தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- பாகம்பிரியாளின் கவிதை!
காயத்ரி பாலசுப்பிரமணியன்
தல விருட்சம்!
முகம் காட்டிய நாள் முதலாய்முழுப் பராமரிப்பில் வளர்ந்தது.
விருட்சத்தின் கதை வழிவழியாய்
வம்சச் சொத்தாய், பொக்கிஷயமாய்.
தேவாதி தேவர்களும், மூவரும் அவர்
தேவியரும் தேடியது இதைத்தான்.
வேனலிலும், வாடைக்காற்றிலும்
வளைந்து கொடுத்து இடம் பிடித்தது.
மரம் மௌனமாய் இருந்தாலும்
மாளாமல் பல மொழி பேசும் பறவைகள்.
போதி மரம் போல் புத்திசொல்லும்
மரத்தின் கீழ் சில பஞ்சாயத்தும் உண்டு!
அடிமரத்தில் அமர்ந்து எழுதிய காப்பியங்களுக்கு
அழகான அட்சதையாய் இலைத்தூவல்!
நம்பிக்கையும், நூலும் சேர்ந்து மரத்தின்
இடையே மொத்தமாய் பருத்துப் போனது!
யுகம் பல கண்டதாம் சொல்கிறார்கள்.
ஆனால் மரம் கண்டவரெல்லாம் இளமை!
பிரார்த்தனைக்கு கிடைத்த பரிசாய்
பழுப்பேறிய தொட்டில்கள் பல!
காற்றுடன் நீங்களும் சேர்ந்து வழி விடுங்கள்!
காதல் தலவிருட்சத்தைக் காண வருபவர்க்கு!
அன்பே
நான் எப்போதும் பசித்திருக்கிறேன்,நான் எப்போதும் தனித்திருக்கிறேன்,
நான் எப்போதும் விழித்திருக்கிறேன்.
நீ எனக்கு என்ன பதவி தரப் போகிறாய்?
முதல் ஆசனம்!
உலகமென்றால் என்ன வென்று தெரியாத போது,உள்ளிருக்கும் என்னை யோகியாக்கினாள்
என் அருமை என்னை!
ஆம் கர்ப்பாசனம்-என் முதல் ஆசனம்!
நானும் ஒரு சிப்பிதான்!
உன்னைப்பற்றிய ஓர் நினைவுஉட்புகுந்தவுடன் அகப்பேழை
வாய்மூடி உறுத்தி உறுத்தி
உருவாகியது கவிதை முத்து.
நானும் ஒரு சிப்பிதான்!
அம்மாவும் ஆலமரந்தான்!
அவளைப்பற்றிய நினைவு விழுதுகள்இறங்கும் போது அன்பு கூடுகிறது.
அம்மாவும் ஆலமரந்தான்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














