-
சரியான மருத்துவர்
- வினைதீர்த்தான்
யார் மருத்துவம் செய்வார்?
ஒரு கால்நடை மருத்துவரிடம் நடுத்தர வயதுள்ள ஒருவர் வந்து, "ஐயர் நீங்கள்தான் எனக்கு உள்ள நோய்கள் எல்லாம் போக்க வேண்டும். மிகுந்த சிரமத்திற்கு இடையில் 15 நாட்கள் விடுப்பில் வந்துள்ளேன், என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்." என்றார்.
மருத்துவர், "நான் கால்நடை மடுத்துவர்" என்றும், "மனிதர்களுக்கு வைத்தியம் பார்ப்பதில்லை" என்றும் சொன்னார்.
வந்தவர், "இல்லை ஐயா, நீங்கள்தான் பொருத்தமானவர், அவசியம் மருத்துவம் பார்க்க வேண்டும்" என்றும் வேண்டினார்.
மருத்துவர் மீண்டும் மறுத்தபோது வந்தவர் கேட்டார், "மருத்துவரே, நான் மறுநாள் வேலைப்பளுவை எண்ணிக்கொண்டு 'கோட்டான்' போல இரவு முழுதும் துங்காமல் விழித்திருக்கிறேன். அதிகாலை குதிரைபோல எழுந்துகொள்கிறேன். வேலைக்கு ஓடுகிறேன். கழுதை போல வேலை செய்கிறேன். மேலாளருக்கு எதிரே நாயைப்போல வால் ஆட்டுகிறேன். பிறருக்கு இரங்குவது போல் முதலைக் கண்னிர் வடிக்கிறேன். குழந்தைகள் முன்னே குரங்குபோல் குதிக்கிறேன். எளியோரைப் பார்த்துப் பார்த்துப் புலி போல் உறுமுகிறேன். வீட்டில் மனைவிக்கு முன்னே எலி போல் உண்ர்கிறேன். இவற்றுக்கெல்லாம் யார் ஐயா மருத்துவம் பார்ப்பார்கள்?" என்று.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














