மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

தெரிந்து கொள்ளுங்கள்

இணையப் பாட்டி, குழுவினர்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

இணையப் பாட்டி

நாம் தியானத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருகிறோம். பலவிதமாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்றுதான். என் தந்தையுடன் ஒரு தடவை நான் தியானத்தைப் பற்றிப் பேச, அவர் வெட்ட வெளி தியானம் பற்றிக் கூறினார். பல விஷயங்கள் இருந்தாலும் மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். பல சித்தர்கள் இன்றும் வெட்ட வெளியில் காலில் ஒன்றுமில்லாமல் நடக்கின்றனர். இதைப்போல் திருவண்ணாமலையிலேயே பல சித்தர்கள் உலவி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பாரங்கல் மேலேயே படுத்தும் கொள்கின்றனர். இயற்கைச் சூழ்நிலையிலேயே முழுப் பொழுதும் கழிக்கின்றனர். இயற்கை உணவே உட்கொள்ளுகின்றனர். பகவான் ஸ்ரீ தத்ராத்த்ரேயரின் குருவே இயற்கைதான்.

அந்தக் காலத்தில் மரங்கள், மண், அக்னி, மலை என்று எல்லாவற்றுக்கும் பூசை செய்தார்கள். நம் கிரமங்களில் கூட வெளித் திண்ணியில் கட்டை மணை என்ற கட்டையால் ஆன உருளையாக ஒரு தலைகாணி வைத்துக்கொண்டு ஒரு வேஷ்டியை விரித்து, திண்ணையில் படுப்பார்கள், நன்கு குறட்டையுடன் தூங்குவார்கள். நமக்கு நல்ல மெத்தையிலும் ஏசி இருந்தும் தூக்கம் வருவதில்லை.

இயற்கையில் ஒரு பெரிய ரகசியமே பொதிந்து கிடக்கிறது. நல்ல ஏரியில் குளித்து, காலையில் இயறகையுடன் ஒன்றி ஒரு நடை நடக்க, நம் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி வருகிறது. இயற்கையின் ரகசியங்களைத் தெரிந்துக்கொள்ள தேக சாதனை, மனோதிடம், நம்பிக்கை அவசியம். மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிகளும் இயற்கையிலேயே வளருகின்றன, வாழ்கின்றன. நாய் தன் வயிறு சரியில்லை என்றால் புல்லைத் தின்பதைப் பார்த்திருக்கிறேன், தன் சூட்டை நீக்கப் புல் தரையில் உருளும்.

மனிதனுக்கு வரும் வியாதிகள் அவ்வளவாக மிருகங்களுக்கு வருவதில்லை, பச்சைப்புபுல்லில் நடக்க நம் பாதங்களில் இருக்கும் புள்ளிகள் {meridians} அழுந்த நல்ல toning என்று சொல்லப்படும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. காலைச் சூரிய வெளிச்சம் விட்டமின் டி கொடுக்கிறது. நதிகளுக்குள் அமுந்தி உட்க்கார water therepy என்று சொல்லப்படும் தண்ணீரால் முதுகு எலும்பு சீராகி, வலி வருவதில்லை. நீச்சல் ஒரு மிகச் சிறந்த தேகப் பயிற்சி. ஆகையால் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம், இயற்கையில் தியானம் செய்வோம்.

அன்புடன் விசாலம்

பார்வமணி

திருமதி விசாலம் அவர்கள் தத்தாத்ரேயருக்கு இயற்கை தான் ஆசிரியர் என எழுதினார். அவர்கள் யர்ர் யார்? அவருக்கு 24 இயற்கை அசிரியர்கள் எனத் தெரிகிறது. ஆனால் தெரிந்த 9 ஆசிரியார்களையும் அவர்களிடமிடுந்து தத்தாத்ரேயர் என்ன கற்றுக்கொண்டர் என்பதையும் தந்துள்ளேன்.

தத்தாத்ரேயர் மிகுந்த குதகலத்துடன், கவலை ஓன்று மில்லமால் தெருவில் நடந்து வருவதை அரசன் யது பர்த்து, "உங்கள் குரு யார்?" என்று கேட்டார். ஆதற்கு அவர், "நான் இயற்கையின் மாண்வன்" என்றார்.

"அப்படியென்றால் உங்கள் குருக்கள் யாவர்?"

"நான், பூமி, கடல் நீர், வீசும் காற்று, பிரகாசிக்கும் சூரியன், ஒளிவீசும் சந்திரன், பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும் தேனீக்கள், மீன், பறவை, கழுகு, நெருப்பு, வெற்றிடம் (space); கிராமத்துப் பெண்; இவைகள் யாவற்றிற்கும் மாணவன்."

"அவற்றிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?"

"1. பூமியிடமிருந்து பொறுமையும்; திட நிலையயும் (stabilty);

2. தண்ணீர் கொட்டினாலும் எடுத்தாலும், கடல் தன்னுடைய் கொள்ளளவையும்,தோற்றத்தையும் எப்படி மாறாமல் வைத்துக்கொள்கிறதோ, அதேபோல் யார் என்னை ஏசினாலும், இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், கண்டித்தாலும், எனக்கு வித்தியாசமே கிடையாது. என்னுடைய இயல்பு மாறாமல் தண்ணீரைப்போல் சுத்தமாக இருக்கும்.

3. நெருப்பு எதையும் எரித்துவிடும். சுத்தமான் பொருளோ, அசுத்தமன பொருளோ, எதுவானாலும், எரிந்த பொருள் சுத்தமாகிவிடுகிறது. அதேபோல் இந்திரியங்கள் மூலமாக எது எனக்குள் சென்றாலும் அதை என் ஞானச்சுடரால் புடமிட்டு மாற்றிக்கொண்டுவிவேன்.

4. காற்றினிடமிருந்து கற்றுக்கொண்டது, சுதந்திரமாகக் காற்றை போல் எங்குவேண்டுமானாலும் திரிவது.காற்றை யர்ரும் கட்டுப்படுத்த முடியாது, அதற்குக் கட்டளை இடமுடியாது. காற்றோட்டத்தினால் சுற்றுப்புறம் சுத்தமாகிறது. அது போல் நான் செல்லும் இடமெல்லாம், நற்செய்திகளையும், நல்ல எண்ணங்களையும், இரக்கத்தன்மையையும், கருணையயும் பரப்புகிறேன். காற்றைப் போல் நனும் ஒரு இடத்தில் தங்காமல் சென்று கொண்டிருக்கிறேன்.

5. வெற்றிடம் (Space) கற்றுக்கொடுத்தது என்னுடைய சாம்ராஜ்யம் வெற்றிடம் போல் மிக விசாலமானது. எல்லாம் என்னுடையது ஆனால் ஒன்றும் என்னுடையது அல்ல. வெற்றிடத்தினுள் எல்லாம் அடக்கம், அனால் வெற்றிடத்தை யராலும் தனக்குள் அடக்கமுடியது. வெற்றிடம் போல் நானும் யாரையும் சார்ந்து இல்லை.

6. தேனீக்களிடமிருந்து கற்றது, தேனீக்கள், பூக்கள் இருக்கும் இடமெல்லாம் சென்று தேனைச் சேகரிப்பதுபோல், நான் ஒவ்வொரு ஊராகச் சென்று, பல மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களையும், அவர்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களையும் நான் அறிந்ததுடன் சேர்த்துக்கொள்வேன்.

7, 8. பறவையும் என் குருதான். ஒரு நாள் ஒரு பறவை மாமிசத் துண்டை கவ்விக்கொண்டு பறப்பதைப் பார்த்தேன். அது உயரப் பறந்து கொண்டிருந்தது. ஒரு கழுகு அதைப் பின் தொடர்ந்தது. ஏன் அந்தக் கழுகு இந்தச் சிறிய பறவையைப் பின்தொடருகிறது? ஏனென்றல் சிறிய பறவையின் அலகில் சாப்பிடக்ககூடிய பொருள் உள்ளது. பாதுகாப்பான இடத்தைத் தேடி சிறிய பறவை அலைந்தது. பாதுகப்பான இடம் எதும் காணப்படாததால் தன் வாயில் இருந்த மாமிசத் துண்டைக் கீழே போட்டு விட்டது. கழுகும் சிறிய பறவையைத் துரத்துவதை விட்டு விட்டது. அந்தக் கழுகுக்கு அந்த மாமிசம்தான் குறி. அந்த பறவை எனக்குப் பெற்றிருத்தல் (Possession) தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று கற்றுக்கொடுத்தது, ஆகையால் நான் எதையும் பெற்றிருக்கவில்லை.

9. ஏழை கிராமத்துப் பெண்ணிடமிருந்து கற்றது, இந்த பெண்ணை மப்பிள்ளை வீட்டார் வந்து பார்ப்பதாக இருந்தது. அவர்களுக்கு விருந்து வைக்க வீட்டில் அரிசி இல்லை. மிக ஏழை. வீட்டில் கொஞ்சம் நெல் இருந்தது. அதைக் குத்தி அரிசி செய்துதான் சமைக்க வேண்டும். வீட்டில் வேலை ஆட்கள் இல்லாததால் பெண்ணே நெல்லைக் குத்த வேண்டியிருந்தது. கையில் வலையல்கள் போட்டிருந்ததால் நெல் குத்தும் போழுது அவை "கல், கல்" என்று ஒலி எழுப்பின. அந்தப் பெண் நினைத்தால், வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கு இந்த ஒலி கேட்டு, இவர்கள் மிக ஏழை அதனால் தான் கல்யாணப் பெண்ணே நெல் குத்திகிறாள். இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. உடனே கைக்கு இரண்டு வலை விட்டு மீதி எல்லா வலையல்களை எடுத்துவிட்டாள். அப்பொழுதும் வலையல்கள் உரசும்போழுது ஒலி ஏற்ப்பட்டது.அதனால் கைக்கு ஒரு வளையலை வைத்துக்கொண்டு மற்றதை எடுத்துவிட்டாள். இப்பொழுது ஒலி இல்லை.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது நான் தனியாக இருக்க வேண்டும்.என்று. ஒருவனாக இருந்தால் சந்தோஷம். இருவரானால் சச்சரவு, அதற்கு மேல் சண்டைதான்.

பார்வமணி

ராஜராஜ்

குஜராத்தில் குரு தத்ராத்த்ரேயரக்குத் தனி கோயில் உள்ளது. இங்கு குரு தத்ராத்த்ரேயர் பிரசித்தம். அவரைப் பற்றி அறிய செய்திக்கு மிக்க நன்றி.

ராஜராஜ்

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com