மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

பெற்றோரியல் - அறிமுகம்

ஆகிரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Parenting - photograph: akr தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் அக்குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் நல்வாழ்வு வாழ ஆவன செய்ய வேண்டும். அது அவர்களது இன்றியமையாத கடமை.

இந்தப்பணி அன்னையின் கருத்தரிப்புக் காலத்திலிருந்தே துவங்குகிறது முதலில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கு அன்னை எவ்வாறு வாழ வேண்டும், எந்த வகையான உணவு உண்ண வேண்டும், எப்படிப்பட்ட உடற் பயிற்சிகளையும் பிற மருத்துவ உதவிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது அவசியம். குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தையின் ஆரோக்கியத்தை அறிதல், அதற்கேற்றபடிக் குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெற்றோர் அறிந்து பின்பற்ற வேண்டும்.

Parenting - photograph: akr
குழந்தை வளருகையில் அதற்கேற்ற உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள செவ்வனே பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைக்கு நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான மருத்துவ உதவிகள் எவை? அவற்றை எப்பொழுது தர வேண்டும் என்பன போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். குழந்தைக்கு வளர்ச்சிக்கேற்ற சத்தான சரிவிகித உணவு தருவது மிகவும் இன்றியமையாதது, அதிலும் தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம்.

ஒரு பெண் வாழ்நாளில் தன் பெண்மையின் பெருமையை முழுமையாக உணர்ந்து அகம் மகிழும் தருணம் தான் பெற்ற பிள்ளையை மார்போடு அணைத்து மகிழும் நேரமாகும். அத்தாய் தன் குழந்தையை நன்கு வளர்க்க அவள் முதலில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டிய கடமை தந்தையுடையதாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம், அதிலும் குறிப்பாக, குழந்தை தாய்ப்பால் உண்டு வளரும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பந்தத்தைப் போல் உலகில் பேரின்பம் தரும் பொருள் வேறெதுவும் கிடையாது.

Parenting - photograph: akr
அத்தகைய பந்தம் சிறப்பாக அமையத் தாய் தன் குழந்தையுடன் அதிகபட்ச நேரத்தைச் செலவிட வேண்டும். அந்தக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வைப்பது, பேசச் சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் மிக்க அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் தந்தையும் தாயுடன் சேர்ந்துகொண்டு குழந்தையுடன் பொழுதை இனிமையாகக் கழிப்பதில் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை வளர வளர, பிறருடன் பயமின்றி நேயமாகப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உலகத்தோடு ஒன்றி வாழப் பழக்க வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

உலகத்தோடொட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்

Parenting - photograph: akr
என்பதை உணர்ந்து அதனைக் குழந்தைக்கும் உணர்த்த வேண்டும். குழந்தை தன்னைச் சுற்றியுள்ள பல்வேறு பொருட்களையும், பிற மனிதர்களையும், விலங்குகள், பறைவைகள் முதலான உலகத்தைப் புரிந்துகொள்ள இது ஏதுவாகும். இதனை அடுத்து வருவது கல்வி. அறிவை வளர்த்துக்கொள்ளக் கல்வி மிகவும் அவசியமாகிறது. இளமையிற் கல் எனும் சான்றோர் முதுமொழிக்கிணங்க மழலைப் பருவத்திலிருந்தே தங்கள் குழந்தைக்குக் கல்வியைப் போதித்தல் பெற்றோரின் கடமையாகும். கல்வியைப் போன்ற கேடற்ற ஒரு செல்வம் வேறெதுவும் கிடையாது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

எழுதப்படிக்கத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இது தெரியாதவன் மரத்துக்குச் சமம்.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நல்மரம்.

பள்ளி செல்லும் வயதை அடையுமுன்பிருந்தே குழந்தைக்குக் கல்வி புகட்டுதல் நலம். தான் பெற்ற மகன் நன்கு கல்வி பயின்று உலகம் போற்றும் ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குவதைக் கண்டால் மகிழ்ச்சிக்கடலில் மூழ்குவாள் தாய்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்

அத்தகைய மகிழ்ச்சியைத் தாய்க்குக் கொடுப்பது தந்தையின் கடமை.

தொடரும்...

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com