மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

தெரிந்து கொள்ளுங்கள்

பார்வமணி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

உலகம் தோன்றியது எப்போது?

நாம் வசிக்கும் உலகம் ஏறக்குறைய 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது சரி, ஜீவராசிகள் முதன் முதலில் எங்கு தோன்றின? ஒருவர் வடதுருவத்தில் என்கிறார். ராகுல் சாங்கிருதியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்ற அவருடைய புத்தகத்திலிருந்து, வால்காவில் தோன்றியதாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் பல தேசத்துப் புராணக் கதைகளை (Mythology) கவனித்தால், ஏதோ ஒரு இடத்தில் தோன்றி வாழ்ந்து இயற்கையின் சீற்றத்தினால் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களினால் ஜனங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குக் கூட்டமாகப் போயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புராணக்கதைகளிலுள்ள சில ஒற்றுமைகளைப் பார்கும்போது அப்படித்தான் இடம் பெயர்ந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

உதாரணமாக, கிரேக்கக் கதைகளையும் நம் தேசத்துக் கதைகளயும் ஒப்பிட்டு பார்ப்போம்.

இந்தியா
இங்கு பீமன்
துரியோதனன்
கிரேக்கம்
அங்கு ஹெர்குலஸ்
அகிலிஸ்

காந்தாரி துரியோதனன் உடம்பைத் தடவிகொடுக்க "ஜட்டி" மறைத்த துடை பாகத்தைத் தவிர மற்ற இடங்கள் வஜ்ரமாயின (இது கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி என்று எல்லோரும் அறிவர்).

அகிலிஸ் பிறந்ததும் அசரீரி சொன்னது, "குழந்தையை ஆற்றில் முக்கி எடு. தேகத்தில் எங்கெல்லாம் தண்ணீர் படுகிறதோ அந்த பாகம் வஜ்ரமாகிவிடும்" என்று. கை பிடித்திருக்கும் பாகம் தண்ணீர் படாது என்ற காரணத்தினால் அந்தத் தாயார் குழந்தையைக் குதிகாலைப் பிடித்துத் தூக்கி ஆற்று நீரில் தலைகீழாக முக்கி எடுத்தாள். குதிகால் தவிர மற்ற இடங்கள் வஜ்ரமாகின.

துரியோதனன் துடை முறிந்து இறந்தான், அகிலிஸ் குதிகாலில் அம்பு பாய்ந்து இறந்தான்.

ஹெர்குலிஸின் பலமும், சாதனைகளும், பீமனுடைய பலத்துக்கும் சாதனைகளுக்கும் ஒத்துப்போகின்றன.

இதிலிருந்து எனக்கு என்ன தோன்றிகிறது என்றால், ஒரே இடத்தில் குடி இருந்தபொழுது நடந்த, ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் புதிதாகக் குடி பெயர்ந்த இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி பெயர் முதலியவை மாறி இருக்கலாம்.

பார்வமணி

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com