக்கொண்டிருக்குபோதே இராமனை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை ஜோன்ஸ் செய்தார். ஆனால், மருத்துவ நிபுணர்கள் அயல் நாட்டில் வாழ இன்றியமையாத தேக நிலையை இச்சிறுவன் பெறவில்லை என்று முடிவு செய்த்ததால் இவர் இங்கிலாந்து செல்ல முடியவில்லை.

1907-ஆம் ஆண்டு எம்.ஏ. பரிட்சையில் முதல் வகுப்பில் தேறிய ஒரே மாணாக்கர் இவர்தான். இதனிடையில் எஃப்.சி.எஸ். பரிட்சையும் எழுதி முதல்வராகத் தேறினார். அப்பொழுது இவருக்கு வயது 19. அந்த வயதில் டெபுடி அகௌண்டண்டு ஜெனரலாகப் பதிவு எற்றவர் இராமனே ஆவார்.

1907 முதல் 1917 வரை அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தார். அகௌண்டெண்டு ஜெனெரல் பதவியும் வகித்தார்.

இராமன் 1907-ஆம் ஆண்டில் வேலை பார்பதற்காக கொல்கத்தா சென்ற போதும், இவர் மனம் பௌதிகத்திலேயே கண்ணாயிருந்தது. இது பற்றி அடுத்த மடலில் பார்ப்போம்.

(தொடரும்)

பாகம் 2

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button