ஸ்ரீ ராகவேந்திர லய வித்யாலயா
ஆ.ரா. சந்தோஷ்

இவ்வித்யாலயம் தனது ஆண்டு விழாக்களை தவறாமல் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பிரபல சங்கீத வித்வாங்கள், லயவாத்ய மேதைகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இவ்விழாக்களை, வித்யாலயா எவ்வித லாப நோக்கமும் இல்லாது மாணவர்களின் திறமையை முன்னேற்றவும் அவர்கள் தங்களது எதிர்கலத்தில் மேடை பயமின்றி பொது மக்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகளை நடத்தவும் நடத்தி வருகிறது. இதன் வழியாக மாணவர்களது குடும்பங்களை இசைக் குடும்பமாக ஆக்குவதற்கும், ஒவ்வொரு மாணவரையும் ஓர் இசைக் கலைஞராகவும் அல்லது இசை ரசிகராகவும் உருவாக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வருகிறது.
இந்த இசைப் பள்ளி, லய வாத்யங்களுள் முதன்மை வாய்ந்த வாத்யமாகிய மிருதங்கத்திலும் மற்றும் கடம், கஞ்சிரா, கொன்னக்கோல், மோர்சிங் போன்ற வாத்யங்களை கையாளவும் சிறந்த பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சிகள் வித்யாலயா ஸ்தாபகரும், முதல்வரும் தலைவருமான கரூர் வி. நாகேஸ்வரன் அவர்களின் நேரடிப் பார்வையில் முறையாகவும், ஒழுக்கமாகவும் தெய்வீக முறையில் போதிக்கப்பட்டு வருகின்றன. இதில் கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு வயது வரம்பு இல்லை. 4 வயது முதல் 40 வயது வரை மாணவ, மாணவிகள் இக்கலையைப் பயின்று வருகிறார்கள்.
இந்த ஆண்டு விழாக்களைத் தவிர, வருடா வருடம் இக்கலையை பிப்ரவரி மாதங்களில் ஸ்ரீ தியாக பிரம்மத்தின் ஆராதனை விழாக்களீலும் முறையாக உஞ்ச விருத்தி பஜனையுடன் பிரபல சங்கீத வித்வான்களின் ஆசியுடன் நடந்தி வருகிறது.
இதனை நடத்தும் கரூர் வி. நாகேஸ்வரன் 55 வயது மதிக்கத்தக்க துடிப்பு உள்ள இளைஞர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. இவர் இக்கலையை தனது 8வது வயது முதல் 16 வயது வரை தமது குருநாதர் மறைந்த வித்வான் ஹரிஹரசர்மா (சென்னை-திருவல்லிக்கேனி ஸ்ரீ ஜெயகணேச தள வாத்ய வித்யாலயாவின் ஸ்தாபகர்) அவர்களின் குருகுலவாசத்தில் பயின்று வெளி வந்தவர். இவர் கடந்த 14 வருடங்களாக தமிழக அரசு இசைக் கல்லுரியில் மிருதங்க பகுதி நேர விரிவுரையாளராகவும் சென்னை அரும்பாக்கம் வல்லபாச்சார்யா வித்வத் சபையின் கீழ் இயங்கி வரும் வல்லப் கல்சுரல் அகாதெமியில் இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர். இவர் இக்கலையில் செயல்முறை மட்டுமல்லாது செய்முறைப் பாடங்களையும் ஒரு பல்கலைக் கழக தரத்திற்கு இணையாக போதித்து வருகிறார்.
திறமையும் அனுபவமும்
இத்துறையில் இவர் கடந்த 36 வருடங்களாக மேடைக் கச்சேரிகளிலும் பாட போதனை முறையிலும் சிறந்து விளங்குகிறார். இவரது திறமையைப் பாராட்டி, "தாள வித்யா போதக மாமணி" என்ற பட்டம் சென்னை குரோம்பேட்டை ராகவேந்திர வித்வத் சமாஜத்திலும், "தாள விதவகாலநிதி" என்ற பட்டம். பிரபல சங்கீத வித்வான் பத்மஸ்ரீ டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களாலும் மற்றும் கடந்த 01-01-1994ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மாண்புமிகு அமைச்சர் திரு. ஆம்.எம். வீரப்பன் அவர்களால், "லய வித்யா பூஷணம்" என்னும் வாரியார் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் மிருதங்கம் வாசிப்பு, சொல்லிக்கொடுக்கும் திறமை, இவைகளைத் தவிர சங்கீத இசை நிகழ்ச்சிகளையும் லய வாத்ய நிகழ்ச்சிகளையும் புதுமையான முறையில் எவராலும் நடந்த இயலாத முறையில் தாளயக்ஞம், சுருதி லயாஞ்சலி அமைத்து, ஏற்று நடத்தியும் வருகிறார். மேற்படி தாள யக்ஞம் சென்னை மற்றும் டில்லி தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் பலமுறை ஒலிப்பரப்பானது குறிப்பிடத்தக்கது, மற்ற நிகழ்ச்சிகளும் பலமுறை மேடை ஏறி உள்ளன.
மேற்படி நிகழ்ச்சிகள் யாவும் ஒலிநாடா வடிவில் வெளிவரத் தயார் நிலையிலும் பொது மக்கள் கண்டு, கேட்டு ரசிக்க மேடை கச்சேரி முறையில் நடத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளார். இதனைத் தவிர மிருதங்க செய்முறைப் பாடத்திட்டங்களை அனைவருக்கும் எளிதில் விளங்கும் முறையில் அச்சிட்டு புத்தகமாகக் கொணரவும், ஏற்பாடு செய்து வருகிறார். இவர் லய வித்யாலயத் துறை ஞானத்தைத் தவிர இசை ஞானமும் கொண்டவர். மேற்படி வித்யாலயத்தில் வாய்ப் பாட்டு இசையையும் போதித்து வருகிறார். இதனைத் தவிர மாணவர்களிடையே தேர்வுகள் நடத்தி அவர்களது திறமையை மேலும் வளர்ந்து வருகிறார். இவரது மற்றோர் சிறப்பு அம்சம், முதுநிலை மாணவர்களுக்கு (சுமார் 8 வருடம் பயின்றவர்கள்) பாட்டுக்கு வாசிக்கும், முறையையும் போதித்து வருவதுதான்.
இவரது எதிர்காலத் திட்டம், இவ்வித்யாலத்தை ஓர் பள்ளியாகக் கொண்டு வந்து, அதன் மூலம் இளம் விதவான்களையும், ஆசிரியர்களையும், உருவாக்குவதுதான். அன்னாரது லய ஞானத்தையும், மாணவர்களுக்கு பாடங்ககளைப் போதிக்கும் பிரபல சங்கீத வித்வாங்களும் லய வாத்ய வித்வானகளும் மற்றும் பொது மக்களும் பாராட்டியுள்ளார்.
வி.நாகேஸ்வரன்
நெ 86 சி.வி ராஜகோபாலன் தெரு, காஞ்சிபுரம்
அலைபேசி எண்: 9944142267, 9443574649
மின்னஞ்சல் (E-mail): vedalayam@gmail.com
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












