மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

கற்க கசடற

பார்வமணி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Study methods
குழைந்தைகளே,

இப்பொழுதெல்லாம் உங்களுக்கு புத்தக மூட்டை சுமப்பதோடு கூட, பாடங்களும் அதிகமாகி விட்டன. படிப்பதற்கே நேரம் போதாது. இதில் மார்க்கு அதிகம் பெற்றவர்க்கே மேற்படிப்பிற்குத் தகுதி வாய்ப்புக் கிடைக்கிறது.

பாடங்களை மனதில் பதியவைக்கச் சில வழிமுறைகள் கூற விரும்புகிறேன்.

1.ஒரு அத்தியாயம் (chapter) எடுத்துக் கொள்ளவும். அதில் முதல் பத்தியை (para) படிக்கவும். மறுபடியும் அதே பத்தியைப் படிக்கவும், தொடர்ந்து அடுத்த பத்தியைப் படிக்கவும். பிறகு முதல் பத்தியிலிருந்து ஆரம்பித்து, 2 ஆவது, 3ஆவது படிக்கவும். இப்பொழுது முதல் பத்தியை விட்டுவிட்டு 2.3.4ஆவது, 3,4,5 ஆவது என்று அத்தியாயம் முடியும் வரை படியுங்கள். இது முடிந்ததும் அத்தியாயம் முழுமையும் ஒரு தடவை படிக்கவும். இதனால் அந்த அத்தியாயத்தை நான்கு முறை படித்ததாக ஆகும்.

உங்கள் மனதில் ஆழமாக, படித்த பாடம் பதிந்துவிடும். மறக்கவே மறக்காது. "சரிதான், படிக்கவே நேரத்தை காணும் இதில் நான்கு முறை படிக்கனுமா?" என்கிறீர்களா? முயன்றுதான் பாருங்களேன். இந்த முறையை நான் முயன்று பயனடைந்துள்ளேன்.

2. உங்கள் கூடப் படிக்கும் நண்பர் ஒருவரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பாடத்தில் ஒரு அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை இருவரும் தனித்தனியே படித்துவிட்டு, சாயந்திரம் இருவரும் வாக்கிங் (evening walk) போகும்பொழுது படித்த பாடத்தைப் பற்றி உரையாடுங்கள் (discuss the subject). வீட்டிற்கு வந்ததும் அந்தப் பாடத்தில் எதையெல்லாம் உரையாடல் (Discuss) செய்யவில்லையோ அதை சிகப்புக் கலரில் மார்க் செய்யுங்கள். மறுபடியும் படித்து விட்டு மறு நாளும் உரையாடல் செய்யுங்கள். மறு நாளும் ஏதாவது உரையாடல் செய்ய விட்டுருந்தால் அந்த இடங்களை நீலக் கலரால் மார்க் செய்யவும். நீங்கள் பரிட்சையின் பொழுது நீல நிறத்தில் மார்க் செய்ததை மாத்திரம் படித்தால் போதும், மற்றவை உங்கள் மனதில் ஏற்கனவே பதிந்துள்ளது.

3.இந்த முறை தூக்கத்தில் பாடங்களை கற்றுக்கொள்வது. இந்த முறை ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒன்று. முழித்துக்கொண்டு ஆறு மாதத்தில் கற்றுக்கொள்வதை, தூங்கும் பொழுது ஆறு மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாமாம்.

நீங்கள் பாடம் படிக்கும் பொழுது டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் மற்ற வேலையில் இருக்கும்பொழுது-அதாவது குளிக்கும் பொழுது, உணவு சாப்பிடும்பொழுது, தூங்கும்பொழுது டேப் ரெகொர்டரை ஆன் செய்து நீங்கள் பதிவு செய்த பாடத்தைக் கேளுங்கள். உங்கள் கவனம் பாடத்தில் இல்லாவிட்டாலும் உங்கள் உள் உணர்வு (Subconscious) பாடத்தை கிரகித்துக் கொள்ளும்.

கிரகித்த பாடத்தை சொல்லிப் பார்க்க முடியாவிட்டாலும் அந்தப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் எழும்பொழுது தானாகவே நினவுக்கு வரும்.

( இந்த முறையை நான் முயன்று பயனடைந்துள்ளேன்.)

இந்த முறைகளில் உங்களுக்கு எது சுலபமாக தோன்றுகிறதோ அதை முயன்று எனக்கு feedback தந்தால் நல்லது.

பார்வமணி

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com