Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    படைப்புகள்

Meet our Authors

அமெரிக்கா

அமெரிக்கா 1
அமெரிக்கா 2
அமெரிக்கா 3
அமெரிக்கா 4
அமெரிக்கா 5
அமெரிக்கா 6
அமெரிக்கா 7
அமெரிக்கா 8
அமெரிக்கா 9
அமெரிக்கா 10
அமெரிக்கா 11
அமெரிக்கா 12
அமெரிக்கா 13
அமெரிக்கா 14
அமெரிக்கா 15
அமெரிக்கா 16
அமெரிக்கா 17
அமெரிக்கா 18
அமெரிக்கா 19
அமெரிக்கா 20
அமெரிக்கா 21
அமெரிக்கா 22
அமெரிக்கா 23
அமெரிக்கா 24
அமெரிக்கா 25
அமெரிக்கா 26
அமெரிக்கா 27
அமெரிக்கா 28
அமெரிக்கா 29

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமெரிக்கா - 8
கீதா சாம்பசிவம்





அத்தியாயம் 8

Supermarket - image: Wikipedia

அமெரிக்கக் கண்டத்தில் உள்ள யு.எஸ். நாட்டைப் பற்றி நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கே நம் இந்தியாவில் இருப்பதைப் போல ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாகக் கடைகள் எதுவும் கிடையாது. எல்லாமே ஒரே கூரையின் கீழே கிடைக்கும்.

Supermarket - image: Wikipedia

சூப்பர் மார்க்கெட் என்று அழைக்கப் படும் இவை ஏக்கர் கணக்கில் பரந்து காணப் படும். நமக்குத் தேவையான அன்றாட உணவுப் பொருட்களான காய்கறிகள், பழ வகைகள், மற்றும் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய்கள், உடை வகைகள், குளிராடைகள், இல்லத்தை அலங்கரிக்கும் பொருட்கள், குழந்தை உணவு வகைகள், பேக்கரி வகைகள், அசைவ உணவு வகைகள், பால், தயிர், வெண்ணெய், எண்ணெய் போன்ற பொருட்கள், வீட்டுக்குத் தேவைப்படும் அடுப்புகள், மைக்ரோவேவ் அவன், எலக்டிரிக் ஹீட்டர், காபிமேக்கர், சமையல் பாத்திரங்கள்,

Supermarket - image: Wikipedia

துணி துவைக்கும் சோப், டிடர்ஜெண்ட் பவுடர், அலங்காரப் பொருட்கள், கட்டில், பீரோ, மேஜை, நாற்காலி போன்றவைகள், எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ரேடியோ, ஆடியோ, டி.வி.டி., போன்றவற்றில் இருந்து தோட்டக்கலைப் பொருட்கள், உரங்கள், விதைகள், வீடு கட்டத் தேவையான பொருட்கள், வீடு வெள்ளை அடிக்கும் பெயிண்ட் வகைகள், டிஸ்டெம்பர்வகைகள் என அனைத்துப் பொருட்களும் ஒரே சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.

Supermarket - image: Wikipedia

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைப்புக் கொடுத்து அவற்றின் கீழ் அந்தக் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரும் அனைத்துப் பொருட்களும் தரவாரியாகவும், ரகவாரியாகவும் பிரித்து வைக்கப் பட்டிருக்கும். நம் ஊரில் போல் பேரம் பேசி வாங்குவது என்பதே கிடையாது. பொருளை எடுத்துக் கொண்டு, பொருளில் குறிப்பிட்டிருக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கி வர வேண்டும். நமக்குப் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுக்கலாம். முழுப் பணமும் கிடைத்து விடும்.

Plymouth colony - image: Wikipedia

2-வது வெற்றிகரமான ஆங்கிலேயக் குடி இருப்பு "ப்ளைமவுத் காலனி" என அழைக்கப் பட்டது. இது 1620-ல் ஏற்பட்டது. இங்கு வந்து குடியேறியவர்களைப் புனித யாத்திரீகர்கள் என அழைத்தனர். மதக்கலவரம் ஆரம்பித்த உடனே ஹாலந்துக்குப் போன ஆங்கிலேயர்கள், தங்கள் ஆங்கிலேய அடையாளத்தைத் தொலைத்து விடுவோமோ என அஞ்சியதால், அங்கிருந்தும் கிளம்பிப் புது உலகம் காண எண்ணி, அமெரிக்கக் கண்டம் வந்து சேர்ந்தனர். இங்கிலாந்திலேயே இருந்த ஆங்கிலேயச் சீமான்களின் பண உதவியுடன் "மே ஃப்ளவர்' என்னும் கப்பலில் 102 யாத்திரீகர்கள் 1620 செப்டெம்பர் மாதம் கிளம்பி வந்தனர்.

Mayflair landing - image: Wikipedia

இவர்களின் வரவுக்குப் பின்னரே அமெரிக்காவின் பூர்வ குடி மக்களின் புராதனக் கலாசாரம் முற்றிலும் அழிந்து போனது. அமெரிக்கக் கண்டம் பூராவும் கிறித்துவ மதம் பரவியது. பூர்வ குடிகள் தங்களுக்குக் கிடைத்த பண உதவியில் இருந்து மீண்டு வருவதற்குள் தங்கள் கைகளில் "பைபிள்" வந்து விட்டது எனச் சொல்ல ஆரம்பித்தனர்.

Thanksgiving - image: Wikipedia

டச்சுக்காரர்களிடம் இருந்தது நியூ நெதர்லாண்டு என்று சொல்லப் படும் தற்போது நியூயார்க் நகரம் இருக்கும் மாகாணம். அதை டச்சுக்காரர்களிடம் இருந்து ஆங்கிலேயர் கைப்பற்றி, அதற்குப் "Province of Newyork" என்று 1644-ல் பெயர் மாற்றம் செய்தனர். இத்தோடு நில்லாமல் ஆதிக்கம் அடைவதில் தீவிரமாயிருந்த ஆங்கிலேயர் டச்சுக்காரர்களின் "New Sweden" என்னும் பகுதியையும் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். பென்சில்வேனியாவின் ஒரு பகுதியாக இருக்கும் இது தற்காலத்தில் "Delaware" என்று அழைக்கப் படுகிறது. அடுத்து 17, 18-ம் நூற்றாண்டுகளின் ஆங்கிலேய ஆட்சியைப் பற்றித் தொடரும்.

தொடரும்...

அத்தியாயம் 7 அத்தியாயம் 9

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button