சிந்தைக்குச் சிறிது சிற்றுண்டி
கவிதைக் குயில்
கவிதைக் குயில்
பொது அறிவு மடமையானது. ஓழுங்கற்ற அறிவு உபயேகம் இல்லாதது.
வாழ்க்கையில் பிரியமான நண்பர்களைச் சந்தித்துக் கிடைத்த அன்பை விட, தாயின் விவரிக்க முடியாத அன்பை யாரலும் பெற்றுத் தர முடியாது.
பொறுமை கசக்கத்தான் செய்யும் ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்.
கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும் உண்மைகளைக் கண்டு வாழ்த்த வேண்டும்.
சில்லறையாய் வாழ்வதை விட சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.
ஆசைகளை எதிர்நோக்கிச் செல்வதால் நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.
போதும் என்றே வாழ்ந்தால் என்றும் ஆரோக்கிமாய் வாழ முடியும்.
மதத்தை விட மனதைக் கண்டுகொள்ள முயற்சி செய்தால் பிரிவினை என்பது கிடையாது.
உன்னை அழிக்க வந்தால் அன்பைக் கொடு; அவன் தன் பிழை உனருவான்.
புன்னகை ஒரு நோய் தீர்கும் மருந்து; அதை முடியும் வரை..தொடர்.
உன்னைப் பிழை சொல்கின்றான் என்று கவலைப்படு முன் நீ... என்ன செய்தாய் என்பதை உணர்ந்து விடு.
வாழ்க்கையில் பயம் தேவை; வாழ்க்கையே பயமாகக்கூடாது.
சீனு தாத்தா
சிந்தனை துளிகள்
தங்களது மிக மிக முக்கியமான என்றுமே மறக்கக் கூடாத கருத்தை என்னுடைய மிக நெருங்கிய நண்பன் (பல வருஷங்களுக்கு முன் இறந்து விட்டான்) என்னிடம் அடிக்கடி சொல்வான் 'Shrini, be patient. don't forget 'Patience Is The Mother Of All Virtues". அந்த நான்கே வார்த்தைகளில் எவ்வளவு பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது என்பதைப் போகப் போக நான் நன்கு உணர்ந்து கொண்டேன். என் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் அவ்வருமையான வார்த்தைகளைச் சொல்லி புத்திமதி கூறலானேன் (இக்காலக் குழந்தைகள் ஆங்கிலத்தில் சொன்னால் தானே புறிந்து கொள்கிறார்கள்). அந்த வார்த்தைகளைத் தமிழிலே சொன்னால், "பொறுமையே எல்லா நற்குணங்களுக்கும் தாய்".
அப்படிச் சொல்லப் போனால் தமிழில் இல்லாத பழமொழிகளா? தற்சமயத்திற்கு ஞாபகத்திற்கு வருவது "பொறுத்தார் பூமியாள்வார்" ஒரு நல்லவரை 'பொறுமையைப் பூஷணமாகக் கொண்டவர்' எனலாம். இப்படி இப்படி எத்தனையோ உள்ளன. தங்களது அருமையான மடலுக்கு எனது மனமார்ந்த வந்தனம்.
பி.கு. இந்த முதியவனின் விசித்தமான குணங்களைப் பற்றித் தங்களுக்குப் போகப் போகத் தெரியும். இந்த மடலை எழுதி முடித்த பின்னர்தான் எனது நண்பன் கூறிய மற்றொரு புத்திமதி ஞாபகத்திற்கு வந்தது. அது, "Count Ten Before You Act". அதை இப்படி விளக்கலாம், 'முன்கோபத்திலோ அல்லது அவசரத்திலோ மனதில் தோன்றும் எதையும் செயலாக்குவதில் இறங்கி விடாதே. உடனே ஒன்றிலிருந்து பத்து வரை நீ எண்ணத் தொடங்கு. பத்து வரை நீ எண்ணுவதற்குள் உன் கோபமோ அவசரப் புத்தியோ அடங்கி விடும். அப்பொழுது உனது புத்தி நிதானத்தில் வேலை செய்யும்".
ஆகிரா
அன்புள்ள சீனு மாமா,
"மிருகங்கள் நடத்தும் சர்க்கஸ்" எனும் ஆங்கிலக் கதையின் தமிழாக்கத்தை என் தந்தை ஒரு சமயம் தன் அலுவலக நூலகத்திலிருந்து கொண்டு வந்தார். அதில் யானைக்கு அடிக்கடி கோபம் வந்துவிடும். அது அவ்வாறு கோபமுற்று அழிவுச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன் அந்த சர்க்கள் நடத்தும் மிருகங்களுன் ஒன்றான குரங்கு யானையின் கோபத்தைத் தணிக்க ஒன்று, இரண்டு.. என்று பத்து வரை எண்ணும். முழுக் கதையும் ஞாபகமில்லை. 1964ஆம் வருடம் படித்தது.
அன்புடன்
ஆகிரா





Your Feedback









