பொங்கலோ பொங்கல்
காயத்ரி
பொங்கலின் சிறப்பு!
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியைக் கடந்து போகிறான். 12 மாதமும் 12 ராசியைக் கடந்து போகையில் மகரத்தில் பிரவேசிக்கும் போது மட்டும் என்ன சிறப்பு? ஆடிக்குப் பின் அவரோகண கதியில் இருந்து வந்த சூரியன், தன்னுடைய நீச்ச வீடான துலாத்தைக் கடந்து தன்னுடைய மகன் சனியின் வீடான மகரத்திற்குப் பிரவேசம் செய்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாகவே மகர சங்கராந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சூரியனை சிறப்பாக வழி படுகிறோம். மகரத்திலிருந்து சூரியன் மீண்டும் ஆரோகண கதிக்குச் செல்வான். இதில் ஒரு விந்தை என்னவென்றால், சூரியன், சனி இருவரும் மகன் தந்தை உறவு என்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்! பகைவராய் இருந்தாலும் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதாவது ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் பிதாவிற்குக் காரகன் சூரியன். அந்தக் குழந்தைக்கு உயிரை அளிப்பவன் ஆயுள்காரகன் சனி.
எனவேதான் ஆயுள்காரகன் ராசியில் பிதுர்க்காரகன் சூரியன் பிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒளிக்கு அதிபதி சூரியன். ஒளி இல்லையேல் உலகில் உயிர் ஏது? பயிர் ஏது? உலகில் சிருஷ்டி இல்லை. உயிர் இல்லை. நம் வாழ்விற்கு ஜீவாதாரமாக இருக்கும் கிரகமான சூரியனின் சிறப்பை உலகுக்கு அறிவிக்கவே அன்று இந்தியாவில் பல பாகங்களிலும் பொங்கல் பல பெயரில் பல விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. தேவர்களின் பகல் பொழுதான உத்திராயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமல்ல. உத்திராயணயத்தின் முதல் மாதமான தையின் வரவை அறிவிப்பது சூரியனின் சஞ்சாரம்தான். அந்த அறிவிப்பை செய்பவருக்கு அன்று விசேஷ பூஜை. சரிதானே? மனிதனுக்கு உணவு அல்லது அன்னம் மிகவும் இன்றியமையாதது.
அன்னம் நமக்கு பிராணனைக் கொடுப்பது. அதனால்தான் 'அன்னமயா, பிராணமயா" என்ற சொற்றொடர் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. ஆகவேதான் பொங்கல் பண்டிகை அன்று பொங்கல்தான் பிரதான உணவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. எதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான் நாயகனாகக் கொண்டாடப்படுவார். நவக்கிரகங்களில் நாயகனாக விளங்குபவர் சூரியன். அதனால்தான்" ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" என்று புகழப்படும் நாயகனான சூரியனுக்கு அன்று அவ்வளவு முக்கியத்துவம்!
பொங்கல் என்ற வார்த்தைக்கு உயர்ச்சி, பொலிதல், பொலிவு என்று பொருள். மனிதன் வாழ்வில் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே அன்று "பொங்கலோ பொங்கல்" என்று கூறி மகிழ்கிறோம்.
"பொங்கலோ பொங்கல்"
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














