ஓவியம் கற்றுக்கொள்ளுங்கள்
கோபி
1) முதலில் கோடுகள், வளைவுகள், வட்டம் ஆகியன வரைந்து பழக வேண்டும்.
2) பிறகு ஒரு ஓவியத்தையோ படத்தையோ மாதிரியாய் வைத்து வரைய ஆரம்பிக்கலாம்.
3) மாதிரியைப் பார்க்கும் போது அதிலுள்ள வட்டங்களும் சதுரங்களும், கோடுகளும் மட்டுமே கண்ணுக்குத் தெரிய வேண்டும்.
4) மாதிரியிலுள்ள அடிப்படைக் கோடுகளை வெற்றுக் கண்ணால் உணர முடியாதவர்கள் மாதிரியை சம அளவுள்ள கட்டங்களாகப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு கட்டத்திலும் அடிப்படைக் கோடுகள் தெரியவரும், அதே போல வரைந்து பழகலாம்.
5) கோட்டு ஓவியத்தின் மிகப்பெரிய சவாலாக இருப்பது அதன் அளவீடு (Proposion). இதில் தேர்ந்திட "சம அளவுள்ள கட்டங்கள்" முறை கைகொடுக்கும்.
6) கோட்டு ஓவியங்களுக்கு அடுத்த படியாய் அதற்குக் கருப்பு வெள்ளையில் நிழல் (shade) கொடுப்பதில் தேர்வு பெற வேண்டும்.
7) நிழலில் கருப்பின் திண்மை அதிகமாக ஆக ஓவியத்தின் ஆழம் (depth) அதிகமாகும். இதை மனதில் கொண்டு நிழல் வெளிச்ச விளைவுகளைக் கருப்பு வெள்ளை ஓவியத்தில் கொண்டு வரலாம்.
8) அடுத்ததாக, வண்ண ஓவியங்களை முயலும் முன், மாதிரியிலுள்ள வண்ணங்கள், வண்ணக் கலப்புகளைத் தனியே பிரித்துப் பார்ப்பதில் தேர்ச்சி பெற வேண்டும்.
9) பல்வேறு வண்னங்களின் கலவை எவ்வித விளைவைத் தரும் என்பதை, பல்வேறு அளவில் வண்ணங்களைக் குழைத்து, கலந்து வரைத் தாளில் இட்டு மாதிரியில் காணப்படும் வண்ணங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
10) மாதிரியிலுள்ள வண்ணமும் கலவை வண்ணமும் பொருந்தும் போது அதே வண்ணத்தை நாம் வரைந்த கோட்டு ஓவியத்தில் பூசினால் மாதிரியைப் போலவே நமது ஓவியம் மிளிரும்.
இது போலவே வரைத் தாளில் மட்டுமல்லாது துணி, கண்ணாடி போன்ற பல்வேறு ஊடகங்களில் ஓவியம் வரைய முயற்சிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வண்ணங்கள் தனித் தனியே கிடைக்கின்றன.
நினைவில் வந்த சில நுட்பங்களை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். மேலும் என் அனுபவத்தில் தோன்றும் வழிமுறைகளளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இக்குறிப்புக்களைக் காணும் ஓவியர்கள் இந்த இழையில் அவர்கள் கவனித்த நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே.
ப்ரியமுடன்,
கோபி
ஓவியர் கோபி அவர்களின் இணையதளம்:
Here
To read contents in Engliish ஆங்கிலத்தில் இக்குறிப்புக்களைப் படிக்க செல்க
Learn sketching
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















