அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அன்புக் குழந்தைகளே,
உலகின் மிகப் பெரிய வல்லரசான யு.எஸ்.ஸில் இப்போது அதிபராக ஒரு கறுப்பினத் தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் அல்லவா? இத்தகையதொரு உயர்ந்த நிலையை எட்ட அவர்கள் எத்தனை கஷ்டப் பட வேண்டி இருந்தது என்பதை இதோ இந்த அம்மாளின் உண்மைக் கதைகளில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.ஸில் இம்மாதிரியான பல உண்மைக் கதைகள் குழந்தைகளும் படிக்கும் வண்ணம் எளிமையான ஆங்கிலத்தில் கதைகள் போலச் சுவையோடு புத்தகங்களாக ஆக்கி விற்கப் படுகின்றன. பல குழந்தைகளும் தங்கள் பிறந்த நாள், தங்கள் நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் பிறந்த நாட்களுக்கு இம்மாதிரியான புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் பரிசுக் கூப்பன்களையே விரும்புகின்றார்கள். இந்தக் கூப்பன்களைக் கொடுத்துப் புத்தகக் கடல்களில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இம்மாதிரியான புத்தகக் கடல்களுக்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் பலரையும் காண முடியும். புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தைத் தங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே ஊட்டுகின்றனர். வாங்க முடியாத விலை உள்ள புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். அல்லது ஸ்கேன் செய்து எடுத்துப் போகலாம். இம்மாதிரியான வசதிகளும் புத்தகக் கடல்களில் உள்ளன. கடல் என்று ஏன் சொல்கின்றேன், புரிகின்றதா? உண்மையில் புத்தகக் கடல் தான் அது.
எத்தனை புத்தகங்கள்? உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் புத்தகங்கள் கிடைக்கின்றன. சிறு குழந்தைகளுக்கென உள்ள வண்ணப் புகைப்படங்கள், சித்திரங்கள் நிறைந்த புத்தகங்களில் இருந்து அவரவர் தேவைக்கும், விருப்பத்துக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் கிடைக்கும். அங்கே உள்ளேயே உணவு விடுதிகளும், சாவகாசமாய் அமர்ந்து படிக்கும் வண்ணம் இருக்கைகளும் இருக்கின்றன. இனி, ஹாரியட்டின் வாழ்க்கையைப் பார்ப்போமா?
கீதா சாம்பசிவம்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















