மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

வெற்றிக்கு வழி

அத்தியாயம் 2 - செபரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Article on personality development: Ways to success

இன்றைய சிந்தனை

“நீங்கள் சொல்வது எப்பொழுதுமே சரியாகத்தான் இருக்க வேண்டுமா?”
Based on “Thought for the Day: Do You Need to Be Right?” By Dianna Podmoroff.

பிறருடன் (குறிப்பிட்ட நோக்கம் நிறைவேற) இணங்கிப் போவது அல்லது அனுசரித்துப் போவது, என்பதனை விட, நீங்கள் சொல்வதே சரியென (வரட்டுப் பிடிவாதத்துடன்) இருப்பது உங்களுக்கு மிக முக்கியமா? அறிவும், படிப்பும் மிக மதிப்பிடமுடியாத பொருட்களாக இருக்கும் இந்த உலகத்தில், எப்பொழுதும் நாம் சொல்வதே சரியெனச் சொல்லும் எண்ணச் சுழலில் சிக்கிக் கொள்வது மிக எளிது. நீங்கள் கெட்டிக்காரராக, படித்தவராக இருக்கையில், சற்றே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சொல்வது கூட (சில சமயங்களில்) சரியாக இல்லாமலும் இருக்கலாம் அல்லவா? வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும், வெற்றி பெறுவது உங்கள் நோக்கமாக இருக்குமானால், மேலே படியுங்கள்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் கூட, அதனை உறுதி செய்வது, பிறருடன் உங்களுக்கிருக்கும் உறவினை பாதிப்பதாக இருக்குமானால், ஒத்துப் போவதில் சிக்கல்களை உருவாக்குமானால், அல்லது வாதப் பிரதிவாதங்களினால் கால விரையம் ஏற்படுத்துமானால், நீங்கள் சொல்வதே சரியெனப் பிடிவாதமாக இருப்பதினால் பலனுண்டா?

மற்றவர்கள் சொல்வதும் சரியாக இருக்கக்கூடும் என மனத்தளவில் கூட, நீங்கள் அனுமதித்தால், மற்றவர்கள் கண்ணோட்டத்தில், “இறுதி வரை வெறும் வரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் மோசமான மனிதராக இல்லாது, கலந்தாலோசிப்பதன் மூலம், ஒரு உடன்பாட்டிற்கு வர விரும்பும் நல்ல மனிதர் இவர்” என உங்களைப்பற்றிய ஒரு நல்ல கருத்து உருவாகக் காரணமாக இருப்பீர்கள். பிறருடன் கருத்துப் பறிமாற்றங்கள் செய்து கொள்ளும் பொழுது, எப்பொழுதேனும், ஒரு சில முரண்பாடுகள் காரணமாக, ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாகுவதனை உணர நேர்ந்தால், (உங்கள் எதிராளியிடம்) “நீங்கள் சொல்வது கூட ஒரு வேளை சரியாக இருக்கலாம்” எனச் சொல்லப் பழகுங்கள். உடனடியாக அந்த இறுக்கமான சூழ்நிலை மாறுவதனை நீங்களே, கண்கூடாகப் பார்க்கலாம்.

சில நேரங்களில், நீங்கள் சொல்வது சரியெனச் சொல்வது மட்டுமே உங்கள் முன் இருக்கும் ஒரே வழியாக இருக்கலாம். ஆயினும் எப்பொழுதுமே நான் சொல்வதுதான் சரியென, அதனை ஒரு மந்திரம் போல், நீங்கள் நினைக்க நேர்ந்தால், ஒரு கணம் நிதானித்து, அது ஏன் அத்தகைய முக்கியமானதாக ஆகிவிட்டது என ஆழ்ந்து சிந்திக்க வேண்டுவது அவசியமாகிறது.

எந்தக் காரணங்களால் மற்றவர்கள் சொல்வது சரியாக இருக்கக்கூடும் எனக் கண்டுபிடிப்பது நல்ல பலனைத் தரும். இருவருமே வெற்றி பெற்றவர்களாக இருப்பதற்கான (WIN - WIN Solution) பேச்சு வார்த்தைகளைத் துவக்க, இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இருவருமே வெற்றி பெற்றவர்களாக இருப்பதற்கான (WIN - WIN Solution) பேச்சு வார்த்தை – விட்டுக் கொடுத்து வினையாற்றுவதனால், வெற்றி பெறுவது !! எப்படி என்பதனைப் பார்ப்போம்.

•யாரோ ஒருவர் தொடர்ந்து உங்களால் (முறையற்ற வகையில், அவர்களுக்கு உரிமையில்லாத) சலுகைகளை அனுபவிக்கிறார்கள் என நீங்கள் நினக்கிறீர்களா? அல்லது
•நீங்கள் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராட வேண்டியிருக்கிறதா? அல்லது
•உங்களுக்கு வேண்டிய (உரிமையுள்ள) வாய்ப்பு வளங்களைப் பெற, பிறரைச் சார்ந்து நிற்க வேண்டியிருக்கிறதா? அல்லது
•உங்களின் நேரடி ஆளுமைக்குள் இல்லாத சிலரின் உதவி உங்களுக்குத் தேவைப்படும் வகையில் அதனைப் பெற போராட வேண்டியுள்ளதா?

இவையெல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்” என்றால், உங்களுடைய பேச்சு வார்த்தை மூலம் இருவருமே வெற்றி பெற்றவர்களாக இருப்பதற்கான (WIN - WIN Solution) திறமையினை வளர்த்துக் கொள்ள வேண்டுவது மிகவும் தேவையான ஒன்றாகிறது. மேலே படியுங்கள்.

எதிர்பார்க்கும் நல்ல விளைவினை ஏற்படுத்தும் பயனுள்ள பேச்சு வார்த்தைகள், நீங்கள் வேண்டுவதற்கும், பிறர் தேவை என உணர்வதற்கும் இடையிலே ஆன முரண்பாட்டினைத் தீர்க்க உதவுகிறது. பேச்சு வார்த்தை மூலம் இருவருமே வெற்றி பெற்றவர்களாக இருப்பது என்பதன் குறிக்கோள், இரு தரப்பினருக்குமே ஏற்புடைய ஒரு தீர்ப்பை அளித்து, அதன் இறுதியில், இரு தரப்பினரும் எதாவது ஒரு வகையில், தாங்கள் வென்றதாக மனத் திருப்தி ஏற்படச் செய்வதுமாகும். சூழ்நிலையினைப் பொறுத்து, பல்வேறு வகையான பேச்சு வார்த்தைப் பாணிகள் இருக்கின்றன.

எங்கு நீங்கள் மறுபடியும் அந்த மனிதர்களுடன் இனி ஒரு பொழுதும் தொடர்பு கொள்ள வேண்டிய எதிர்பார்ப்புக்களில்லையோ, எங்கு அவர்களின் நல்லெண்ணம் உங்களுக்குத் தேவையில்லாத ஒன்று என இருந்தால், அங்கெல்லாம் “ கடுமையுடன் விளையாடுவது” என்பதும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில், இதர மனிதர்கள் தோற்பதைப் பொருட்படுத்தாததும், ஏற்புடைத்தே!

பல மனிதர்கள் வீடு வாங்க, விற்க முனையும் பொழுது, இதனடிப்படையில்தான் செயலாற்றுகிறார்கள். அதனாலேதான், வீடு வாங்குவது என்பது அத்தகைய முரண்பாடுகளுடையதாய், விரும்பத்தாகாத ஒரு அனுபவமாக இருக்கிறது. இது போலவே, கலந்தாலோசனை செய்து, பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு முடிவுக்கு வருவதில், ஒரு பெரும் ஆதாயம் இருக்குமானால், அப்பொழுது, (நம்மை) நன்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு, நியாயமான வகையில், உணர்ச்சிபூர்வமாகப் பேசி, ஆதாயம் அடைய முயலுவது ஏற்புடைத்தது. மிகப் பெரிய விற்பனைக்குரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு, இது பழக்கமான ஒன்றாக இருக்கும்.

இந்த இரு அணுகுமுறையில் எதுவுமே, பொதுவாக, உங்களுடன் தொடர்ந்த உறவு வைத்திருக்கும் மனிதர்களுடன் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கச், சிறப்பான ஒன்றாக இருக்காது. ஒருவர் கண்டிப்பும் கறாருமாகப் பேசினால், அது மற்றொருவருக்குப் பேரிழப்பாக முடியும். இது எவருமறியாதபடி, சற்றே நாட்கள் தள்ளி, பொருத்தமான பதிலடி கொடுப்பதில் போய் முடியும். அது போலவே, தந்திரமாக, சூழ்ச்சியின் மூலம் சுரண்டலும் பேச்சு வார்த்தையின் பொழுது பயன்படுத்தப்படுமானால், (அது) நம்பிக்கையினைக் குறைத்து, குழுவாகப் பணியாற்றுவதனை, அழிக்கும். சூழ்ச்சியின் மூலம் சுரண்டல் செய்யும் மனிதர், பேச்சு வார்த்தைகள் அடிக்கடி நடக்காத பொழுது, சிக்கி கொள்ளாது போகலாம். ஆனால், எங்கு வழக்கமாக, மனிதர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறார்களோ, அங்கு இது நிகழ்வது இல்லை. இங்கு நேர்மையும் திறந்த உள்ளமும் அநேகமாக எப்பொழுதும் அடிப்படைக் கொள்கைகளாக இருக்கிறது.

வெற்றிகரமான ஒரு பேச்சு வார்த்தையினுக்கு உங்களை ஆயுத்தப்படுத்திக் கொள்வது.…
கருத்து வேறுபாடுகளின் அளவைப் பொறுத்து, வெற்றிகரமான ஒரு கலந்தாலோசனை நடத்த, ஏற்ற சில ஆயுத்தங்களைச் செய்ய வேண்டுவது அவசியமாகிறது.

சிறு கருத்து வேறுபாடுகளுக்கு, அதிகப்படியான ஆயுத்தங்களைச் செய்வது, எதிர் மாறான பலன்களைத் தரும். இது அதிக நேரம் பிடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் வகையில், இந்த நேரம், அதிகப் பயனுள்ளதாக, வேறெங்கேனும் பயன்படுத்தப்படலாம். இது உங்களின் நிலையினை வலுவுடையதாக ஆக்கும் வகையில், இதர நபரின் நிலையினை வலுவற்றதாகச் செய்வதால், இது ஒரு வகையில் சூழ்ச்சியின் மூலம் சுரண்டல் என்றும் கருதப்படவும், கூடும். எனினும் நீங்கள் ஒரு பெரிய பிணக்கைத் தீர்க்க வேண்டியிருந்தால், நீங்கள் முழுமையாக (உங்களை)ஆயுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேச்சு வார்த்தையினைத் தொடங்குமுன், உங்களை முழுமையாக ஆயுத்தப்படுத்திக் கொள்ள, என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்து வரும் பகுதியில் பார்ப்போம். உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என ஆசையிருக்குமானால், விரிவாக அறிந்து கொள்ள, முன்னேறுவோம் என நம்பிக்கை ஊட்டும், முன்னேறும் வழிகளைப் பற்றி விரிவாக விளக்கும் இத்தொடர்களை, தொடர்ந்து படியுங்கள்.

அன்புடன் உங்களுக்கு உதவ - செபரா

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Your Feedback for this article
editor@mazhalaigal.com