Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 


Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பாப்பாவோட செல்லம்
கார்த்திக்



திவ்யாவின் புது பாட்டு

நிலா நிலா ஓடி வா
பாப்பாவை பாக்க வா
நில்லாமல் ஓடி வா
பாப்பாவை பாக்க வா
மலை மீது ஏறி வா
பாப்பாவை பாக்க வா ...

இது எப்படி?

எதோ குறும்பு செய்தால் என்று என் மனைவி அடிக்கப் போவது போல் கையை ஓங்க, அதற்கு திவ்யா, "ஆனாம். அடிக்காத. பாப்பா பாவம்" என்று சொல்லுகிறாள். இதற்குப் பிறகு அவளை அடிக்க மனம் வருமா?

"நாய் எப்படி கத்தும்?"
"பவ் பவ்"
"பூனை எப்படி கத்தும்?"
"மியாவ்"
சரி. திவ்யா எப்படி கத்துவா?
"ஆனாம் (நல்லா சத்தமா இதை சொல்லுவா)"

நேற்று மாலை கண்ணில் எதோ தூசி விழுந்து கண்ணில் லேசாக கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த திவ்யா, "அப்பா அழாத. தொடச்சிக்க." என் தங்கமணியிடம் போய் "அப்பா பாவம்", அப்ப என் தங்கமணியோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்?

நான்: குட்டிமா, அப்பாக்கு எத்தனை கை?
திவ்யா: ரெண்டு கை
நான்: பாப்பாக்கு எத்தனை கை
திவ்யா: மூணு கை
நான்: இல்லடா செல்லம், இது ஒரு கை, அது ஒரு கை, ஆக மொத்தம் ரெண்டு கை
திவ்யா: இல்ல மூணு கைதான்
நான்:?

(இதுக்கு பேருதான் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்றதா?)

ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு என்னிடம், அப்பா, கோபப் படாதப்பா. சாரிபா. பாப்பா இனிமே குறும்பு பண்ண மாட்டேன். சாரிப்பா.

இதேபோல், மற்றொரு நாள், அவள் அம்மாவிடம் எதோ கேட்டு இருக்கிறாள். வேலை மும்முரத்தில் அவள் கண்டுகொள்ளவில்லை, உடனே "ப்ளீஸ்மா, பாப்பா பாவம், ப்ளீஸ்மா, கொடுமா" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இதை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. அவளாகவே கற்றுக்கொண்டு இருக்கிறாள்.

அவள் மிக குஷியாக இருக்கும் பொழுது, எங்களை அவள் தோள் மேல் சாய்த்துக் கொண்டு , "செல்லம் நீ, வைரம், தங்கம், நீ பாப்பாவோட செல்லம்" என்று கொஞ்சுவாள். இதே அவளுக்கு விருப்பம் இல்லையென்றால், அவளை தூக்கக் கூட விடமாட்டாள், பாப்பாவ தூக்காத விட்டுது என்று சொல்லி விட்டு ஓடி விடுவாள்.



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button