தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- அமெரிக்கா - 1
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 1
அமெரிக்க சுதந்திர தினம்
ஜூலை 4-ம் தேதியான இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. முதலில் போய்ப் பார்க்கவேண்டும் என நினைத்தோம், ஆனால் வீட்டில் இருந்து பார்த்தாலே தெரிகிறது. ஒரு வாரமாகவே வெடிக் கொண்டாட்டங்கள் தான். பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்ததைக் குறித்து ஆச்சரியப் படுவதா? புரியவில்லை. முதலில் சில நாடுகள் மட்டும் பிரிட்டனிடம் இருந்து வந்தது. அவை விடுதலைப் போரில் பிரிட்டனைத் தோற்கடித்துவிட்டுப் பின் ஒன்று சேர்ந்தன.
படம் - நான்கு முக்கிய அமெரிக்க ஜனாதிபதிகள் (இடமிருந்து வலம்): ஜார்ஜ் வாஷிங்க்டன், தாமஸ் ஜெஃப்பர்சன், தியொடோர் ரூஸ்வெல்ட், ஆப்ரஹாம் லிங்கன்
13 மாநிலங்கள் அதில் அநேக வட மாநிலங்கள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தன. நியூ நெதர்லாந்து என்று அழைக்கப் பட்டு வந்த இடம் தான் "நியூயார்க்" என பிரிட்டனால் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இங்கு வந்து குடியேறியவர்கள் என்றாலும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை யாரும் விரும்பவில்லை. முதல் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. 1775 ஜூன் 14-ம் தேதியில் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் சுதந்திரப் போர் ஆரம்பித்தது. ஃப்ரெஞ்சுக் காரர்களின் உதவியுடன் போர் நடைபெற்றது. இதற்கிடையில் "தாமஸ் ஜெஃப்பர்சன்" என்பரால் எழுதப் பட்ட விடுதலைப் பிரகடனம் ஜூலை 4-தேதி 1776-ம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
போரில் பிரிட்டன் படுதோல்வி அடைந்து, பிரிட்டனின் ஆதரவாளர்கள் அனைவரும் வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்தார்கள். இருந்தாலும் சரியான அரசு ஏற்படுத்தச் சில வருடங்கள் பிடித்தன. 1783 வரை பிரிட்டன் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பின்னர்தான் 1789-ம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதவி ஏற்றார். முதலில் நியூயார்க் நகரம்தான் தலைநகரமாக இருந்து வந்தது. வடமாநிலங்களில் கறுப்பு இனத்தவரை அடிமையாக வைக்கும் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப் பட்டது. 1800-ம் ஆண்டு தான் தற்போதைய தலைநகரமான "வாஷிங்டன்" நகரத்திற்கு அரசு குடி பெயர்ந்தது.
ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினத்தன்று எழுதப் பட்டது, இந்திய சுதந்திரத் திருநாள் நெருங்கும் இவ்வேளையில், வல்லரசு நாடுகளில் முதன்மையான யு.எஸ்.ஸின் சுதந்திரப் போராட்டம் பற்றியும் குழந்தைகளான உங்களுக்கு அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.
(இன்னும் வரும்)
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















