மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
என்.வி.சுப்பராமன்
|
|
எண்ணிப் பாருங்கள்!
1 அவசரமாகப் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். எதிரில் வரும் பையன் சைக்கிளிலிருந்து விழுந்து விடுகிறான்.
2 பொழுது போகாமல் நடந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பெரியவர் சைக்கிளிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறார்.
3 நீங்கள் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் திசையிலேயே ஒரு நண்பர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
4 உங்கள் வகுப்புத் தோழன், புரியாத காரணத்தால், வீட்டுக்கணக்குச் செய்யாமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கி, வேதனைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்.
5 முக்கியமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் தாயார் கடைக்குப் போகுமாறு பணிக்கிறார்.
6 டி.வி. சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் அன்னை ஒரு வேலை கொடுக்கிறார்.
7 கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்ததால், ஹோம் வொர்க் செய்யவில்லை. உங்கள் ஆசிரியர் காரணம் கேட்டுக் கோபிக்கிறார்.
8 விளையாடிக் கொண்டிருக்கும் போது, உங்கள் தவறால் உங்கள் நண்பனுக்கு காயம் ஏற்படுகிறது.
9 படித்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்கள் தந்தையார் கோவிலுக்குக் கூப்பிடுகிறார்.
10 நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, உங்கள் பாட்டி கோவிலுக்குக் கூப்பிடுகிறார். முதலில் பதிலைத் தாளில் எழுதி, பின் சாகவாசமாக உங்கள் நண்பருடன் அல்லது தந்தையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அநுபவத்தை "மழலைகள்.காம்" ஆசிரியருக்கு மின்னஞ்சல் (ஈ.மெயில்) செய்யுங்கள். என்.வி.சுப்பராமன், சென்னை |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |