வருக புத்தாண்டே!
காயத்ரி
புத்தாண்டுக் கவிதை
அன்புக் கண்ணியின் எண்ணிக்கை கூடுவதால் அது
பொருள் பொதிந்த ஒன்றாகிறது.
புத்தாண்டு அது நாள் காட்டியில் மற்றொரு நாள் என்றாலும்,
சேர்ந்து பேச தோழமையும், நேசமும் நிறைந்திருப்பதால், அது
நினைவில் நிற்கும் நாளாகிறது.
புத்தாண்டு-அது நாள்காட்டியில் மற்றொரு நாள் என்றாலும்,
கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் சிறகு முளைப்பதால், அது
கல்வெட்டில் பதித்த எழுத்தாகி விடுகிறது.
புத்தாண்டு - அது நாள் காட்டியில் மற்றொரு நாள் என்றாலும்
புதுமைக்கு வித்திட்டு, பூ(பா)க்களை மலரச் செய்வதால் அது
புதுமைக்கு புகலிடமாகி விடுகிறது.
புத்தாண்டு அது நாள் காட்டியில் மற்றொரு நாள் என்றாலும்,
இளமை நமை விட்டு நழுவுவதை சொல்வதால் அது
பக்குவத்தை தரும் ஆசானாகிறது.
புத்தாண்டு அது நாள் காட்டியில் மற்றொரு நாள் என்றாலும்
பழைய கசப்புகளை, கோபங்களை மறக்கச் செய்வதால் அது
புதியவற்றை பதிவு செய்யும் ஏடாகிவிடுகிறது.
பாகம் பிரியாள்.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















