மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
கீதா சாம்பசிவம்
|
|
|
உள்ளே
இணையப் பாட்டி ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management
|
எல்லாரும் பொதுவாய் அமெரிக்கான்னு சொன்னதும் நினைச்சுக்கறது யு.எஸ். என்னும் நாட்டைத்தான் என்றாலும், மிகப் பெரிய இந்தக் கண்டமானது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு பகுதிகள் கொண்டது. நான் எழுதப் போறதும் என்னமோ யு.எஸ். என்னும் நாட்டைப் பத்தித் தான் என்றாலும் கொஞ்சம் இதன் பூகோளமும் ரொம்ப லேசாய்த் தொடுகிறேன். வடக்கே கனடா, மத்தியில் யு.எஸ்., தெற்கே மெக்ஸிகோ,தென் அமெரிக்காவில் பிரேஸில் அர்ஜென்டினா, சிலி, வெனிஜூலா, பெரு, போன்ற நாடுகள் இருக்கின்றன, என்றாலும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் விரும்பி வருவது இந்த யு.எஸ்.ஸுக்குத் தான்.
விசாவுக்கு விண்ணப்பிக்காமல் திருட்டுத் தனமாய் வருபவர்களும் அதிகம். சென்னையில் உள்ள யு.எஸ். கான்சலேட் அலுவலகம் யு.எஸ்.ஸுக்கு வர விசா கேட்டு வரும் விண்ணப்பங்களால் திணறுகின்றது. ஆன்லைனில் கூட விசா நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களும், தேதிகளும் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாட்டில்? அனைவரையும் கவரும் இந்த நாட்டில் கிடைக்காதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாவிதமான வளங்களும் நிரம்பப் பெற்றது. தேவைக்கு மீறியோ என்று கூட நான் எண்ணுவது உண்டு. இப்போது சற்றுப் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போமா? இறைவனால் படைக்கப்பட்ட கண்டங்களும், அதில் மனிதன் வாழ்வதும் இருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் மற்றக் கண்ட மனிதர்கள் இன்னொரு கண்டத்திற்குக் குடி பெயரும்போதுதான் அது கண்டறியப் பட்டதாய்ச் சொல்லுகிறோம். அந்த வகையில் இந்தக் கண்டம் "கிரிஸ்டோபர் கொலம்பஸ்" என்னும் ஸ்பெயின் நாட்டுக் கடலோடியால் கண்டு பிடிக்கப் பட்டாலும், அவர் நினைத்தது என்னமோ இந்த நாடுதான் "இந்தியா" என. ஆகவே தான் இங்கே இருந்து வந்த "பூர்வ குடிகள்" இந்தியர் எனவே அழைக்கப்பட்டு வருகின்றனர். இது இவ்வாறிருக்க உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்த பிரிட்டனின் கூற்று என்னவென்றால் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பிரிட்டனின் "பிரிஸ்டல்" என்னும் இடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இக்கடலையும், கண்டத்தையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிஸ்டலில் இருந்த ஒரு வியாபாரியான Richard Amerike இவர் John Cabot என்பவருக்குப் பண உதவிகள் செய்து புதிய நாடு கண்டுபிடிக்க உதவியதாக Alfred Hudd என்பவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்கள் பிரிட்டனின் Westminister Abbey யில் இருப்பதாகவும் சொல்கிறார். மேலும் இவர் கூறுவது அதற்கான படங்களை Waldsmuller போட்டிருப்பதாகவும் ஒரு பழைய ஆங்கிலேயப் படத்தை முன் மாதிரியாக வைத்துத்தான் இது வரையப் பட்டதாகவும் சொல்கிறார். இவரின் கூற்று அந்த வியாபாரியின் பெயரில் இருந்துதான் அமெரிக்கா என்று இந்தக் கண்டம் பெயர் சூட்டப் பட்டது என்பதாகும். கொலம்பஸ் முதன் முதல் இறங்கியது தற்சமயம் யு.எஸ். என்று அழைக்கப் படும் நாட்டில் இல்லை. அது பற்றிப் பின்னர் வரும். (இன்னும் வரும்) |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |