Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    படைப்புகள்

Meet our Authors

அமெரிக்கா

அமெரிக்கா 1
அமெரிக்கா 2
அமெரிக்கா 3
அமெரிக்கா 4
அமெரிக்கா 5
அமெரிக்கா 6
அமெரிக்கா 7
அமெரிக்கா 8
அமெரிக்கா 9
அமெரிக்கா 10
அமெரிக்கா 11
அமெரிக்கா 12
அமெரிக்கா 13
அமெரிக்கா 14
அமெரிக்கா 15
அமெரிக்கா 16
அமெரிக்கா 17
அமெரிக்கா 18
அமெரிக்கா 19
அமெரிக்கா 20
அமெரிக்கா 21
அமெரிக்கா 22
அமெரிக்கா 23
அமெரிக்கா 24
அமெரிக்கா 25
அமெரிக்கா 26
அமெரிக்கா 27
அமெரிக்கா 28
அமெரிக்கா 29

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமெரிக்கா - 6
கீதா சாம்பசிவம்





அத்தியாயம் 6

Hindu Temple in America - image: Wikipedia

இந்த சமையல் பத்தி நிறையச் சொல்லணும் தான். ஆனால் நடு நடுவிலே சொல்லிக்கிறேன். இப்போ இங்கே கிடைக்கும் மற்ற செளகரியங்கள் பத்திப் பார்ப்போம். எல்லா வேலையும் நாமே தெரிஞ்சு வச்சுகிறது தான் டாலருக்கு நல்லது. கொஞ்சமாவது கையில் இருக்கும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால் சொத்தை எழுதி வைக்கணும். ஆகவே சொந்த சமையல் நல்லதுன்னாலும் சில இந்தியன் க்ரோசரியில் இட்லி, மசால் வடை, மசால் தோசையில் ஆரம்பித்து வட இந்திய உணவு வகைகள் வரை அனைத்தும் ஃப்ரோசன் ஆகக் கிடைக்கிறது. உங்களோட ஜீரண சக்தி நல்லா இருந்தால் கவலையே இல்லை. ஜமாய்க்கலாம். அல்லது சில பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இந்திய உணவு தயாரித்து விற்பனைக்கும் கொடுக்கிறார்கள். நமக்குத் தேவைப்படும் நேரத்துக்குக் குறைந்தது 2 மணி நேரமாவது முன்னால் சொல்லி விட்டால் போதும். நிச்சயமாய் உணவு விடுதியை விட விலை குறைச்சல்தான். டோர் டெலிவெரி சிலர்தான் செய்கிறார்கள், மற்ற இடங்களில் நாமே போய் வாங்கி வந்து விடலாம். நம் நாடு போலவே விசேஷங்களுக்குச் சமைத்துக் கொடுக்கவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே வெளி நாட்டில் இருப்பது போன்ற உணர்வே உங்களுக்கு இருக்காது. கோவில்கள் அனைத்திலும் அநேகமாய் இலவச உணவு ஞாயிற்றுக் கிழமைகளில் கிடைக்கின்றன. இங்கே மெம்பிஸில் அம்மாதிரி இல்லை என்றாலும் அநேகம் கோவில்கள் கொடுக்கின்றன.

Hindu Temple in America - image: Wikipedia

பெரும்பாலும் தென் இந்தியக் கோவில்கள் ஆந்திரர்களாலேயே நிர்வகிக்கப் படுகின்றன. சில கோவில்களில் மாறுபட்டிருக்கலாம். குஜராத்தியர்களும் பெரும்பாலாகக் கோவில்களை நிர்வகிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோவில்களும், ஸ்வாமி நாராயண் கோவில்களும் குஜராத்தியர் முற்றிலும் நிர்வகிப்பதோடு, இலவசமாய்ச் சாப்பாடும் கொடுக்கின்றனர். பெருமளவில் ஹோமங்கள், யாகங்கள் போன்றவையும் நடத்தப் படுகின்றன. நிதானமாய் நல்லாத் தரிசனம் செய்யலாம். எல்லாக் கடவுளரும் பாகுபாடு இல்லாமல் ஒரே பெரிய ஹாலிலேயே இடம் பெற்று விடுகின்றனர். அநேகமாய் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் அனைவரும் திருப்பதியில் இருந்தே வருகின்றனர். ஹூஸ்டன் மீனாட்சி கோவில் மட்டும் விதி விலக்கு. அங்கே மதுரையைச் சேர்ந்த பட்டர்தான் இருக்கிறார்.

14-ம் லூயி காலத்தில் ப்ரெஞ்ச் காலனிகள் நன்கு நிர்வகிக்கப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதிகம் பேர் காலனிகளில் வசிக்க முன்வரவில்லை. தவிர எப்போதும் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக் காரருக்கும் உள்ள பகை உணர்வு இந்தக் காலனி ஆதிக்கத்திலும் ஏற்பட்டது. 1629-ல் ஒரு முறையும், 1632-ல் ஒரு முறையும் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக் காரருக்கும் சண்டை ஏற்பட்டு "க்யூபெக்" பிடிக்கப் பட்டது. சாம்ப்ளேன் வேறு இடம் தேடிப் போனார். பின்னர் வந்த உதோப்பிய கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மிஷனரியில் இருந்து பிரசாரகர்களைக் கொண்டு வந்து உள்ளூர் மக்களைப் பெருமளவில் மதம் மாற்றினார்கள். இதை "Iraquois" என்ற பெயருள்ள வேறு இனத்தவர் எதிர்த்தனர். பிரான்ஸில் இருந்து 15 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 700 பேர் இங்கே அரசால் அனுப்பப் பட்டனர். உள்ளூர் மக்களுடன் திருமண உறவும் அனுமதிக்கப் பட்டது. இது ஹென்றி ஹட்சன் தன் வியாபாரத்தை விஸதரிக்கும் வரை நடந்தது. 1670-ல் ஹட்சனின் "பே கம்பனி" பிரான்ஸ் வியாபாரிகளின் வியாபாரத்துக்கு முடிவு கட்டியது. ப்ரெஞ்சுக் காரர்கள் தெற்கே நகர ஆரம்பித்தனர். 1682-ல் "ஒகையோ"வும் "மிஸ்ஸிஸிப்பி" பள்ளத்தாக்கும் கண்டு பிடிக்கப் பட்டன. "கல்ஃப் ஆப் மெக்ஸிகோ" வரை உள்ள பகுதி ப்ரெஞ்சுக்காரருடையது என அறிவிக்கப் பட்டது. "லூசியானா" என்ற பெயரும் அப்போது தான் வைக்கப் பட்டது. இனி அடுத்து "சூரியன் என்றும் மறையா ஆட்சியைத் தந்த ஆங்கிலேயர் ஆதிக்கம்!".

(இன்னும் வரும்)

தொடரும்...

அத்தியாயம் 5 அத்தியாயம் 7

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button