Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    படைப்புகள்

Meet our Authors

அமெரிக்கா

அமெரிக்கா 1
அமெரிக்கா 2
அமெரிக்கா 3
அமெரிக்கா 4
அமெரிக்கா 5
அமெரிக்கா 6
அமெரிக்கா 7
அமெரிக்கா 8
அமெரிக்கா 9
அமெரிக்கா 10
அமெரிக்கா 11
அமெரிக்கா 12
அமெரிக்கா 13
அமெரிக்கா 14
அமெரிக்கா 15
அமெரிக்கா 16
அமெரிக்கா 17
அமெரிக்கா 18
அமெரிக்கா 19
அமெரிக்கா 20
அமெரிக்கா 21
அமெரிக்கா 22
அமெரிக்கா 23
அமெரிக்கா 24
அமெரிக்கா 25
அமெரிக்கா 26
அமெரிக்கா 27
அமெரிக்கா 28
அமெரிக்கா 29

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமெரிக்கா - 13
கீதா சாம்பசிவம்





அத்தியாயம் 13

Slavery - image: Wikipedia

யு.எஸ்.ஸில் அடிமைத்தனம் ஆரம்பித்தது ஆங்கிலேயக் காலனி ஆதிக்கம் ஆரம்பித்த பின்னர் தான். ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஆரம்பித்த இம்முறையில், வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கப் படவில்லை. அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப் பட்டன. வம்ச பரம்பரையாக அடிமைகளாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டனர். ஆரம்பத்தில் வெள்ளை நிறத்தவரும், கறுப்பு நிறத்தவரும் இந்த அடிமை முறையில் ஒரே மாதிரியாக நடத்தப் பட்டாலும், காலப் போக்கில், அதாவது 18-ம் நூற்றாண்டில் நீதிமன்றம், கறுப்பு ஆப்பிரிக்கர்களை மட்டும் அதிக அடிமைகளாகவும், அதை அடுத்து ஆப்பிரிக்க வம்சாவளியினரும், பின்னர் தேவைப்பட்டால் பூர்வகுடிகளையும் அடிமைகளாக்கிக் கொள்ளலாம் என ஆணை பிறப்பித்தது.

இதன் மூலம் அதிகப் பயன் அடைந்தது தென் மாநிலங்களே ஆகும். அங்கேயே அதிக அளவில் விவசாயம் நடைபெற்றது. பண்ணைகளும் அங்கேயே அதிகமாய் இருந்தன. முக்கியமாய் புகையிலை அங்கே அதிகமாய் உற்பத்தி செய்யப் பட்டது. ஆகவே வட பகுதியை விட தென் பகுதியில் அதிக அடிமைகள் இருந்தனர். 1654-ம் வருடத்தில் இருந்து, 1865-ம் ஆண்டு வரையில் அடிமைத் தொழில் சட்டபூர்வமாக இருந்து வந்தது. இதில் பெரும்பாலும் கறுப்பினத்தவரே அடிமையாக இருந்து வந்தாலும் அங்கங்கே சில பணக்கார பூர்வகுடிகளும், மிக மிகச் சில கறுப்பு அமெரிக்கர்களும் அடிமைகளைச் சொந்தமாய் வைத்திருந்தனர்.

Slavery - image: Wikipedia

அப்போது மொத்தம் இருந்த 15 மாநிலங்களில் உள்ள 12 மில்லியன் மக்களில் 4 மில்லியன் மக்கள் அடிமைகளாய் அதிகாரபூர்வமாய் இருந்தனர். ஒரு அடிமையில் இருந்து பல அடிமைகள் வரை அனைவரும் வைத்திருந்தனர். அதிலும் தென் மாநிலங்களில் இருந்த பெரும் பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்கள் பலரும் பெரும் பணம் படைத்தவர்களாயும், அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருந்து வந்தனர். ஆகவே தென் மாநிலங்களில் மொத்தமுள்ள அடிமைகளின் எண்ணிக்கையில் 95%-க்கு மேல் இருந்தனர். ஆனால் வட மாநிலங்களிலோ 2% கூட இல்லை.

ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பாலேயே அதிகப் பணக்கார நாடாக ஆன யு.எஸ்.ஸில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னரே அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப் பட்டது. அதோடு இல்லாமல், அதிகமாய் பருத்தி உற்பத்தி செய்த தென் மாநிலங்கள், இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளின் போட்டியையும் சந்திக்கவேண்டி வந்தது. வட மாநிலங்களின் தொழிலதிபர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஆரம்பித்தார்கள். ஆகவே தாற்காலிகமாய் தென் மாநிலங்கள் தங்கள் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தன. அதுவும் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் தொழில் புரட்சி ஏற்பட்டதால் அமெரிக்கப் பொருளாதாரம், மிகவும் உயர்ந்ததும் அடிமைத்தனம் ஒழிய ஒரு காரணம்.

இந்த அடிமைகள் பற்றி மேலும் பார்ப்போம். அதிலும் இந்த அடிமைத் தனம் ஒழியப் பாடுபட்ட ஒரு பெண்மணியின் கதையையும் பார்ப்போம். ஹாரியட் டப்மேன் என்ற அந்த ஆப்பிரிக்க அடிமைப் பெண் எவ்வாறு தன் சகோதர அடிமைகளைக் காப்பாற்றி வட மாநிலங்களுக்குக் கொண்டு சேர்த்தாள் என்று வரும் நாட்களில் காண்போம்.

Harriet Tubman - image: Wikipedia

தொடரும்...



             

அத்தியாயம் 12 அத்தியாயம் 14

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button