Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

 

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
Firefox Browser - 2
Thivaji





             

முதல்ல பயர்பாக்ஸ்-ஐ பாதுகாப்போட தேவையான படி மாத்திக்கலாம். அப்புறமா உலாவலாம், சரிதானே?

ஆட் ஆன்ஸ் நிறுவ மெனுவிலே tools>add ons தேர்ந்தெடுங்க. அதிலே முதல் பட்டன் get add ons. சொடுக்குங்க. இப்ப வர சாளரத்திலே ஆடான் பெயர் தெரிஞ்சா நேரடியா தேடி எடுத்துக்கலாம். அதுவே கூட சிலதை பரிந்துரைக்கும். இல்லை browse allஐ சொடுக்கி மோசில்லா பக்கத்துக்கு போய் அங்கே விலாவாரியா வகை வகையா அடுக்கி வைச்சு இருக்கிறதை பாத்து தேவையானதை இன்ஸ்டால் ன்னு சொடுக்கினா வேலையை அது முடிச்சுடும். அப்புறமா பயர்பாக்ஸ் ஐ ஒரு முறை மூடி திறந்தா அது வேலை செய்ய ஆரம்பிச்சுடும்.

இங்கே ஒரு எச்சரிக்கை. நாம ஆட் ஆன் அதிகமா சேக்க சேக்க மோசில்லாவோட வேகம் குறைஞ்சுடும். பரீட்சை பண்ணி பாத்துட்டு தேவையானதை வெச்சுகிட்டு மத்ததை எடுத்துடலாம்.

முதல்ல ad block.

நமக்கு பல வலைப்பக்கங்களிலே கடுப்பாக்கறது விளம்பரங்கள்தான். நமக்கு இலவசமா பல விஷயங்கள் கிடைக்கிறப்ப இதை எல்லாம் ஆட்சேபிக்கக்கூடாதுன்னு ஒரு வாதம் இருந்தாலும் சில சமயம் ரொம்பவே கடுப்பாகும் அளவு விளம்பரங்கள் ஆக்கிரமிச்சுக்கும். இதை எல்லாம் தரவிறக்காம இருந்தா என்னன்னு தோணினா இந்த நீட்சி - அதாங்க ஆட ஆன் - உங்களுக்குத்தான்.

அடுத்து DownThemAll

ஒரு அருமையான வலைப்பக்கத்தை பாக்கிறோம். ஒரு டுடோரியல்ன்னு வெச்சுக்கலாம். அதிலே பல பக்கங்களுக்கு தொடுப்பு இருக்கும். ரெண்டாவது அத்தியாயம் மூணாவது அத்தியாயம்ன்னு .. இத்தனையும் ஒவ்வொண்ணா சொடுக்கி சேமிச்சு....வாணாங்க. இந்த நீட்சியை இயக்கினா ( வலது சொடுக்கிலே தேர்வு கிடைக்கும்) அந்த பக்கத்திலே இருக்கிறதை எல்லாமே பட்டியல் போட்டுடும். தேவை இல்லாததை நீக்கிட்டு இறக்குன்னா எல்லாத்தையும் சப்ஜாடா இறக்கி சேமிச்சுடும்.

FlashBlock வலைப்பக்கத்திலே இருக்கிற ப்ளாஷ் எல்லாத்தையும் தடுக்கும். இல்லை பார்க்கணும்ன்னா ப்ளாஷ் மேலேயே சொடுக்கி காட்டுன்னு சொல்லலாம்.

ImgLikeOpera

வலையிலே உலாவும்போது அதிகமா தரவிறக்கப்பட்டு போக்கு வரத்து அளவை அதிகம் ஆக்குகிறது படங்கள்தான். இந்த நீட்சி படங்கள் தரவிறக்கப்படுவதை தடுக்கும். இதிலே தேர்வுகளும் கிடைக்கும். ஏற்கெனெவே கணினியிலே இருக்கிறதை காட்டு; எல்லாத்தையும் காட்டு; ஒண்ணுமே காட்டாதே ன்னு பலவிதமா செட் பண்ணலாம்.

பயர்பாக்ஸ்லே ஆட் ஆன்ல அடுத்து பாக்கிறது முக்கியமானது. நோ ஸ்கிரிப்ட்ஸ் (NoScripts). நம்ம கணினில பல குழப்பங்களை ஏற்படுத்துவது நாம பாக்கிற சில தளங்களிலிருந்து நமக்குத்தெரியாம இயங்குகிற ஸ்கிரிப்ட்கள்தான். இந்த ஆட்ஆன் இதையெல்லாம் இயங்குறதை நிறுத்திடும். ஜாவா ஸ்கிரிப்ட்கள் மூலமா பல விஷயங்கள் ஊடாடல் முறையில கேட்டு வாங்கி நமக்கு தரப்படுகின்றன, உதாரணமா தேடல்கள். இப்படி இருக்கும் போது நாம பாட்டுக்கு இது இயங்கறதை தடுத்தா பிரயோஜனம் இல்லாம போகுமே. கவலை வேண்டாம். கீழ் பட்டியில ஆங்கில எஸ் மாதிரி ஒரு சின்னம் தெரியும் பாருங்க. அது சிவப்பா இருந்தா எதையோ தடுக்குதுன்னு அர்த்தம். அதை சொடுக்கினா மெனு விரியும். அதுல allow-ன்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியலே இருக்கும். அத பாத்தாதான் எவ்வளவு விவரம் நம்ம கணினியிலிருந்து வெளியே போகுதுன்னு ஆச்சரியமா இருக்கும். குறிப்பா பல வசதிகளை சேத்து இருக்கிற வலைப்பூக்களில பாக்கலாம். allow all scripts temporarily-ன்னு தேர்வை சொடுக்கினா எல்லா ஸ்கிரிப்ட்களும் தற்காலிகமா அனுமதிக்கப்படும். அடுத்த அமர்வுக்கு திருப்பி அனுமதி தரணும். நமக்கு நம்பகமான தளம் பிரச்சினை இராதுன்னு நல்லா தெரிஞ்சா allow.... தேர்ந்தெடுக்கலாம். அப்படி செய்தா அந்த தளம் எப்பவுமே அனுமதிக்கப்படும். தெரியாத தளங்களில இப்படி செய்யாதீங்க. வேற வழியில்லை தகவல் பெற அவசியம்ன்னா தற்காலிகமா அனுமதிக்கலாம்.

என்னப்பா, நீ பாட்டுக்கு இதை தடு அதை தடுன்னு சொல்லிகிட்டு இருக்க! எனக்கு வரையரை இல்லாத அகலப்பட்டை இணைப்பு இருக்கு. வலையில பல விஷயங்களை ஜாலியா அனுபவிக்கப் பாக்கிறேன். இதுக்கு இல்லைன்னா இணையம் எதுக்கு என்கிறீங்களா? சரிதாங்க. புரியுது. உங்களுக்கான ஆட்ஆன்களை இப்ப தரேன்.

முதல்ல பாக்ஸி ட்யூன்ஸ் (foxytunes). ரொம்ப பிரசித்தமானது. அடிக்கடி இணையத்தில பாட்டு கேட்கிறவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். இணைய பக்கத்தில பாட்டு சுட்டியை தட்டினா அது அந்த பாடலை தரவிறக்கி பாடிக்காட்டும். கூல் ஐரிஸ் (cooiris) பேருக்கு ஏத்தாப்போல கூல் தான். அளவு கொஞ்சம் அதிகம். பத்து எம்பி கிட்டத்தட்ட. இதை ஆதரிக்கிற தளங்களுக்கு போயிட்டா அப்புறம் அனுபவம் அற்பதம்தான். தளத்தில இருக்கிற படங்களை முப்பரிமாணத்தில மொத்தமா காட்டும். அதை சொடுக்கி நடுவில சக்கரம் இருந்தா அதை சுழட்டி சின்னது/ பெரிசு பண்ணலாம். தேவையான படத்தை சொடுக்கினா அதை பெரிசா காட்டும். தளம் ஒண்ணும் இல்லைன்னாலும் நம்ம கணினியில இருக்கிற படங்களைக்கூட இதே மாதிரி பாக்கலாம். வல்லி அக்கா மாதிரி படங்களை அதிகமா தன் ப்ளாக்ல போடறவங்க இதை செயல் படுத்திக்கலாம். மேலே சொல்லறதை விட ... அனுபவிச்சுப்பாருங்க.

விடியோ டவுன் லோடர். (videodownloader) தளத்தில நல்ல விடியோ ஒண்ணை பாக்கிறோம். அதை இறக்கி சேமிக்க ஆசை இருந்தாலும் இதுக்கு அனுமதி இராது. இப்படிப்பட்ட சமயத்தில உதவுகிறது இது. யூட்யூப், கூகுள் விடியோ, மெட்கேப் போன்ற தளங்களில நல்லா பயனாகும். இமேஜ்-ஜூம் (imagezoom) தளங்களில நாம பாக்கிற படங்களை பெரிசா ஆக்கி பாக்க உதவும். மேலே ஒண்ணும் சொல்ல வேணாமே?

அடுத்த பதிவில இவற்றுக்கான சுட்டிகளை தரேன். பயர்பாக்ஸ் நிறுவினபின் இதை நேரடியா சொடுக்கி நிறுவிக்கலாம். இப்ப இணைய வேகம் ரொம்ப மோசமா இருக்கு.பக்கங்கள் திறக்கலை.

திவாஜி




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants